வெள்ளி, 2 அக்டோபர், 2020

*🌟ஆசிரியர்களின் வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?*

*🌟ஆசிரியர்களின் வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?*
   
 
INCOME TAX OF INDIA

How to check our TDS details in income tax website

உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?

 1.login e-Filing page

 2.my account—–view form 26 AS—–Conform—-agree + proceed

 3.view tax credit—–select assessment year—-view as select HTML —-view / download—–export as PDF

 மேலும் விவரங்களுக்கு

Click below and watch this video  CLICK BELOW LINK.
வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்க.
 

அக்டோபர் 2,வரலாற்றில் இன்று.பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 2,
வரலாற்றில் இன்று.

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று.

இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!

 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறைய பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக்கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டா உன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருதுநகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்
கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2ஆம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

அக்டோபர் 2,வரலாற்றில் இன்று.முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் இன்று (1904).

அக்டோபர் 2,
வரலாற்றில் இன்று.


முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் இன்று (1904).

மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக் கரையில் தொலைந்து போனார். இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களால் சிலகாலம் வளர்க்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது மைனராக இருந்தும் சிறை புகுந்தார். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டார். ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.

உடல் நலமில்லாத மகளைப் பார்க்க பரோலில் வந்தார்; மகள் இறந்துவிடவே,  மீண்டும் சிறை புகுந்தார். பிரதமராக இருந்தபோது தனது மகன், கல்லூரியில் சேர பரிந்துரை தர மறுத்துவிட்டார்.

சாதி அடையாளம் அற்றவர். பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரைத் துறந்து ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். ‘சாஸ்திரி’ என்கிற பட்டம் அவர் காசி, வித்யா பீடத்தில் படித்துப் பெற்றது.

சிறந்த நிர்வாகி. ஜி.பி.பந்த் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பெண் நடத்துநர்களை கொண்டு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்தபோது லோக்பாலை அமல்படுத்த அப்போதே அவர் ஆசைப்பட்டார்.

காமராஜர் திட்டத்தால் பதவி விலகிய பின்னர் பருப்பு, காய்கறிகளை உணவில் குறைக்கச் சொன்னார். சேமிக்கிற அளவுக்கு சம்பளம் வருவது தெரிந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது சொந்தமாக ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருந்தார். அவர் இறந்தபோது காருக்கு கட்ட வேண்டிய கடன் பாக்கி இருந்தது.

போர்க்காலத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’ (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) என்கிற கோஷத்தை தந்தார். தேசிய பால்பண்ணை வளர்ச்சித்துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார்.

நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவை இவர் மீதான விமர்சனங்கள்.

கட்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நிலத்தகராறில் அமைதி யாக ஒப்பந்தம் செய்துகொண்டார். சீனப்போரில் இந்தியா தோற்றிருந்தது வேறு பாகிஸ்தானுக்கு உத்வேகம் தந்திருந்தது. காஷ்மீரில் கலவரங்கள் சூடு பிடித்தன. சாஸ்திரி தீரத்தோடு வழிகாட்டினார். சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து லாகூர்வரை இந்திய ராணுவம் பாய்ந்த போது சாஸ்திரியை உலகம் அண்ணாந்து பார்த்தது.

தாஷ்கண்ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது!

அக்டோபர் 2,வரலாற்றில் இன்று.நம் தேசப்பிதா காந்திஜி பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 2,
வரலாற்றில் இன்று.

நம் தேசப்பிதா காந்திஜி பிறந்த தினம் இன்று.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். 

பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 


1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

 அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.

ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்‌ கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922  ஆம் ஆண்டில் தொடங்கினார். இளைய தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922இல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

போட்டி நடைபெறும் மொழி ஆங்கிலம் மற்றும் இந்தி!இருமொழிக்கொள்கை என்பது இதுதானா?!தாய்மொழிவழிக் கல்வியின் பாசம் இவ்வளவுதானா?!

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த புதிய வருமான வரியை பின்பற்ற விருப்பமா? ~ வரிகள் ஆணையம் வேண்டுகோள்…

வியாழன், 1 அக்டோபர், 2020

தமிழகரசு விதிகளை நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது கோரிக்கையல்ல!அரசுவிதிகளை அரசுசொல்கிறபடி செய்ய வேண்டிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரசுவிதிகளை மதித்து செயல்பட வேண்டும் எனும் நினைவூட்டல்!வலியுறுத்தல்! அரசு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது எனும் குற்றச்சாட்டு!ஆதங்கம்!

தமிழகரசு விதிகளை நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும்  என்பது கோரிக்கையல்ல!அரசுவிதிகளை அரசுசொல்கிறபடி 
செய்ய வேண்டிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரசுவிதிகளை 
மதித்து செயல்பட வேண்டும் எனும் நினைவூட்டல்!
வலியுறுத்தல்! 
அரசு விதிகள் 
காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது  எனும் குற்றச்சாட்டு!
ஆதங்கம்! 

