ஞாயிறு, 13 டிசம்பர், 2020

*🏗️கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு:*

*🏗️கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு:*
 

*கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.*


*கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.*


*மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:*


*சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11 இளநிலை பொறியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக 1.1.2013-ல் அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் வென்ற நிலையில் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைப்புவரவில்லை.*


*அது குறித்து விசாரித்த போது இளநிலை பொறியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.*


*இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.*


*இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:*



*அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு தகுதியாக உள்ள வேலைக்கு பட்டதாரி பட்டம் பெற்றவர் தகுதியானவர் அல்ல. நம் நாட்டில் ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்ச, அதிக கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*


*கட்டாய இலவச கல்வி போன்ற நடைமுறைகளால் நாட்டில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமத்தில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.*


*லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்பின்றி தவிக்கின்றனர்.*


*குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் பலர் பொது வேலைவாய்ப்பை பெறுகின்றனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர், அதிக கல்வித் தகுதியை பெற்றவருடன் போட்டியிட முடியாது. இருவரையும் சமமாக பார்க்க முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் பார்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது.*



*கீழ்நிலை பணிகளுக்கு உயர்க் கல்வி பெற்றோர் தகுதியானவர்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றோருக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.*



*கீழ் நிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மைப் பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாளமுடியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வரி செலுத்தும் அளவுக்கு சம்பளம் பெறுகின்றனர்.*


 
*சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித்தகுதி கொண்ட அவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. பலர் உயர் கல்வித் தகுதியை மறைத்து பணியில் சேர்வதால் வேலைவாய்ப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை.*


*இரண்டாம் நிலை காவலர் பணிக்கு முதுகலை பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படித்தவர்களும் விண்ணப்பித்தனர். உயர்க்கல்வித் தகுதி பெற்ற ஒருவரால் கீழ் நிலை பணியை முறையாக செய்ய முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூக நீதி கிடைக்கும்.*


*எனவே, கீழ் நிலை பணிகளில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமை செயலர், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்.*


*மனுதாரர் இளநிலை பொறியாளர் பணிக்குரிய கல்வித்தகுதியை மனுதாரர் பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.*


*இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.*

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்.

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 



50% குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்  என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; 


தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைப்பு மூன்று நாட்களில் வெளியிட முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைப்பு மூன்று நாட்களில் வெளியிட முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை, மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:

அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' மூலமாக, அரையாண்டு தேர்வை நடத்துவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை.இன்றைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும், பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோ, அந்த பாடங்களில் இருந்து தான், தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும். 

மத்திய தேர்வு வாரியம், சி.பி.எஸ்.இ., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு, இறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் தேர்வு வாரியம், இந்த வகுப்புகளுக்கு, தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 12 டிசம்பர், 2020

*📘FLASH NEWS-அனைத்து ஆசிரியர்களுக்கும் SMART CARD உடனடியாக வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள்!*

*📘FLASH NEWS-அனைத்து ஆசிரியர்களுக்கும் SMART CARD உடனடியாக வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி)செயல்முறைகள்!*




ஆசிரியர்களுக்கான திறன் அட்டை தகவல்களை  PDF ஆக பெற இங்கே கிளிக் செய்க.

*📘அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்.*

*📘அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்.*
 


*அடுத்த கல்வியாண்டில் புதியதாக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய உயர்கல்வித் துறை செயலாளார் அமித் கரே தெரிவித்துள்ளார்.*


*தன்னார்வ தொண்டு அமைப்பின் கருத்தரங்கில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அமித் கரே, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படவுள்ளது என்றார்.*


*மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், சேர்க்கை பெற பொது நுழைவுத் தேர்வு போன்ற மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.*

☀️பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்.

☀️பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
அரசு கல்லூரிகளாக மாற்றம்.

🔴இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பு செய்யப்பட்ட 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து 1800 வீடியோக்களும் வகுப்பு வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

🔴இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பு செய்யப்பட்ட  2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து 1800 வீடியோக்களும் வகுப்பு  வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

📺 *2nd Std All Kalvi Tv Videos*

📺 *3rd Std All Kalvi Tv Videos*

📺 *4th Std All Kalvi Tv Videos*

📺 *5th Std All Kalvi Tv Videos*

📺 *6th Std All Kalvi Tv Videos*

📺 *7th Std All Kalvi Tv Videos*

📺 *8th Std All Kalvi Tv Videos*

📺 *9th Std All Kalvi Tv Videos*

📺 *10th Std All Kalvi Tv Videos*

📺 *11th Std All Kalvi Tv Videos*

📺 *12th Std All Kalvi Tv Videos*

 

*🖥️தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வுகள் நடத்தி கொள்ளலாம். - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.*

*🖥️தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வுகள் நடத்தி கொள்ளலாம். - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.*
 

 *தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வுகள் நடத்தி கொள்ளலாம். - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.*


*தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% குறைப்பு மட்டும்நிரி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.*


*தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.*

தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம் மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிலவிவருகிறது. இதனையடுத்து இந்த மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பதற்கான முடிவை முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்போம் என்றும் தெரிவித்தார். கல்லூரி தொடங்கிய நிலையில், பள்ளிகளும் இம்மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

*☀️தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER*

*☀️தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER*