வியாழன், 17 டிசம்பர், 2020

*🔖அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:

*🔖அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:*


*அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: சுமார், 2,400 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.*



*இப்பள்ளிகள், பல ஆண்டுகளுக்கு முன், ஊரகப்பகுதிகளில் கட்டப்பட்டவையாகும். அப்பள்ளிகளிலும், படிப்படியாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிதாக கட்டப்படும் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.*

 
 *தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம்.  கொரோனா பிரச்னை காரணமாக, 9ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்பிற்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.*


*இது தொடர்பாக, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.*


*அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: சுமார், 2,400 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.*



*இப்பள்ளிகள், பல ஆண்டுகளுக்கு முன், ஊரகப்பகுதிகளில் கட்டப்பட்டவையாகும். அப்பள்ளிகளிலும், படிப்படியாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிதாக கட்டப்படும் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.*

 
 *தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம்.  கொரோனா பிரச்னை காரணமாக, 9ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்பிற்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.*


*இது தொடர்பாக, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.*

புதன், 16 டிசம்பர், 2020

🍁2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...

🍁2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...
விண்ணப்பத்தினை பார்க்க இங்கே கிளிக் செய்க.

click here.

*🔖ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-2020-21 ஆம் கல்வியாண்டு-பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு-பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல்-நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🔖ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-2020-21 ஆம் கல்வியாண்டு-பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு-பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல்-நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*📘ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் இணையவழியில் பயிற்சி...*

*📘ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் இணையவழியில் பயிற்சி...*


*தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முதற்கட்ட பணிகளை பள்ளி கல்வித் துறை துவங்கியுள்ளது.*


*இதற்காக இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.*


*நோய் தடுப்பு முறை:*



*தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் கல்லுாரிகள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.*


*தனியார் பயிற்சி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன.*

 

*இதைத் தொடர்ந்து ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பள்ளி கல்வித் துறை அனுமதி கோரியுள்ளது. அதற்கேற்ப முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.*


 
*அதாவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்தால் அவர்களை தொற்றில் இருந்து பாதுகாப்பது, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது தொடர்பான வழிமுறைகள் வழங்க பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*
 


*இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.*



*மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18 மற்றும் 19-ம் தேதிகளிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு  21 மற்றும் 22-ம் தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.*


*ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக, இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.*


*பள்ளி வளாகத்திற்குள் கொரோனா தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் ஆரோக்கியம், உளவியல் ரீதியான பயிற்சி, தொற்று குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.*

✍️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு..

✍️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு..

செவ்வாய், 15 டிசம்பர், 2020

*📘தமிழ்நாடு பள்ளிக்கல்வி -முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல்-மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் தொடர்பான பள்ளிக்கல்வித்துறை அரசாணை.*

📘தமிழ்நாடு பள்ளிக்கல்வி -முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல்-மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் தொடர்பான பள்ளிக்கல்வித்துறை அரசாணை.*

தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய ஒருநாள் இணையவழி பயிற்சி குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

*தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய ஒருநாள் இணையவழி பயிற்சி குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!*

பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்த துறை அரசாணைகள்...!

வணக்கம் நண்பர்களே...!

பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்த துறை அரசாணைகள்...!

1.    G.O.No.158 dt. 26.8.2எஸ்,முருகேசன்008.  RTI மூலம் தகவல் பெற விலக்களிக்கப்பட்ட 
          துறைகள் பற்றிய அரசாணை.
                           

2.    G.O.No.259. Dt.17.12.2007. Passport பெறுதல் மற்றும் NOC பெறுவது 
          சார்ந்த அரசாணை.
                         

3.     Lr.No. 11850/A/2010-1 date 28.6.2010. MOVEMENT REGISTER 
          பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்.
                          

4.      G.O.No.119.Dt.29.09.2011. Restricted Holidays - தற்காலிக மற்றும் 
            ஒப்பந்த அரசு  பணியாளர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.
                         

5.      G.O.No. 145. Dt.30.09.2010. வேலைவாய்ப்பில் தமிழ்வழியில் 
            படித்தவர்களுக்கு முன்னுரிமை பின்பற்றுதல் சார்ந்த ஆணை 
                         

6.      G.O.No.75. Dt.30.06.2011. அண்ணாமலை பல்கலைகழக 5 ஆண்டு 
            ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு அதற்கிணையான 
             U.G. DEGREE பாடமாக கருதப்படும். ஆணை.
                          

7.     G.O.No.197. Dt. 24.10.2008. Voluntary Retirement - Giving weightage 
            Modificatioon Amendments - Orders issued.
                           

8.     G.O.No.116 Dt.18.08.2010. U.G. DEGREE இல்லாமல் நேரடியாக 
           திறந்த வெளி பல்கலைகழகம் மூலம் பெற்ற P.G. DEGREE
           வேலைவாய்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படாது  என ஆணை.
                     

9.    Lr.No. 92, dt.22.07.2009. Transfer ofn Physically Handicapped Govt.
         servants.       (Near to their Native place)
                      

10.    G.O.No.157, dt.26.8.2008. TNPSC Fee exemption for Physically 
           Handicapped.
                    

11.    G.O.No.149 Dt.11.11.2011மாற்று திறனாளிகளுக்கான 
          வேலைவாய்ப்பு முன்னுரிமையில் திருத்தம் ஆணை.
                   

12.    G.O. No. 183. Date. 13.07.2007. வரையறுக்கப்பட்ட விடுமுறை
         நாட்களின்   பட்டியல்.
                     

13.   G.O.No.36. Dt.02.03.2012 பகவான் வைகுந்தசாமி பிறந்த நாள் 
         வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்ப்பு.
                  

