ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் மீதான
ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.-அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை.ஞாயிறு, 3 ஜனவரி, 2021
நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி?-பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி?-பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..
நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தங்களுடைய பணிகளை முறையாகச் செய்யாதது, காலம் கடத்துவது போன்றவை நீதிமன்றத்தில் வழக்காக மாறுவற்கு முக்கியக் காரணங்களாகின்றன.
வழக்குகளின் முக்கியக் கருத்துகளை, அரசு வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைத்து வழக்கின் முழு விவரங்களையும் நீதிமன்றத்திற்கு உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறுதல், பிரதிவாதிகள் எந்த அலுவலராக இருந்தாலும், தங்கள் அளவில் செய்ய வேண்டிய கடமைகளை உடனடியாகச் செயல்படுத்தத் தாமதம் செய்தல் போன்றவையும் காரணங்களாகின்றன.
அலுவலர்களின் அதிகார வரம்புகள்
இவற்றைத் தவிர்ப்பது குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
''கல்வி அலுவலர்கள் தங்களுடைய அதிகார வரம்புகளைத் துல்லியமாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறரால் தொடுக்கப்படும் எந்த வகையான வழக்குகளாக இருந்தாலும், இவ்வழக்கு தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதிகார வரம்புக்கு உட்பட்டது எனில், தங்களது கடமைகளைத் தாமதமின்றிச் செய்ய வேண்டும்.
சட்டம், விதிகள், அரசாணை, செயல்முறைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பாணைகளை நடைமுறைப்படுத்தத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைகள் அளவில் பிறப்பிக்க வேண்டிய ஆணைகளைக் காலதாமதமின்றி, உரிய விவரங்களுடன் இயக்குநர் வழியாக அரசுக்குக் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும்.
வழக்குத் தொடரப்பட்ட ஆணை
வழக்குகளில் குறிப்புரை கோரும்போது சட்டம், விதி மற்றும் அரசாணைப்படி ஏன் அந்தப் பணியைச் செய்ய முடியவில்லை என்ற விவரம், வழக்கில் தளர்ச்சி அளிப்பதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு, எதிர்வாதத்தில் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் பிறரால் வழக்குத் தொடரப்பட்டால், அதற்கான நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் அரசு வழக்கறிஞர்களை அணுகி, வழக்கை நடத்துவதற்குக் கடிதம் அளிக்க வேண்டும்.
நோட்டீஸ், வாதியின் உரை, தடையாணை போன்றவற்றைத் தேவையான அளவு நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வழக்குத் தொடுக்கப்பட்ட நிகழ்வைக் குறித்து சுருக்கமான அறிக்கை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கில் பல அலுவலர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அதில் எந்த அலுவலரின் ஆணை வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதோ? அதையே அனைவரும் பின்பற்ற வேண்டும். நீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு கிடைத்தவுடன், 24 மணி நேரத்திற்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும்.
வழக்கில் அரசுச் செயலர், இயக்குநர், இணை இயக்குநர்கள் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும், வழக்குத் தொடர்ந்த நபர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள் வழக்கு சார்ந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு சார்ந்து அரசு வழக்கறிஞர்களுடன் கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி, அவ்வப்போது அவர்களை நேரில் சந்தித்தும் நினைவூட்ட வேண்டும்.
குறிப்புரை அனுப்புதல்
வாதியின் உரை குறித்து ஒவ்வொரு பத்தியாகக் குறிப்புரை அனுப்புதல் வழக்கின் மிக முக்கியக் கட்டமாகும். எந்த அலுவலரின் ஆணை மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதோ? அவரே வாதியின் உரை குறித்த குறிப்புரையைத் தயாரிக்க வேண்டும். இதற்கான ஆவணங்கள், கருத்துகள் மற்றும் புள்ளிவிவரங்களை 15 நாட்களுக்குள் சேகரித்துத் தொகுக்க வேண்டும். சார்நிலை அலுவலர்களுடன் உரிய விவரங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.
வழக்கில் வலுவூட்டக்கூடிய கருத்துகள் இருந்தால், அவற்றை ஆங்காங்கே சுட்டிக் காட்ட வேண்டும். அரசோ, இயக்குநரோ சேர்க்கப்படாத வழக்குகளில், நோட்டீஸை அரசு வழக்கறிஞருக்கு நேரடியாக அனுப்பி ஒப்புதல் பெற்று, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விவரத்தை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பிரதிவாத உரை தயாரிக்கச் செய்தல், வழக்கின் நிலை அறிதல், வழக்கின் முடிவறிதல், தொடர் நடவடிக்கை எடுத்தல் போன்றவை வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகளாகும். நீதிமன்ற வழக்குகளில் தவறான கருத்துகளை எடுத்துரைப்பதாலும், கருத்தைச் சொல்லாமல் தவிர்ப்பதாலும் ஏற்படும் விளைவுகளுக்குச் சம்பந்தப்பட்ட அலுவலரே பொறுப்பாவார்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர்களிடம் ஒப்புதல் பெற்று கோப்பில் வைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🙏மன்றம்🙏
சனி, 2 ஜனவரி, 2021
*🖥️SCHOOL GRANT தொடர்பான SMC RESOLUTION &ACTION PLAN ஐ -EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல்.*
*🖥️SCHOOL GRANT தொடர்பான SMC RESOLUTION &ACTION PLAN ஐ -EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல்.*
எங்களின் வரிப் பணத்தில் கட்டிய கட்டிடத்தைகுட்டிச் சுவராக்குவது என்ன வகை தருமம்?எந்த ஊர் நியாயம்?அலுவலர்என்ன பெரிய கடவுளா?குட்டிச்சுவராகும் கட்டிடத்தை அழகுடன் ஆக்கித்தர?பொலிவுப்படுத்தித்தர?அலுவலர் என்ன பெரிய மந்திரவாதியா?இடிந்த கட்டிடத்தை மாயாசாலத்தில் புதுப்பித்துத் தர?புனரமைத்துத் தர?களவானப்பொருள்களை மீட்டுத்தர?
