செவ்வாய், 15 டிசம்பர், 2020

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-2020-21 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை மாவட்டங்களுக்கு விடுவித்தல்/அறிவுரை வழங்குதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-2020-21 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை மாவட்டங்களுக்கு விடுவித்தல்/அறிவுரை வழங்குதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*✍️கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள் சார்பான வினாக்களும் அவற்றிற்கான தெளிவுரைகளும்.*

*✍️கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு..*



1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?

தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.

2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.

3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.

4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.

5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.

6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.

7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.

8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?

காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?

அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ...

 எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறைந்த வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?

தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..

  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும்,

மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா?
 உரிமையுடன் கோரலாமா?

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்...மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,

 ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்..

தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்...

1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).

2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.

3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

திங்கள், 14 டிசம்பர், 2020

*📘கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?*

*📘கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?



நடைமுறைகள் பள்ளி மாற்றுச் சான்றிதழ இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தனித்தேர்வர்களுக்கு...
 
குறிப்பு:

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

 ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை.

தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.

நடைமுறைகள்:

முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ்:

பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

 விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

 எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்:

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.

 பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ்:

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்:

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக  தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக  தேர்வுத்துறை இயக்குநர்  அலுவலகத்திற்கு  விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.  பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு  சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

குறிப்பு.

பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் மற்றும் பிற விபரங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-ஒருங்கிணைந்த பள்ளிமானியம்-பள்ளி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பள்ளிமேலாண்மைக்குழு தீர்மானம்-EMIS பதிவேற்றம் செய்தல் தயார்நிலை தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-ஒருங்கிணைந்த பள்ளிமானியம்-பள்ளி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பள்ளிமேலாண்மைக்குழு தீர்மானம்-EMIS பதிவேற்றம் செய்தல் தயார்நிலை தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  அவர்களின் செயல்முறைகள்.*

மார்கழி இசைத்திருவிழா( பாவை விழா) இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் மாணவ மாணவியர்களுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தல் மற்றும் பரிசுகள் வழங்குதல் தொடர்பாக...

மின்சார துறையின் மக்களுக்காக செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளும் உள்ள மக்கள் சாசன புத்தகம்.

வணக்கம் நண்பர்களே...!

மின்சார துறையின் மக்களுக்காக செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளும் உள்ள மக்கள் சாசன புத்தகம்.

புத்தகத்தை படிக்க இங்கே கிளிக் செய்க.

click here.

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

*💸ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்*

*💸ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்*
*ஆர்டிஜிஎஸ் முறை என்பது, மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியில் இருந்து, அதே வங்கியின் வேறொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் அனுப்ப பயன்படுத்தப்படுவது. ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்புவதற்கு, இந்த முறைதான் பயன்படும்.*

*தற்போது ஆர்டிஜிஎஸ் முறை என்பது வங்கியின் வேலைநாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது . வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சேவை இருக்காது.*

*இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ஆர்டிஜிஎஸ் முறை நாளை இரவு 12:30 மணி முதல் 24* *7 நேரமும் செயல்படும். இதனை சாத்தியாக்க பணியாற்றிய ரிசர்வ் வங்கி, ஐஎப்டிஏஎஸ்(Indian Financial Technology and Alied Services) மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி. அதிகளவு பணத்தை 24 *7*365 அனுப்பும் முறையை செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் மூலம் தொழில் செய்யும் எளிதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.*

*ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ட் சேவை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. நெப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக்கு கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.*

*🏗️கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு:*

*🏗️கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு:*
 

*கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.*


*கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.*


*மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:*


*சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11 இளநிலை பொறியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக 1.1.2013-ல் அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் வென்ற நிலையில் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைப்புவரவில்லை.*


*அது குறித்து விசாரித்த போது இளநிலை பொறியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.*


*இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.*


*இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:*



*அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு தகுதியாக உள்ள வேலைக்கு பட்டதாரி பட்டம் பெற்றவர் தகுதியானவர் அல்ல. நம் நாட்டில் ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்ச, அதிக கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*


*கட்டாய இலவச கல்வி போன்ற நடைமுறைகளால் நாட்டில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமத்தில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.*


*லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்பின்றி தவிக்கின்றனர்.*


*குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் பலர் பொது வேலைவாய்ப்பை பெறுகின்றனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர், அதிக கல்வித் தகுதியை பெற்றவருடன் போட்டியிட முடியாது. இருவரையும் சமமாக பார்க்க முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் பார்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது.*



*கீழ்நிலை பணிகளுக்கு உயர்க் கல்வி பெற்றோர் தகுதியானவர்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றோருக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.*



*கீழ் நிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மைப் பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாளமுடியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வரி செலுத்தும் அளவுக்கு சம்பளம் பெறுகின்றனர்.*


 
*சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித்தகுதி கொண்ட அவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. பலர் உயர் கல்வித் தகுதியை மறைத்து பணியில் சேர்வதால் வேலைவாய்ப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை.*


*இரண்டாம் நிலை காவலர் பணிக்கு முதுகலை பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படித்தவர்களும் விண்ணப்பித்தனர். உயர்க்கல்வித் தகுதி பெற்ற ஒருவரால் கீழ் நிலை பணியை முறையாக செய்ய முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூக நீதி கிடைக்கும்.*


*எனவே, கீழ் நிலை பணிகளில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமை செயலர், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்.*


*மனுதாரர் இளநிலை பொறியாளர் பணிக்குரிய கல்வித்தகுதியை மனுதாரர் பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.*


*இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.*

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்.

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 



50% குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்  என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; 


தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைப்பு மூன்று நாட்களில் வெளியிட முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைப்பு மூன்று நாட்களில் வெளியிட முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை, மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:

அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' மூலமாக, அரையாண்டு தேர்வை நடத்துவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை.இன்றைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும், பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோ, அந்த பாடங்களில் இருந்து தான், தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும். 

மத்திய தேர்வு வாரியம், சி.பி.எஸ்.இ., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு, இறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் தேர்வு வாரியம், இந்த வகுப்புகளுக்கு, தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.