வியாழன், 24 ஜூன், 2021
தமிழக அரசே! தலையிடுக! தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி இல்லை ! 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று! ஆனால் ,நாமக்கல் மாவட்டத்தில் கடந்த14.06.2021 முதலே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்க வைக்கப்படுகிறது! தொற்று பரவல் அதிகமாக உள்ள இத்தகு சூழ்நிலையில் ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது சரியான செயலாகுமா?! பள்ளிகளை திறப்பது தான் பொருத்தமானதாகுமா?!
வெள்ளி, 18 ஜூன், 2021
திங்கள், 14 ஜூன், 2021
தமிழ்நாட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் மற்றும்ஓய்வூதியர்களின் குழுக்காப்பீடுதிட்டக் குறைபாடுகள் களைவதற்கு புதிய தனிப்பிரிவு தொடக்கம்!தமிழக அரசு ஆணை!
தமிழ்நாட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் மற்றும்
ஓய்வூதியர்களின் குழுக்காப்பீடுதிட்டக் குறைபாடுகள் களைவதற்கு புதிய தனிப்பிரிவு தொடக்கம்!
தமிழக அரசு ஆணை!
கோவிட்-19, இது குறித்த பெரும் எச்சரிக்கை உணர்வோடு தமிழகத்தில் கல்விப்பணிகள் தொடங்கட்டும்!கல்விச் சிறந்த தமிழகம் உதிக்கட்டும்!நம்மில் எவர் ஒருவரையும் இழக்காது தமிழகத்தின் பொதுநலன் வளர்ப்போம்!-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).
அன்பானவர்களே! வணக்கம்.
🙏.
கோவிட்-19 ,
இந்தப் பெயரே இன்றையக் காலத்தில் உருமாறி, பெயர் மாறி ,
தேச எல்லைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் தாண்டி , அடுத்தடுத்து சூறாவளியாகத் தாக்குகிறது;
பேரழிவுகளை உருவாக்குகிறது
என்பதை நாம். அனைவரும் நன்கறிவோம்!
இந்நிலையில், எத்தகு மாற்றங்கள் நடந்தேறினாலும்,
நாம் பாடுபட்டு நாம் பெரிதுமே விரும்பிய மாற்றமே நாம் அமைத்தாலும்,
முடிவெடுக்கும் நிவையில் உள்ளோர் அகில உலக, அகில இந்திய முடிவுகளை ஒட்டியே மாநிலத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருப்பர்.
இவைகளை முழுக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
சரக்குக் கடைகளை,
சாயாக்கடைகளை திறப்பது போன்றவற்றில் பெரும்இலாபம் யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
கல்விக்கூடங்களைத் திறக்கச்செல்வதின் மூலமாக , தமிழ்நாட்டு பொதுக்கல்வியை எப்பொழுதும் தன் உயிரினும் மேலானாதாகக் கட்டிக்காத்து வரும் தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தினரில்
இழப்பு என்ற ஆபத்தான நிலை , பேரவலமான நிலை உருவாகாமல்
மிகுந்த கவனத்துடன் பள்ளிக்கல்விப் பணிகளில் செயல்படுங்கள்.
பெருந்தொற்றை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்.
கொரில்லா தாக்குதல் முறையையும் தூக்கி முழுங்கி ஏப்பம் விட்டு அடுத்தடுத்து ஆள்கள் தேடும் நவீனமானதாகும் இப்பெருந்தொற்று என்பதை முழுக்கவனத்தில்- கணக்கில் கொண்டு செயல்படுங்கள்.
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை முழுமையாக, முறையாக
பின்பற்றச் செய்யுங்கள்!
அலுவலக நிருவாகப் பணிகளை கும்பமேளா கணக்கில் செயல்படுத்தும் அலுவலர்கள் இன்றும் இருக்கத்தான் செய்வார்கள். பாவம்!அவர்கள் என்று விட்டு விடாதீர்கள். தமிழகஅரசின் நோய்த்தடுப்பு விதிகளைப் பாடம் எடுத்துக்காட்டுங்கள்.
தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் முககவசம் இல்லாத எவரையும் அனுமதிக்காதீர்கள.
தனிநபர் இடைவெளி/சமூக இடைவெளி போன்ற இவைகளில் எந்த விதமான சமரசமங்களும் செய்துக்கொள்ளாதீர்கள்.
தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசியர்கள் குழந்தைமையை கொண்டாடுங்கள்.
ஆனால்,அதே நேரத்தில்
தங்கள் நலனை, தங்களைச் சார்ந்தோரின் உடல்-மன நலன்களில் பெரிதும் கவனம் கொள்ளுங்கள்.
கோவிட்-19, இது குறித்த பெரும் எச்சரிக்கை உணர்வோடு தமிழகத்தில் கல்விப்பணிகள் தொடங்கட்டும்!
கல்விச் சிறந்த தமிழகம் உதிக்கட்டும்!
நம்மில் எவர் ஒருவரையும் இழக்காது தமிழகத்தின் பொதுநலன் வளர்ப்போம்!.
நன்றி!
இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).
ஞாயிறு, 6 ஜூன், 2021
சனி, 5 ஜூன், 2021
புதன், 2 ஜூன், 2021
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)