14.  G.O.(Ms) No. 51. Date 16.05.2011      மகப்பேறு    விடுப்பு     180   
       நாட்களாக உயர்த்தப்பட்ட ஆணை.

                    

15.     G.O.(Ms) No. 61 Date. 16.06.2011        மகப்பேறு      விடுப்பு 180     நாட்களாக

       உயர்த்தப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்யப்பட்ட அரசாணை.

                       

16.     G.O.Ms.No. 38. Date.25.03.2011 Use of Permanent blue, Blue Black or   Black 
           inks in Government offices.

                      

17.      G.O.Ms.No.107. Date. 18.08.2009.  பள்ளி  மேல்நிலைபடிப்பு (+2 )முடித்து 

          திறந்தவெளி பல்கலைகழகங்களில் பெரும் பட்டயம், பட்டம், 

          முதுகலை பட்டங்கள் - பொதுப்பணிகளில் நியமனம் பெற

          ஆணை.

                             

18.      G.O.No.151 Date. 21.10.2010. பொதுப் பணிகள்  - அலுவலக நடைமுறை 

          பச்சை நிற மை பயன்பாடு குறித்த தெளிவுரை. 

                             

19.      G.O. No. 139 Date. 07.10.2009.  பொதுப்பணிகளில் நியமனம் செய்ய 
        B.L.,    B.E.,   M.B.B.S., B.V.Sc., B.Sc.Agri.,  படிப்புகளுக்கு  (B.A., B.S.c.,etc)  

        இணையாக கருதி ஆணை.

                              

20.       G.O.No. 212 Date. 11.11.2008. ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 

          என்பதை   தமிழ்நாடு ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் என

          பெயர் மாற்றம்  - அரசு ஏற்பு  - ஆணை.

                             

21.       G.O. Ms.No. 70 Date.09.04.2008. அலுவலக ஆணை,    கடிதங்கள்
            மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு 
            நேரான தமிழ் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு 
            பயன்படுத்துதல் - ஆணை.

                               

22.       Letter No. 17  Date 12.02.2009. முன்னால் படை வீரர்   நலன். 

         முன்னுரிமை சான்றிதழினைபயன்படுத்தாதபொழுது 

         குடும்பத்தில உள்ள  பிறிதொருவருக்கு முன்னுரிமை சான்றிதழ்  

         வழங்குதல்.  திருத்தம் ஆணை.

                               

23.     Lr.No. 190  Date 15.10.2008.   பொது  பணிகள் - ஆதரவற்ற விதவைகள் 

          மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது - தெளிவுரை 

                                

24.      Lr.No. 38561/M/2008. Date.16.11.2009. B.Sc., Bio-Chemistry பட்டப்
            படிப்பினை B.Sc., Chemistry பட்டப் படிப்பிற்கு இணையாக
            கருதி ஆணை.

                               

25.      G.O.Ms.No.149 Date.19.08.2008.  உடல் ஊனமுற்ற அரசு பணியாளர்கள் 

            தினமும் மாலை 15 நிமிடங்கள் முன்னதாக செல்ல அனுமதி. 

                                    

26.       G.O.Ms.No. 94. Date. 29.7.2011. IAS பயிற்சி மையம் சென்னை -40.

             இங்கு தங்கி பயிலும் SC/ST/BC/MBC மாணவ மாணவியர்களுக்கு 

             மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தி  ஆணை.

                                       

27.       G.O.Ms.No.189. Date.18.07.2007.  ATTESTATION POWERS GROUP "B" 

             ஊழியர்களுக்கு விரிவாக்கம் - ஆணை.

                                      

28.       G.O.Ms.No.65. Date.27.05.2009. அருந்ததியினருக்கு சிறப்பு ஒதுக்கீடு.

                                      

29.       G.O.Ms.No.119 Date.09.09.2009. அரசு ஊழியர்கள் A,B,C,D என நான்கு 

               வகையினராக பிரிப்பு.

                                       

30.       Lr.No. 8454/A/2010 Date.15.03.2010. புகார் மனுக்களுக்கு
            குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புகைச் சீட்டு அனுப்புதல்
             மற்றும் நடவடிக்கை மேற்கொள்வது.

                                        

31.       G.O.Ms.No. 133. Date 29.09.2009. அரசு ஊழியர்கள் வரதட்சணை 

             வாங்கவும், கொடுக்கவும் தடை. 

                                        

32.        Lr.No.59420/S/2006. Date.11.12.2006. அரசு அலுவலகங்களில் தனியாக 

             பணியாளர்கள் நியமித்துக் கொள்ள தடை. 

நன்றி...!

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-2020-21 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை மாவட்டங்களுக்கு விடுவித்தல்/அறிவுரை வழங்குதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-2020-21 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை மாவட்டங்களுக்கு விடுவித்தல்/அறிவுரை வழங்குதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*✍️கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள் சார்பான வினாக்களும் அவற்றிற்கான தெளிவுரைகளும்.*

*✍️கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு..*



1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?

தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.

2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.

3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.

4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.

5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.

6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.

7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.

8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?

காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?

அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ...

 எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறைந்த வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?

தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..

  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும்,

மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா?
 உரிமையுடன் கோரலாமா?

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்...மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,

 ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்..

தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்...

1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).

2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.

3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.