சட்டத்தின் 
ஆட்சியை கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 
நாமக்கல் 
மாவட்ட அமைப்பு பாராட்டுக்குரியது!

அரசு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளும் நாமக்கல்மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறை வரவேற்புக்குரியது!

ஆனாலும்,இத்தகு மென்மையான அணுகுமுறை பலனிக்காது !
இவைகள் 
காலந்தோறும்
காணப்படும் 
 கண்டும்,காணாதப்போக்கு!கண்டிக்காத-தண்டிக்காத 
அனுசரணையானப்போக்கு!

அரசுவிதிமீறல், நிதிகையாடல் ,
கடமைதவறியது, பணியில் பற்று உறுதிஇன்மை ,
நோய்த்தொற்று காலத்திய பேரிடர்மேலாண்மை விதிகளை காற்றில் பறக்க விடுவது 
என்பன போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி  
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்காததும்,
மேற்கொள்ளாததும் அதிருப்திக்குரியது!

ஆசிரியர்கள் என்றால் எச்சரிக்கை விடலாம்!மிரட்டலாம்!பாயலாம்!அலுவலர்கள் எனில்... !?

இப்படியான !
எண்ணம் -சிந்தனை  நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களின் மனதில் ஓடுவதை  தடுத்திடும் வகையில் நடவடிக்கைகள் வேண்டும்!
-முருகசெல்வராசன்.

ஓசியில் பழம் தின்று 
தின்ற பழத்தின் 
கொட்டையை 
விற்று காசாக்கிக்கொள்ளும் 
வியாபார தந்திரமும், மலிவுச்சிந்தனையும்,
பேராசையும் 
 நூலோருக்கு அழகல்ல!
-முருகசெல்வராசன்.

அக்டோபர் 1, வரலாற்றில் இன்று. இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம் இன்று(1854).

அக்டோபர் 1, வரலாற்றில் இன்று.

  இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம் இன்று(1854).

இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியா.

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது.

வரலாறு

இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764-1766களில் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்ட்து.
அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய,
சென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.

துறை அமைப்பு

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது

அஞ்சல் அலுவலகங்களின் வகைகள்

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
தலைமை அஞ்சல் அலுவலகங்கள்
துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்

அஞ்சல் அலுவலகச் சேவைகள்

இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
ராஜதானிப் பிரிவு - தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பச்சைப் பிரிவு - தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்ட அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.
பெருநகரப் பிரிவு - பெங்களூர் , ஐதராபாத் , கொல்கத்தா , சென்னை , டெல்லி , மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.
வணிகப் பிரிவு - அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.
பருவ இதழ்கள் பிரிவு - அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.
மொத்தத் அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்

அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
உதாரணமாக, * புதுடெல்லி , ஜம்மு - காஷ்மீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.
ராஜஸ்தான் , குஜராத் , டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.
மத்தியப் பிரதேசம் , கோவா , மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.
தமிழ்நாடு , கேரளா , இலட்சத்தீவு , மினிகாய்த்தீவு ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.
ஒரிசா , அந்தமான் - நிகோபார் , மேற்கு வங்காளம் , மிசோரம் , மேகாலயா , மணிப்பூர் , நாகலாந்து , அசாம் , அருணாச்சலப் பிரதேசம் , திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.
பீகார் , ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்கிறது.

பலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்

பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.

அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை
பதிவுத் அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்
அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)
அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை
செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி
மின்னணு அஞ்சல்
இணைய வழி பில் தொகை செலுத்தல்
புத்தகங்கள் விற்பனை

இதர சேவைகள்

இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.
பொதுசேமநலநிதி
தேசிய சேமிப்புப் பத்திரம்
வங்கி சேமிப்புக் கணக்கு
மாத வருவாய்த் திட்டம்
வைப்புத் தொகைத் திட்டங்கள்
கடவுச்சீட்டு விண்ணப்பம்
தங்கக் காசு விற்பனை
காப்பீட்டுத் திட்டச் சேவை

அக்டோபர் 1,வரலாற்றில் இன்று.சர்வதேச முதியோர் தினம் இன்று.

அக்டோபர் 1,
வரலாற்றில் இன்று.

சர்வதேச முதியோர் தினம் இன்று.

ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

*🌟Due date for furnishing of belated & revised ITRs for Assessment Year 2019-20 has been extended from 30 September, 2020 to 30th November, 2020*

*🌟Due date for furnishing of belated & revised ITRs for Assessment Year 2019-20 has been extended from 30 September, 2020 to 30th November, 2020*