திங்கள், 23 நவம்பர், 2020

கொரோனாவால் நாடு மோசமாக பாதிப்பு ! பாதிப்பை தடுத்திட மாநிலங்கள் தயராக உள்ளதா?அறிக்கை தாக்கல் செய்க!இந்திய உச்சநீதிமன்றம் கவலை!

கொரோனாவால் நாடு மோசமாக பாதிப்பு ! 

பாதிப்பை தடுத்திட மாநிலங்கள் தயராக உள்ளதா?

அறிக்கை தாக்கல் செய்க!

இந்திய உச்சநீதிமன்றம்  கவலை!
####################
வரும் திசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மாநிலங்கள் தயாராக உள்ளதா ?என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. 
ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது. 

குஜராத் சமீபத்தில் கொரோனா பாதிப்புகளில் அதிகரித்துள்ளது, அகமதாபாத், ரa    ாஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு கட்டாயப்படுத்தியது. 

முதல்வர் விஜய் ரூபானி பள்ளிகளையும், கல்லூரிகளையும் மீண்டும் திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். 

தில்லியில் கொரோனா பாதிப்புகள் 5.29 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இது ஆறாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது.

இந் நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குஜராத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நவம்பர் மாதத்தில், தில்லியில் கொரோனா தொற்றுப் பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. 

எனவே, கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தில்லி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஜெயினுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை மற்றும் கொரோனாவால் பலியானோரின் உடலை மரியாதையான முறையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக