வெள்ளி, 23 ஏப்ரல், 2021
திங்கள், 19 ஏப்ரல், 2021
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள BRIDGE COURSE PRACTICE WORK BOOKS பயிற்சிப் புத்தகத்தில் உள்ள QR CODE வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது ?
பயிற்சித்தாள்களை முடிப்பது எப்படி?
Internet இல்லாமல் WORKBOOK பயிற்சி வீடியோக்களை பயன்படுத்துவது எப்படி?
மாணவர்கள் தங்கள் பாடங்களை படித்து worksheet இல் உள்ள வினாக்களுக்கு எப்படி விடையளிப்பது?
Click here...
செவ்வாய், 13 ஏப்ரல், 2021
கோவில் திருமணம் புதிய கட்டுப்பாடு !.திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது!.திருக்கோயிலின் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது! தமிழக இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு!
கோவில் திருமணம் புதிய கட்டுப்பாடு !.
திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது!.
திருக்கோயிலின் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது!
தமிழக இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு!
வியாழன், 8 ஏப்ரல், 2021
*🏮கொரோனா நோய்த்தொற்றினைத் தடுக்க ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 30 வரை புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?என்பதை அறிவித்து தமிழக அரசு செய்தி வெளியீடு*
*🏮கொரோனா நோய்த்தொற்றினைத் தடுக்க ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 30 வரை புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?என்பதை அறிவித்து தமிழக அரசு செய்தி வெளியீடு*
ஞாயிறு, 4 ஏப்ரல், 2021
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,
நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு
முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது. மேற்கண்ட 07.04.2021ஆம் நாளுக்கும் ஊதியம் வழங்கிடுமாறும் வேண்டி உள்ளது. இக்கோரிக்கைகள் கொண்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்,
தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.
பரமத்தி-வேலூரில் மற்றும் இராசீபுரத்தில் நடைபெற்ற ஆசிரியர் மன்றக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.
இக்கோரிக்கைகள் மற்றும் கூட்டத் தீர்மானங்கள்
நாமக்கல் மாவட்டத்தின் நாளேடுகளில் வெளியாகி உள்ளது.
#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு!
இவண்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).
சனி, 3 ஏப்ரல், 2021
தேர்தல் வாக்குப்பதிவு 06.04.2021அன்று காலை 07.00மணிக்கு தொடங்குகிறது!குறுஞ்செய்தி,புலனம்,முகநூல்,சுட்டு ,இணையம் போன்றவை வழியிலான தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு தடை!
தேர்தல் வாக்குப்பதிவு 06.04.2021அன்று காலை 07.00மணிக்கு தொடங்குகிறது!
குறுஞ்செய்தி,புலனம்,
முகநூல்,சுட்டு ,இணையம் போன்றவை வழியிலான தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு தடை!
குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிதேர்தல் அலுவலருக்குவன்மையான கண்டனம்!ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்!
குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி
தேர்தல் அலுவலருக்கு
வன்மையான கண்டனம்!
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்!
----------------------------
குமாரபாளையம்
சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவருக்கும்
பயிற்சி வகுப்பு என்று அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பயிற்சிக்கு (03.04.2021)அன்று குமாரபாளையம் பயிற்சி மையத்திற்கு வரவழைத்து விட்டு , அனைவரும் குமாரபாளையம் வந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்றப் பிறகு ,
எல்லோருக்கும் பயிற்சி இல்லை என்று அறிவிப்பு செய்வது
மிக மோசமான நடவடிக்கையாகும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்
(po )மற்றும் வாக்குச்சாவடி
முதல் நிலை அலுவலர்( po1)க்கும் மட்டுமே பயிற்சி என்று கூறி வாக்குச்சாவடி அலுவலர்களை(po 2 & po3) வெளியேற்றுவது என்ன வகை நிர்வாக முறை ?!
என்ன வகையான நடைமுறை!?
கோடைக்காலத்தின்
கொடும் வெயிலிலும்,
வெப்பத்திலும்
பலநூறு கிலோமீட்டர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை அலைக்கழிப்பதும்,
விரட்டியடிப்பதும் கண்டனத்திற்குரியதாகும்.
சட்டமன்றப்
பொதுத்தேர்தல்
காலத்தில் ,
கொரோனாத் தொற்று பரவல் நேரத்தில் பொறுப்பற்ற வகையில் செயல்படும் நாமக்கல் மாவட்ட வருவாய் துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் துரதிருச்டவசமானதாகும்.
வாக்குச்சாவடி அலுவலர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையற்ற வகையில் உடல்அளவிலும், உள்ளஅளவிலும் நோகடிக்கச்
செய்வதை குமாரபாளையம்
சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,
தமிழக அரசு தரப்பினரும் கைவிடல் வேண்டும்.
03.04.2021ஆம் நாளைய குமாரபாளையம் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நடத்தப்பட்ட விதம் என்பது கொடுமையிலும் கொடுமையானதாகும்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையற்ற வகையில் அலைச்சலை,மன உளைச்சலை உருவாக்கித் தந்துள்ள ,
தேர்தல் ஆணைய்தின் மாண்பினை சிதைத்துள்ள
குமாரபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)