ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,
நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு 
முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு  இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது. மேற்கண்ட 07.04.2021ஆம்  நாளுக்கும் ஊதியம் வழங்கிடுமாறும் வேண்டி உள்ளது.  இக்கோரிக்கைகள் கொண்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்,
தேர்தல் ஆணையத்திடம்  அளித்துள்ளது.
பரமத்தி-வேலூரில் மற்றும் இராசீபுரத்தில் நடைபெற்ற ஆசிரியர் மன்றக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.
இக்கோரிக்கைகள் மற்றும் கூட்டத் தீர்மானங்கள் 
நாமக்கல் மாவட்டத்தின் நாளேடுகளில் வெளியாகி உள்ளது.

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு!

இவண்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).

சனி, 3 ஏப்ரல், 2021

தேர்தல் வாக்குப்பதிவு 06.04.2021அன்று காலை 07.00மணிக்கு தொடங்குகிறது!குறுஞ்செய்தி,புலனம்,முகநூல்,சுட்டு ,இணையம் போன்றவை வழியிலான தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு தடை!

தேர்தல் வாக்குப்பதிவு 06.04.2021அன்று காலை 07.00மணிக்கு தொடங்குகிறது!
குறுஞ்செய்தி,புலனம்,
முகநூல்,சுட்டு ,இணையம் போன்றவை வழியிலான தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு தடை!

குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிதேர்தல் அலுவலருக்குவன்மையான கண்டனம்!ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்!

குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி
தேர்தல் அலுவலருக்கு
வன்மையான  கண்டனம்!
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்!
----------------------------

குமாரபாளையம்
சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள்  அனைவருக்கும்
 பயிற்சி வகுப்பு என்று அறிவிப்பு  வெளியிட்டு அனைவரையும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பயிற்சிக்கு (03.04.2021)அன்று குமாரபாளையம் பயிற்சி மையத்திற்கு வரவழைத்து விட்டு , அனைவரும் குமாரபாளையம் வந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்றப் பிறகு ,
எல்லோருக்கும் பயிற்சி இல்லை என்று அறிவிப்பு செய்வது 
மிக மோசமான நடவடிக்கையாகும்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்
(po )மற்றும் வாக்குச்சாவடி 
முதல் நிலை அலுவலர்( po1)க்கும் மட்டுமே பயிற்சி என்று கூறி வாக்குச்சாவடி அலுவலர்களை(po 2 & po3) வெளியேற்றுவது என்ன வகை நிர்வாக முறை ?!
என்ன வகையான  நடைமுறை!?

கோடைக்காலத்தின்
கொடும் வெயிலிலும்,
வெப்பத்திலும் 
பலநூறு  கிலோமீட்டர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை அலைக்கழிப்பதும்,
விரட்டியடிப்பதும்  கண்டனத்திற்குரியதாகும்.

சட்டமன்றப்
பொதுத்தேர்தல்
காலத்தில் ,
கொரோனாத் தொற்று பரவல் நேரத்தில் பொறுப்பற்ற வகையில் செயல்படும் நாமக்கல் மாவட்ட வருவாய் துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் துரதிருச்டவசமானதாகும்.

வாக்குச்சாவடி அலுவலர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையற்ற வகையில் உடல்அளவிலும், உள்ளஅளவிலும்  நோகடிக்கச்
செய்வதை குமாரபாளையம் 
சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,
தமிழக அரசு தரப்பினரும்  கைவிடல் வேண்டும்.

03.04.2021ஆம் நாளைய குமாரபாளையம் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள்  நடத்தப்பட்ட விதம் என்பது கொடுமையிலும் கொடுமையானதாகும். 
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையற்ற வகையில்  அலைச்சலை,மன உளைச்சலை உருவாக்கித் தந்துள்ள ,
தேர்தல் ஆணைய்தின் மாண்பினை சிதைத்துள்ள
குமாரபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலரின்  மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).

*சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021- தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் உயர்த்தி தரப்படல் வேண்டும் - நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை*

*சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-  தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் உயர்த்தி தரப்படல் வேண்டும் - நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை*

*நாமக்கல் கல்வி மாவட்டம்*- *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி* *ஆசிரியர்களின் மீது தொடுக்கப்பட்ட* *17 (ஆ) குற்றச்சாட்டு* - *ஒழுங்கு நடவடிக்கை கைவிட்டு இறுதி ஆணைகள் வெளியிட வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...*

*நாமக்கல் கல்வி மாவட்டம்*-   
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி* *ஆசிரியர்களின் மீது தொடுக்கப்பட்ட* 
*17 (ஆ) குற்றச்சாட்டு* 
- *ஒழுங்கு நடவடிக்கை கைவிட்டு இறுதி ஆணைகள் வெளியிட வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...*

வியாழன், 1 ஏப்ரல், 2021

இறுதி எச்சரிக்கை போராட்டமே!**********கல்வித்துறையில் கொட்டம் அடிக்கும் கறுப்பாடுகள்!நாமக்கல் மாவட்டத்தின்தொடக்கக்கல்வித்துறையில்! கொடுமைக்காரர்களின் ஆட்டம்-பாட்டம் -கொட்டம் கல்வித்துறையில்!

இறுதி எச்சரிக்கை போராட்டமே!
**********************
கல்வித்துறையில் கொட்டம் அடிக்கும் கறுப்பாடுகள்!

நாமக்கல் மாவட்டத்தின்
தொடக்கக்கல்வித்
துறையில்! கொடுமைக்காரர்களின் ஆட்டம்-பாட்டம் -கொட்டம்  கல்வித்துறையில்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் உறுப்பினராக இருக்ககூடாது!

எதற்கும் ஆசிரியர் மன்றத்திற்கு செல்லக்கூடாது!

இதைச்சொல்ல  இரண்டு உள்ளூர் அதிகாரிகள் !
ஒரு  கல்வி மாவட்ட அதிகாரி!

 இந்த இரண்டு உள்ளூர் அதிகாரிகள்  
பற்றி 
வண்டி ...
வண்டியாக ...
எழுதலாம்!பேசலாம்!!
முல்லையின் மாண்புகெடும் 
எனும் அச்சம் மேலெழும்புகிறது!

கல்வி மாவட்டத்தவர் ரொம்ப நல்லவர் என்றே நம்பினோம்!

ஆனாலும்,
உள்ளூர் அதிகாரி விரித்த
 வலையில் ...
பாசத்தில்...
விழுந்து விட்டார் போலும்!
வேடன் வலையில் விழுந்த தலைமைப்
புறாவாகி விட்டது போலும்!

இப்போதும் 
காலம் கடந்து 
விட வில்லை!
திருத்திக்
கொள்ளுங்கள்!திருந்துங்கள்!
என்றே வேண்டுகிறோம்!


திருந்த
மறுப்பின் !
தப்புத்தாளங்கள் கொட்டின் 
நாங்கள் 
திருத்துவோம்!
திருந்தச்செய்வோம்!

வண்டவாளங்கள் தண்டவாளங்களில் தொடர்வண்டிக் 
கணக்கில் 
நீளும் நிலைக்கு தள்ளிக்கொள்ளாதீர்!

இது முதல் எச்சரிக்கை!
இறுதி எச்சரிக்கை போராட்டமே!

மாவட்டம் முழுதும் துண்டறிக்கை வெளியிட்டு...
சுவரொட்டி ஒட்டி...
ஆசிரியர்களை அணி்திரட்டி ...
மல்லை நகரத்தில் மக்கள் கூடும் இடங்களில்
ஒலி பெருக்கி
வைத்து 
சொல்லக் கூடாத கதைகளை 
எல்லாம் 
சொல்லி விடும் நிலைக்கு தள்ளிக்கொள்ளாதீர்!

மல்லை சமுத்திரத்தின் உள்ளூர் அலுவலர்களே!
கல்வித்துறையின் மாண்பினை காற்றில் பறக்க விடாதீர்!

கல்வித்துறைக்கும்,
தமிழக அரசுக்கும்
களங்கம் விளைவிக்கும் கறுப்பாடுகளாகி விடாதீர்!

இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்
(கிளை).

திங்கள், 29 மார்ச், 2021

உங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

உங்கள் PAN, ஆதாருடன் இணைக்க வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்...