செவ்வாய், 24 நவம்பர், 2020

கொரோனா சோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது?உச்சநீதி மன்றம் வினா!

கொரோனா சோதனைக்கு நாடு முழுவதும் ரூ.400 வசூலித்தால் என்ன? - மத்திய அரசுக்கு  கேள்வி!
-------------------------------------------
கொரோனா - பரிசோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது?
உச்சநீதி மன்றம் வினா!

கொரோனா தொற்று இருப்பதை துல்லியமாக கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளிலும், ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்த கட்டண நிர்ணயம் மாநிலங்களுக்கு மாநிலமும், மாநிலங்களுக்குள்ளும் மாறுபடுகிறது. இதனால் மக்கள் மேன்மேலும் அவதியுற்று வருகின்றனர்.

இப்படி இருக்கையில், இந்திய முழுவதும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை 400 ரூபாயில் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா பரிசோதனைகள் வெறும் 200 ரூபாயில் செய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு ஏற்றது போல கட்டணம் நிர்ணயம் செய்யதுள்ளனர்.

எனவே இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

*🌊⚡தமிழகம் முழுவதும் 25.11.2020 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை எண்.596 நாள்:24.11.2020 வெளியீடு.*

*🌊⚡தமிழகம் முழுவதும் 25.11.2020 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை எண்.596 நாள்:24.11.2020 வெளியீடு.*

*🌸26.11.2020 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌸26.11.2020 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🏥மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் -பணியாளர்களின் குறைதீர்வு நடைமுறை தகவல் அனுப்பக் கோருதல் தொடர்பான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக செயல்முறைகள்*

*🏥மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் -பணியாளர்களின் குறைதீர்வு நடைமுறை தகவல் அனுப்பக் கோருதல் தொடர்பான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக செயல்முறைகள்*

நிவர் புயலின் நேரலை...

click here...

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை ~ விண்ணப்பிக்க அழைப்பு…

திங்கள், 23 நவம்பர், 2020

*🌻மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kind attention to the candidates who are seeking admission to MBBS/BDS course 2020-2021 session*

*🌻மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kind attention to the candidates who are seeking admission to MBBS/BDS course 2020-2021 session*

கொரோனாவால் நாடு மோசமாக பாதிப்பு ! பாதிப்பை தடுத்திட மாநிலங்கள் தயராக உள்ளதா?அறிக்கை தாக்கல் செய்க!இந்திய உச்சநீதிமன்றம் கவலை!

கொரோனாவால் நாடு மோசமாக பாதிப்பு ! 

பாதிப்பை தடுத்திட மாநிலங்கள் தயராக உள்ளதா?

அறிக்கை தாக்கல் செய்க!

இந்திய உச்சநீதிமன்றம்  கவலை!
####################
வரும் திசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மாநிலங்கள் தயாராக உள்ளதா ?என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. 
ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது. 

குஜராத் சமீபத்தில் கொரோனா பாதிப்புகளில் அதிகரித்துள்ளது, அகமதாபாத், ரa    ாஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு கட்டாயப்படுத்தியது. 

முதல்வர் விஜய் ரூபானி பள்ளிகளையும், கல்லூரிகளையும் மீண்டும் திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். 

தில்லியில் கொரோனா பாதிப்புகள் 5.29 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இது ஆறாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது.

இந் நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குஜராத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நவம்பர் மாதத்தில், தில்லியில் கொரோனா தொற்றுப் பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. 

எனவே, கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தில்லி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஜெயினுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை மற்றும் கொரோனாவால் பலியானோரின் உடலை மரியாதையான முறையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

*🔖புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியீடு*

*🔖புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியீடு*
பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க.
click here.

நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-11-2020 மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும்!-தமிழக அரசு செய்தி வெளியீடு.


*நிவார் புயல்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-11-2020 மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும்!-தமிழக அரசு செய்தி வெளியீடு.