சனி, 28 நவம்பர், 2020

*🌸2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி பாதுகாப்புக்குழு புதிய படிவம்.SCHOOL SAFETY COMMITTEE NEW FORMAT- 2020-2021 - PDF.

  *🌸2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான 
பள்ளி பாதுகாப்புக்குழு புதிய படிவம்.
SCHOOL SAFETY COMMITTEE NEW FORMAT- 2020-2021 - PDF.படிவங்களை பார்க்க இங்கே கிளிக் செய்க.

*✍️“கற்போம் எழுதுவோம் இயக்கம்” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - 30.11.2020 பிற்பகல் அன்று காணொளி வாயிலான ஆய்வுக்கூட்டம் நடத்துதல் - சார்பு - பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநரின் கடிதம் -நாள்:27.11.20*

*✍️“கற்போம் எழுதுவோம் இயக்கம்” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - 30.11.2020 பிற்பகல் அன்று காணொளி வாயிலான ஆய்வுக்கூட்டம் நடத்துதல் - சார்பு - பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநரின் கடிதம் -நாள்:27.11.20*

*📘✍️தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2021 தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்பான மாவட்ட தேர்தல் அலுவலர்,நாமக்கல் அவர்களின் கடிதம்.*

*📘✍️தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2021 தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்பான மாவட்ட தேர்தல் அலுவலர்,நாமக்கல் அவர்களின் கடிதம்.*

புதன், 25 நவம்பர், 2020

நிவர் புயல் பாதிப்பினால் 16 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

நிவர் புயல் பாதிப்பினால் 16 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

1.சென்னை,
2.காஞ்சிபுரம், 
3.திருவண்ணாமலை,
4. கள்ளக்குறிச்சி,
5.செங்கல்பட்டு,
6.கடலூர்,
7.திருவள்ளூர்,
8.விழுப்புரம்,
9.அரியலூர்,
10தஞ்சை,
11.திருவாரூர்,
12.நாகை,
13.பெரம்பலூர்,
14. திருப்பத்தூர்,
15.ராணிப்பேட்டை
16.வேலூர்.
ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்!தேவையற்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் -மன்றம் .திரு.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்!
தேவையற்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்!     
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் -மன்றம் .
திரு.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!
+++++++++++++++++++++++++++++++++++++
கொரோனா கொடுந்தொற்று முற்றிலுமாய் நீங்காத சூழலில், பெருமழையும் கடும்புயலும் கரம்கோர்க்கும் காலத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி 26.11.2020அன்று  கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது.

13 மாவட்டங்களுக்கு 26.11.2020அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.,தற்போது மேலும் 3 மாவட்டங்களை சேர்த்து 16 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தின் சரி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி எனில் மீதமுள்ள மாவட்டங்களில் மட்டும் போராட்டம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுமா?அவ்வாறு நடத்துவது சரியான கணக்கெடுப்பு ஆகுமா?என்று தமிழகரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

இத்தனைக்கும் மேலாக கொரோனா கொடுந்தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் முற்றிலும் இயங்கவில்லை. நாள்தோறும்சுழற்சிமுறையில் 50சதவிகித ஆசிரியர்களுடன் பள்ளிகள் மாணாக்கர் சேர்க்கைக்காக இயக்கப்பட்டு வருகிறது.
கள நிலைமை இவ்வாறிருக்க 
பள்ளிக் கல்வித்துறையின் 
சில மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணிக்கு வந்த மற்றும் வராத ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரிக்க சுற்றறிக்கை அனுப்புவது எதற்கு?
ஆசிரியர்களை மிரட்டவா?
அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கவா?
அசாதாரணமான சூழல் மாநிலத்தில் நிலவும் இவ்வேளையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களைத் தாண்டி புயலின் தாக்கம் நீடித்தால் எவ்வாறு ஆசிரியர்கள் பணிக்கு செல்லமுடியும்? 
அவ்வாறு செல்லும் வழியில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? அரசு பொறுப்பேற்குமா?

நிவர் புயலின் கோரத்தாண்டவத்தில் மாநிலத்தின் மக்கள் சிக்கித்தவிக்கையில் இக்கணக்கெடுப்பு அர்த்தமுடையது தானா?
 ஆசிரியர்களைஅலைக்கழிக்கும் நோக்கம்கொண்டதா?என்று ஆசிரியர்களிடையே பேசப்படு வருகிறது.

பள்ளிகள் இயங்காத சூழலில் பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சுற்றறிக்கை தேவையற்றதாகவே ஆசிரியர்களால்  பார்க்கப்படுகிறது. அகில இந்திய வேலை நிறுத்தத்தைக் காரணமாக காட்டி தமிழகத்து ஆசிரியர்களிடம் பீதியை உருவாக்கும் மனநிலையில் கல்வித்துறை அலுவலர்கள் செயல்படுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும்.   

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்ட மாவட்டங்களில் அவ்வறிக்கையை திரும்பப்பெற பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டு ஆசிரியர்களின் நலன்காக்குமாறும், ஆசிரியர்களை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாத்திடுமாறும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  சார்பில்  கேட்டுக் கொள்கிறேன்.

_முனைவர்-மன்றம்.
நா.சண்முகநாதன்,
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்.

🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*

 *🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*


*தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*



*பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவில்லை. சூழல் சரியானதும், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.*




*பள்ளிக் கல்வித் துறை*

செவ்வாய், 24 நவம்பர், 2020

கொரோனா சோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது?உச்சநீதி மன்றம் வினா!

கொரோனா சோதனைக்கு நாடு முழுவதும் ரூ.400 வசூலித்தால் என்ன? - மத்திய அரசுக்கு  கேள்வி!
-------------------------------------------
கொரோனா - பரிசோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது?
உச்சநீதி மன்றம் வினா!

கொரோனா தொற்று இருப்பதை துல்லியமாக கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளிலும், ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்த கட்டண நிர்ணயம் மாநிலங்களுக்கு மாநிலமும், மாநிலங்களுக்குள்ளும் மாறுபடுகிறது. இதனால் மக்கள் மேன்மேலும் அவதியுற்று வருகின்றனர்.

இப்படி இருக்கையில், இந்திய முழுவதும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை 400 ரூபாயில் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா பரிசோதனைகள் வெறும் 200 ரூபாயில் செய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு ஏற்றது போல கட்டணம் நிர்ணயம் செய்யதுள்ளனர்.

எனவே இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

*🌊⚡தமிழகம் முழுவதும் 25.11.2020 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை எண்.596 நாள்:24.11.2020 வெளியீடு.*

*🌊⚡தமிழகம் முழுவதும் 25.11.2020 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை எண்.596 நாள்:24.11.2020 வெளியீடு.*

*🌸26.11.2020 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌸26.11.2020 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*