எங்களின்
வரிப் பணத்தில்
கட்டிய கட்டிடத்தை
குட்டிச் சுவராக்குவது என்ன வகை தருமம்?
எந்த ஊர் நியாயம்?
அலுவலர்
என்ன பெரிய கடவுளா?
குட்டிச்சுவராகும் கட்டிடத்தை
அழகுடன் ஆக்கித்தர?பொலிவுப்படுத்தித்தர?
அலுவலர் என்ன பெரிய மந்திரவாதியா?
இடிந்த கட்டிடத்தை மாயாசாலத்தில் புதுப்பித்துத் தர?
புனரமைத்துத் தர?களவானப்பொருள்களை மீட்டுத்தர?
🔖தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.
*🔖தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.*
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ,தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி' முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் , மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து , நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் , நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது . கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.
தோழர் மடல் -தனிச்சுற்று இதழ் வெளியீடு!"தோழர் மடல்" கிறுக்கல்களாகக் கூட வரலாம்;இருக்கலாம்;பேசப்படலாம்.ஏதோ ஒன்றை,எதையோ ஒன்றைவெளிப்படுத்திடும் தன்முனைப்பும்,தன்ஆர்வமும் கொண்டதாக,பொதுநலன் நிறைந்ததாக இருக்கும்!தங்களின் தோழமை"தோழர்மடல்" -முன்னுரை!
தோழர் மடல் -
தனிச்சுற்று இதழ் வெளியீடு!
"தோழர் மடல்" கிறுக்கல்களாகக் கூட வரலாம்;இருக்கலாம்;பேசப்படலாம்.
ஏதோ ஒன்றை,
எதையோ ஒன்றை
வெளிப்படுத்திடும் தன்முனைப்பும்,
தன்ஆர்வமும் கொண்டதாக,
பொதுநலன் நிறைந்ததாக இருக்கும்!
தங்களின் தோழமை
"தோழர்மடல்" -முன்னுரை!
வெள்ளி, 1 ஜனவரி, 2021
பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை விரைவாக பதிவேற்ற இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DASH BOARD-ல் பள்ளி எனும் தலைப்பின் கீழ் வருடாந்திர மானியம் எனும் தேர்வு காட்டப்படவில்லை என்றால் ctrl + shift + R ஐக் கிளிக் செய்யவும்...
( Provision to upload SMC Resolution and SMC Action plan is now available in School Login.
Inform the HMs of those schools that received the grant amount for this year to upload the documents at the earliest.
Click ctrl+ shift + R if Annual grant option is not reflected under school option in the dash board.)
வியாழன், 31 டிசம்பர், 2020
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு 09.01.2021 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது.
வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு எதிர்வரும்
09.01.2021 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர். மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ,
சிறைச்செம்மல், வேலைநிறுத்தப் போராளி, மன்றச் செம்மல் விருதுகளை மன்ற மறவர்கள்- மறத்தியர்களுக்கு வழங்கி மாநாட்டுச் சிறப்புரை
யாற்ற உள்ளார்கள்.
பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான திரு.கே. எஸ் .மூர்த்தி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்களும் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு
மாநாட்டு உரை நிகழ்த்த உள்ளார்கள்.
ஆகவே, ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கோரிக்கை மாநாட்டில் பெருந்திரளாய் பங்கேற்று, கோரிக்கை மாநாட்டினை வெற்றி பெறச் செய்திடுமாறு மாவட்ட அமைப்பின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
_மாவட்டச்செயலாளர்
*🚗வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.*
*🚗வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.*
*புது தில்லி: வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*
*வாகனங்களில் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துவது வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*
*நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாகனங்களில் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி, வாகனங்களின் கண்ணாடியில் அந்த வில்லைகள் பொருத்தப்படும்.*
*அதில் அவ்வப்போது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்குக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, 'ஃபாஸ்டேக்' வில்லை வாயிலாகக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும்.*
*இந்த நடைமுறை ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. எனினும், சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் கட்டணம் செலுத்தி பயணிப்பதற்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.*
*மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசுகையில், ''வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. 'ஃபாஸ்டேக்' நடைமுறையால் சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு எரிபொருளும் சேமிக்கப்படும்'' என்றாா்.*
*அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*
*அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இணையவழியிலும் வங்கிகள் வாயிலாகவும் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.*
*📘GPF இறுதித் தொகை (Final Withdrawal) - 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!*
*📘GPF இறுதித் தொகை (Final Withdrawal) - 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)