திங்கள், 23 நவம்பர், 2020

தணிக்கை ஆட்சேபனையை மறுத்த ஓய்வூதியர் உரிய ஆதாரங்களுடன் கருவூலக கணக்குத் துறைக்கு கடிதம்அனுப்பிய சூழ்நிலையில்கருவூலகணக்குத்துறை ஆணையர் திருவள்ளூர் கருவூலத்திற்கு 28-10-20ல்கடிதம் எழுதி தனது தணிக்கைத்தடை சார்பான திரும்பபெற்றுள்ள ஆணை.

தணிக்கை ஆட்சேபணை உஷார் !
***********************************
சென்னை பூந்தமல்லி சார்நிலை கருவூலத்தில்
தணிக்கை ஆட்சேபணை என்ற பெயரில் டி.வடி
வேலு, R.T.O.(Retd) அவர்களின் ஓய்வூதியத்திலி
ருந்து ( சி226793)எவ்வித முன்னறிவிப்பும்
இன்றி 10 மாதங்களுக்கு தலா ரூ 12417/-வீதம்
பிடித்தம் ஏப்ரல் 2020 மாதத்திலிருந்து துவக்கப்
பட்டது.தணிக்கை ஆட்சேபணையினை மறுத்து
ஓய்வூதியர் கொடுத்த கடிதங்கள் பேரில் ஒரு
நடவடிக்கையும் இல்லை.எனவே நமது சங்கத்தை அணுகினார்.
    ஓய்வூதியர்களுக்கு தவறாக Over payment செ
ய்தால்,அவற்றை எவ்வாறு அணுக வேண்டும்
என உச்சநீதிமன்றம் State of Punjab and others
-Vs -Rafiz Mash (2014-8 SCC883) and (2015-4CC
334)ல் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.இம்மா
திரி பிடித்தங்களை செய்யுமுன் நோட்டீஸ் வழங்கி விளக்கம் பெறவேண்டும் எனவும்
உச்சநீதிமன்றம் கடுமையாக வலியுறுத்தி
யுள்ளது.இவற்றை சுட்டிக்காட்டி நமது சங்கம்
12-10-20 ல் கடிதம் அனுப்பியது.
      மேலும் தணிக்கை ஆட்சேபணையினை
ஓய்வூதியர் மறுத்து ஆதாரங்களுடன் கடிதம்
அனுப்பியிருந்தார். இந்த சூழ்நிலையில்
கருவூலகணக்குத்துறை ஆணையர் திருவள்ளூர் கருவூலத்திற்கு 28-10-20ல்
கடிதம் எழுதி தனது ஆணையினை திரும்ப
பெற்றுள்ளார்.
       தணிக்கை ஆட்சேபணை என்ற பெயரில்
இம்மாதிரி பல விதிமீறல்களை செய்து ஓய்வூ
திய பிடித்தங்களை உத்திரவிடும் போக்கை
முறியடிக்க தயாராவோம் !
நன்றி:
திரு.கிருஷ்ணன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக