புதன், 17 நவம்பர், 2021

கோவிட்-19 இறப்பு கண்டறிதல் குழு அமைத்து அரசாணை வெளியீடு!








 

பள்ளிக்கல்வி_ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டுதல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறை


 

தைப் பொங்கல்-2022 க்கு 20 பொருள்கள் கொண்டு தொகுப்பு !தமிழ்நாடு அரசு அறிவிப்பு!


 

கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கானதாக மாறட்டும்! ஆ_கிருஷ்ணமூர்த்தி

 கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கானதாக மாறட்டும்! #ஆ_கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் கூட்டுறவு செயல்பாட்டிற்கு தற்போது அமலாக்கப்பட்டு வரும் தாராள மய கொள்கை, தேசிய பணமாக்கல் திட்டம் பெரும் சவாலாக உள்ளது‌. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளித்துவத்தின் கேடுகள் கூட்டு றவை செல்லரிக்கச் செய்துள்ளது. ஆனாலும் அண்டை மாநிலமான கேரளத்தில் அனைத்து துறைகளிலும் கூட்டுறவின் பங்கு மகத்தானதாக உள்ளது. வேளாண் மை, கட்டுமானம், மருத்துவமனைகள், மருந்தகங் கள், உணவகங்கள், காய்கறி விற்பனை, பண்டக சாலை கள், பொது விநியோகம் என பன்முக பணிகளில் கூட்டுறவு அமைப்புக்கள் ஈடுபட்டு மக்களுக்கான இயக்கமாக மாறி உள்ளது. வங்கி சேவையில் மிகப்பெரும் பங்காற்றி சாதா ரண மக்களும் பயன்பெறும் வகையில் எளிமையாக் கப்பட்டுள்ளது மட்டுமல்ல 24 மணி நேரம் இயங்கும் கூட்டுறவு வங்கி கிளைகள், விடுமுறை நாட்களில் இயங்கும் கூட்டுறவு வங்கி கிளைகள் என மக்களுக் கான சேவையில் முன்னிற்கும் அமைப்பாக உள்ளன. சுகாதாரத் துறையில் கூட்டுறவு மருத்துவமனைகள் தடம் பதித்துள்ளன. வழிகாட்டி மாநிலம் கூட்டுறவு வரலாற்றில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உண்டு. இந்தியாவிலேயே முதன்முதலாக திரு வள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில்தான் விவ சாயிகளுக்கு என முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904இல் ஏற்படுத்தப்பட்டது. இன்றும் மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு கடன் சங்கம் (டி.யு.சி.எஸ்) (1904), காஞ்சிபுரத்தில் முதல் நகர கூட்டுறவு வங்கி (1904), சென்னையில் முதல் நிதி உதவி வங்கி (தற்போதுள்ள டிஎன்எஸ்சிபி) (1905), மது ரையில் முதல் மத்திய கூட்டுறவு வங்கி (மதுரை-இராம நாதபுரம்) (1913), சென்னையில் கூட்டுறவு அச்சகம் (1919), அயனாவரத்தில் பால் வழங்கும் சங்கம் (1927), ஈரோட்டில் கைத்தறி நெசவாளர் சங்கம் (1941) ஆகியவற்றை துவக்கி வழிகாட்டியது தமிழகம் தான். இந்தியாவிலேயே கூட்டுறவாளர் முதல் மாநாடு காஞ்சிபுரத்தில் 1909இல் நடைபெற்றுள்ளது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் வளர்ந்த கூட்டு றவு அமைப்புகள் மூலம்தான் நாட்டின் விடுதலைக்கு பின்பும் வறுமை ஒழிப்பு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சிறுதொழில் விரிவாக்கம், சமூகநலத்திட்டங்கள் அமலாக்கம், ஐந்தாண்டு திட்டப் பணிகள், கைத்தறி, வீட்டுவசதி, பொது விநியோகம், பேரிடர் காலத்தில் மக்களுக்கான நிவாரணங்கள் என பன்முகத்தன்மை யுடன் கூட்டுறவு அமைப்புகளின் பணி விரிவுபடுத்தப் பட்டது. மக்களாட்சி முறையில் நிர்வாகம் என்பது கூட்டுறவின் தத்துவம். இன்றும் இரண்டு கோடிக்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட 24000க்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் -தலைவர்கள் / துணைத் தலைவர்கள் என பரந்து விரிந்த ஜனநாயக அமைப்பாக கூட்டுறவு உள்ளது. 2013ஆம் ஆண்டு கூட்டுறவு தேர்தல் நடை பெற்றது. கடந்த 2018 மே மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் 2018இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை அனைத்து நிலை தேர்தல்கள் நிறைவடையாமல் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 97-ஆவது திருத் தத்தின்படி அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்க ளின் தேர்தல் ஆணையம் சுயேச்சையாக செயல் பட்டு, கூட்டுறவு தேர்தல் ஜனநாயகமாகவும், நேர்மை யாகவும் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டது என்பதுதான் கடந்த‌ கால ஆட்சியின் அனுபவம். கேள்விக்குறியாக்குகிறது கூட்டுறவு நிறுவனங்களில் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பாக ஊடகங்களிலே வரக்கூடிய செய்திகள் கூட்டுறவின் நோக்கத்தை சிதைத்து விடுமோ என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளது.. நகை அடமானக் கடனில் துவங்கி பயிர்க்கடன் வழங்கல், தள்ளுபடி செய்தல், கொள்முதல், விற்பனை, ஏலம் என பல்வகை யில் கூட்டுறவு அமைப்புகளின் நிதி ஆதாரம் சுரண்டப் பட்டு வருவதை தடுத்திட உறுதியான நடவடிக்கை தேவையாக உள்ளது. குறிப்பாக தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி , புதிய 23ஆட்சி அமைந்தவுடன் நகைக்கடன் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் ஏராளமான விதிமீறல்கள், முறை கேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்தது கூட்டுறவு அமைப்பின் மீதுள்ள நம்பிக்கைத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆய்வுகள் முடிந்த பின் 2021நவம்பர் 1.அன்று நகைக் கடன் தள்ளுபடி பயனாளிகள் குறித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதேசமயம் விதிமீறல்கள், முறைகேடுகள் தொ டர்பாக அரசின் நடவடிக்கை என்ன என்பதில் அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் வைப்பீடுகள் வைத்தி ருப்போரின் நம்பிக்கை பெற பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த... விலை உயர்வை கட்டுப்படுத்த இன்றைய தேவை பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டியதே. தர மான பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்வது மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு பொது விநியோக திட்டத்தை நீட்டிப்பது வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்த உதவும். ஆனால் ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை ஏற்று தற்போதுள்ள “அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம்” சிதைந்து போவதற்கான பணிகள் துவக்கப்பட்டு விட்டன. வேளாண் கடன் வழங்குவதில் குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர்க்கடன், தானிய ஈட்டுக் கடன், கூட்டுப் பொறுப்பு குழுக்கடன், வேளாண் சார்ந்த முதலீட்டுக் கடன், உறுப்பினர்களுக்கு பங்கு மூலதனக் கடன் மற்றும் வேளாண் சாராக் கடன் எளிதில் கிடைப்ப தற்கான வழிவகைகள் இன்றைக்கு இல்லை என்பது தான் யதார்த்தமான நடைமுறை. கந்துவட்டியிலிருந்து விடுதலை பெற... சிறு தொழில்முனைவோர், பூ, பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், பெட்டிக் கடை வைத்திருப்போர், மீன் விற்பனை செய்வோர், தெரு வியாபாரிகள் என தங்களது வாழ்வாதாரத்திற்காக சிறு வணிகம் செய்வோருக்கு கடன் வழங்குவது எளிமைப்படுத்தப் படுவதில்லை. இவ்வகைக் கடன் வழங்க கூட்டுறவு நிறு வனங்களும் முன்னுரிமை வழங்குவதில்லை.இதன் விளைவே இன்றைய கந்து வட்டிக்கொடுமை. மீட்டர் வட்டி, ரன்வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, புல்லட் வட்டி என வட்டி விவரங்கள் அனைவரையும் கவலையடையச் செய்து வருகிறது. பணபலம், சாதிபலம், அதிகார பலம், அரசியல் பலம் என சகலத்தையும் பயன்படுத்தி மக்களை கசக்கி பிழியும் கந்துவட்டிக்காரர்களிட மிருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்க அரசு கூட்டு றவு அமைப்புகளின் மூலம் தான் எளிதாக நட வடிக்கை எடுக்க இயலும் . கந்துவட்டித் தடைச்சட் டத்தை அமல்படுத்துவது, கண்காணிப்பது, ஆய்வு செய்வது தொடர்ந்து நடைபெற வேண்டும். அதே சமயம், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) மூலமாக நிதி ஆதாரத்தை பெறுவதும், தமிழக மக்களுக்கான பயிர்க்கடன், வேளாண்சார்ந்த கடன், சிறுவணிகக் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன், மகளி ருக்கான கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மற்றும் வேளாண் சாராக் கடன்கள், கைத்தறி/விசைத் தறி நெசவாளர், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோ ருக்கான கடன் வசதிகள், சமூக நலத்துறை மூலம் மகளிர் தொழிற் கூட்டுறவுகள், நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பயன்பெறக் கூடிய அளவில் வீட்டு வசதிக்கடன், சிறு, குறு தொழில் முனைவோருக்கான கடன், மீன்பிடி தொழில் மற்றும் கைத்தொழிலில் ஈடு பட்டுள்ளோர் பயன்பெறும் வகையில் கடன் வழங்கு தலை எளிமைப்படுத்தி விரைந்து வழங்க உரிய நட வடிக்கைகள் கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் நிறை வேற்ற வேண்டும். நம்பிக்கையளிக்கும் அறிவிப்பு கூட்டுறவு நிறுவனங்கள் கால் பதிக்காத வியாபா ரத் தடங்களே இல்லை எனும் அளவிற்கு நிதிசார்ந்த மற்றும் நிதி சாரா துறைகளில் வெற்றித்தடம் பதித்தவை கூட்டுறவு அமைப்புக்கள். இத்தகைய வெற்றி சரித்தி ரத்தைக் கொண்டுள்ள கூட்டுறவு இயக்கம், இன்றைய குறைபாடுகளால் மக்களிடையே நம்பிக்கை இழந்து வருகிறது. திறமையான நிர்வாகம், தரமான மேலாண் மை, ஊழியர்களின் திறன் வளர்ச்சியை பெருக்குதல் குறிப்பாக உறுப்பினர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கூட்டுறவு இயக்கத்தின் மீதான நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் உட்பட கூட்டுறவு அமைப்புக ளில் உறுப்பினர்கள் ஆகலாம். புதிய உறுப்பினர்கள் சேர்ப்புக்கு தடையில்லை என்ற தமிழக அரசின் அறி விப்புகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு கூட்டுறவு அமைப்புகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நாட்டிலுள்ள அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. தொடர்ந்து மாநில அரசுகள் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் கூட்டுறவுத் துறைக்கு ஒன்றிய அரசு தனி அமைச்சகத்தை உரு வாக்கி, அமைச்சகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒப்படைத்துள்ளது. வியப்பளிக்கும் பேச்சு அவர் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு துறையினை சீர்ப்படுத்த புதிய கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் அமுல் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய அமைச்சர் அமித்ஷா நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றும் வலிமை கூட்டுறவு முறைக்கு இருப்பதாக கூறியுள்ளார்‌. மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசா யத்தை தங்களது நிலையான வருமான வாய்ப்பாக கொண்டிருக்கிறார்கள். வேளாண் துறையை தற்சார்பு உள்ளதாக மாற்ற கூட்டுறவுமுறை உதவும் என்றும் தெரி வித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் கூட்டுறவு முறை பரவலாக அனைவருக்கும் சென்று சேரவில்லை, கூட்டுறவு முறை பின்பற்றப்படும் சில துறைகளிலும் அதன் பலன் முழுமையாக கிடைக்கவில்லை, கூட்டு றவு சங்கங்களை அரசியல் கட்சிகள் தங்களது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயல்வதும் அவற்றின் செயல்பாடுகளில் தங்களது அபரிமிதமான செல்வாக்கை காட்டுவதும் அவற்றை பலவீனப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார். அவர் பேச்சை கேட் கும்பொழுது “படிப்பது இராமாயணம் - இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி ஞாபகம் வரு கிறது. மத்தியில் ஆளும் பிஜேபி கட்சி தங்களது செல் வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக கூட்டுறவு நிறுவ னங்களை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டே உள்துறை அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது வியப்பளிக்கிறது. அனைத்து வகையிலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புக்களாய் கூட்டுறவு இயக்கம் உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. கூட்டு றவு குறித்தான பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு ஏற் படுத்தக்கூடிய விழாவாக கூட்டுறவு வார விழா அமை வது தான் சிறப்பாக அமையும். விழாக்காலத்தில் மட்டும் கூட்டுறவைப் பற்றி பேசுவது, நலத்திட்டங்கள் வழங்குவது, கேடயம் வழங்குவது போன்ற நிகழ்வுக ளுடன் நிறைவடைந்து விடாமல்,கூட்டுறவு என்பது ஒரு மக்கள் இயக்கம் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கூட்டுறவு அமைப்பு மக்களுக்கானது என்பதை உறுதி செய்ய கூட்டுறவு வார விழாக்கள் பயனுள்ளதாக அமைந்திட வேண்டும் . மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உறுதியாக செயல்படும் தமிழகஅரசு இவ்வாண்டு கூட்டுறவு0 வார விழாவினை அத்தகைய திசையில் கொண்டு செல்லும் என நம்புகிறோம். கட்டுரையாளர் : ‘கூட்டுறவை பாதுகாப்போம்’ ஒருங்கிணைப்பாளர். நன்றி: தீக்கதிர்.



அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் - உயர்கல்வித்துறை


 

செவ்வாய், 16 நவம்பர், 2021

மாணவ/மாணவிகளுக்கு நன்னெறி போதனை வழங்கி ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை பெட்டி வைத்தல் சார்ந்து CEO Proceedings

 


சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள குடும்பத்தினரின்‌ திருமண உதவித்தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு!




 

ஆசிரியர் பொதுமாறுதல் குறித்து தந்தி தொலைக்காட்சி செய்திவெளியீடு!




 

ஆய்வுக்கூட்டம் சார்ந்து நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்


 

இபிஎஸ் 95’ ஓய்வூதியத் திட்டம் வரமா? சாபமா?

 இபிஎஸ் 95’ ஓய்வூதியத் திட்டம் வரமா? சாபமா?

 #கே_பி_பாபு தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவாக வும் உச்சநீதிமன்றத்தில் திரு. நகாரா அவர்கள் தொடுத்த வழங்கில், “ஓய்வூதியம் என்பது கருணையினால் வழங்கப்படுவதில்லை; அது தொழி லாளர்கள் உரிமை” என்று தீர்ப்பு அளித்ததன் விளைவாகவும் ‘தொழிலாளர் ஓய்வூதியத்திட்டம் 95’ என்ற (EMPLOYEES PENSION SCHEME 95) திட்டத்தை 1995 நவம்பர் 16 அன்று அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வருங்கால வைப்புநிதி திட்டம் 1952 சட்டத்தின் ஒரு பகுதி யான பென்ஷன் திட்டத்தை கொண்டுவரும் போது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் கருத்துகளை கேட்காமலும், எந்த விவாதமும் இல்லாமலும் இ.பி.எஸ்1995 திட்டத்தை அவசர கதியில் அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசு 1.16% பங்களிப்பும் தொழிலாளி தனது பங்களிப்பாக, நிர்வாகம் செலுத்தும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பான 12% லிருந்து 8.33% ஐ பென்ஷன் நிதிக்காக செலுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்டம் 1971, ஆகிய இரண்டு திட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சட்டப்படியான அரசின் சம பங்களிப்பு மறுக்கப்பட்டது. இதுபோன்று தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அம்சங்கள் இந்த திட்டத்தில் உள்ளதை சிஐடியு சுட்டிக்காட்டியது. ஆனால் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் இந்த திட்டத்தை 10 ஆண்டு களுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படும் என்று உறுதி யளித்ததை மற்ற சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால் கடந்த 26 ஆண்டுகளில் எந்த முன்னேற்ற மும் செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் பறிப்பு இபிஎஸ் 95 - திட்டத்தில் தொழிலாளி சேர்வதற்கான விருப்பத்தை கேட்காமல் சேருவதற்கு கட்டாயப் படுத்தக் கூடாது என்று சி.ஐ.டி.யு சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஒன்றிய அரசு, இ.பி.எஸ்95 திட்டம் ஒரு சிறந்த சமுகநல பாதுகாப்பு திட்டம் என்றும், இதில் பென்ஷன் மட்டுமல்ல, தொழி லாளி விரும்பினால் 1/3 பென்ஷனை விட்டுகொடுத்து (COMUTATION SCHEME) தனது பங்களிப்பில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளலாம் என்றும்; ‘போட்ட முதலீடு திரும்பக் கிடைக்கும்’ (RETURN OF CAPITAL) என்ற பெயரில் 20 ஆண்டுக்கு பிறகு அவரது பென்ஷனை போன்று 100 மடங்கு தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேலும் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றும் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டது. உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு தொழி லாளர்கள் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த எல்லா அம்சங் களையும் 2008ல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக ரத்து செய்தது. இபிஎஸ் 95 திட்டத்தில் உள்ள 10(2) ஷரத்தின் படி வழங்க வேண்டிய 2 ஆண்டுகளுக்கான பணிக்கால உயர்வு (SERVICE WIGHTAGE) என்ற கூடுதல் தொகையை 2013 வரை வழங்கவில்லை. இபிஎஸ் பென்ஷனர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு தொடுத்த பிறகு 2015ல்தான் சட்டத்தில் உள்ள உரிமையை வழங்கியது. இபிஎஸ் 95 திட்டத்தில் 1/3 பங்கு பென்சனை விட்டுக் கொடுத்து கம்யூடேசன் செய்தவர்களுக்கு 100 மாதம் தொகையை முன்பணமாக அளித்து விட்டு 100 மாதம் முடிந்த பிறகும் அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் 1/3 தொகையை பிடித்தம் செய்து வந்தது. இ.பி.எஸ் பென்ஷனர்களின் தொடர் போராட்டத்தின் காரண மாகவும், மத்திய வாரியக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டதாலும் 2020 பிப்ரவரியில் 180 மாதம் முடிந்தவர்களுக்கு முழுபென்ஷன் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது. குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.1000கூட பெற முடியாத அவலம் இபிஎஸ் பென்ஷனர்களின் தொடர் போராட்டத் திற்குப் பிறகு மத்தியில் ஆட்சியிலிருந்த மன்மோகன்சிங் அரசு குறைந்தபட்ச பென்ஷனை அமல்படுத்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பகத்சிங் கோஷாரியா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்ட குழுவின் தலைவர், தொழிலாளி செலுத்துவது போன்று ஒன்றிய அரசும் தனது பங்காக பென்ஷன் நிதிக்கு 8.33% பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றும் பென்ஷன் தொகைக்கு செலுத்தப்படும் சம்பள வரம்பை ரூ.6500/-லிருந்து ரூ.15,000/-மாக உயர்த்த வேண்டும் என்றும் குறைந்தபட்ச பென்ஷனாக இடைக்கால நிவாரணமாக ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்றும், பென்ஷனை பஞ்சப்படியுடன் இணைக்க வேண்டும் என்றும் 2013ல் ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.1000 மட்டும் 01/04/2014 முதல் வழங்குவதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்ச ரவை 2013 மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. 2014 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு 01/04/2014 என்பதற்கு பதில் 01/09/2014 முதல் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.1000/- வழங்க உத்தரவிட்டது. ஆனால் இ.பி.எஸ் திட்டத்தின் அடிப்படையில் 50 முதல் 57 வயது வரையில் உள்ள குறைக்கப்பட்ட பென்ஷன் வாங்குபவர்களுக்கு ரூ.1000/- வழங்கப் படுவதில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள 70 லட்சம் பென்ஷனர்களில் இன்றும் 30 லட்சம் பேருக்கு மேல் ரூ.1000/-க்கும் கீழ்தான் பென்ஷன் பெறுகின்றனர். உயர்த்த மறுக்கும் ஒன்றிய அரசு நமது தமிழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டங்களில் இபிஎஸ் பென்ஷனர்களின் குறைந்தபட்ச பென்ஷன் உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கை களை அமல்படுத்திட பலமுறை ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில், ஒன்றிய அரசு இபிஎஸ் பென்ஷனர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு உயர் அதிகாரக் கண்காணிப்புக் குழு ஒன்றை 2018ல் அமைத்தது. அந்த குழு தனது பரிந்துரை களை 2019ல் அளித்தது. அதில் குறைந்தபட்ச பென்ஷனை உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மத்திய அறங்காவலர் குழு(CBT) குறைந்தபட்ச பென்ஷனை ரூ.3000%ஆக உயர்த்தவும், ஒன்றிய தொழி லாளர் துறை அமைச்சர் குறைந்தபட்ச பென்ஷனை ரூ.2000 ஆக உயர்த்த 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டு களில் இரண்டு முறை பரிந்துரை செய்துள்ளனர். இ.பி.எஸ் திட்டத்தில் உள்ள ஷரத்து 13(1)ன் அடிப்படையில், பென்ஷன் நிதிக்கு அடிப்படை சம்பளத்தின் உச்சவரம்பின்றி முழு சம்பளத்திற்கு 8.33% பங்களிப்பு அளிக்க விருப்பம் தெரிவித்தால் அதன் அடிப்படையில் தொழிலாளியின் முழு சம்பளத்திற்கு பென்ஷன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்பதை இபிஎப் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற பிறகு, தங்களது சம்பளத்திற் கான 8.33% பங்களிப்பை 1955 நவம்பர் முதல் வட்டியுடன் பி.எப். நிர்வாகம் கணக்கிட்டு தெரிவிக்கும் தொகையை செலுத்தி முழு சம்பளத்திற்கு பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம் என்று 27/03/2017ல் சுற்றறிக்கை வெளியிட்டது. 31/05/2017 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியிட்ட 27/03/2017 சுற்றறிக்கையை இபிஎப் நிர்வாகம் திரும்ப பெற்றது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகளால் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு அனைத்து உயர் நீதிமன்றங்களும் பென்ஷனர்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கின. ஆனால் இபிஎப் நிர்வாகம், உயர்நீதிமன்ற தீர்ப்பு களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை ஏற்க மறுத்த இபிஎப் நிர்வாகமும் ஒன்றிய அரசும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. தற்போது அந்த மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் உயர் பென்ஷன் வழங்குவதை முன் அறிவிப்பின்றி நிறுத்தியது அரசு. திருத்தங்களும் பாதிப்புகளும் 2014ல் இ.பி.எஸ் திட்டத்தில் பென்ஷன் பங்களிப்புக் கான சம்பள உச்சவரம்பை ரூ.6500/-லிருந்து ரூ.15000/- மாக உயர்த்தியது. இதன் மூலம் இ.பி.எப்க்கு வருவாயை அதிகரித்து கொண்டது. ஆனால் பென்ஷன் சம்பளத்தை கணக்கிடும் போது முன்பிருந்த 12 மாத சராசரி சம்பளம் என்பதை 60 மாத சராசரி சம்பளம் என்று மாற்றியமைத்து பென்ஷன் தொகையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பென்ஷன் கணக்கிடும் காலத்தையும் 3 பிரிவுகளாக பிரித்து அதன் மூலம் பென்ஷன் தொகை குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவுகளை எதிர்த்து பென்ஷனர்கள் தொடுத்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம், ஒன்றிய அரசு 2014 ல் கொண்டுவந்த இந்த திருத்தங்களை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இ.பி.எஸ் திட்டத்தில் 2014ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் புதியதாக பணியில் சேர்பவர்களில் ரூ.15000க்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யபடாது என்றும், பென்ஷன் திட்டமும் கிடையாது என்றும் திருத்தங்களை செய்துள்ளது. தொழிலாளி வருங்கால வைப்புநிதிக்கு செலுத்தும் 12% பங்களிப்பை 10% சதமாக குறைத்துக் கொள்ள அனுமதிப்பது; இ.பி.எஸ் திட்டதில் உள்ளவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் (NPS) மாற்றி கொள்வதற்கான திட்டத்தை யும் அறிவித்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களை அமல்படுத்துவதன் மூலம் வருங்கால வைப்பு நிதித் திட்டமும், அமைப்பும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மோடி அரசு. தமிழக அரசுக்கு வேண்டுகோள் இபிஎஸ் 95 பென்ஷனர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷனை ரூ.9000/- மாக உயர்த்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றவும்; கேரள மாநிலத்திலும் புதுச்சேரி மாநி லத்திலும் உள்ளது போன்று இபிஎஸ் பென்ஷனர் களுக்கு மாநில அரசு வழங்கும் முதியோர் பென்ஷன் தொகையையும் சேர்த்து கேரள அரசு வழங்குவது போன்று இபிஎஸ் பென்ஷனர்களுக்கு கூடுதலாக ரூ.1600/- வழங்கிடவும் தமிழக அரசின் நடவடிக்கை யை எதிர்பார்க்கிறோம். ஒன்றிணைந்து போராடுவோம் வருங்கால வைப்புநிதி அமைப்பை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை முறியடித்து இபிஎப்-ஐ பாதுகாக்க பென்ஷனர்களும், இன்றைய தினம் பணியிலிருக்கும் தொழிலாளர்களும், இணைந்து போராட இ.பி.எஸ் பென்ஷன் அறிவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16ல் சூளுரைப்போம்! கட்டுரையாளர் : செயலாளர், சென்னை இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்கம்.