புதன், 12 ஜனவரி, 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் சரக (கிளை) பொருப்பாளர்கள் நேற்று (10.O1.2022) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் வெண்ணந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கா.வளர்மதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் சரக (கிளை) பொருப்பாளர்கள் நேற்று (10.O1.2022) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் வெண்ணந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கா.வளர்மதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். இச்சந்திப்பில் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் வைக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள்... 1.ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் போராட்ட நாட்களைப் பணிவரன்முறைப் படுத்தியும்,அந்நாட்களுக்கு உண்டான ஆணையினையும் பணப் பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். 2.பொங்கல் பரிசுத்தொகையை பண்டிகை வருமுன்னரே பெற்று வழங்கிட வேண்டும். 3.விழாக் காலமுன்பணத்திற்கு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்பணம் பெற்று வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அளிக்கப்பட்டது.





மாசற்ற ஆற்றலுக்கு மாறும் ஜெர்மனி – அணுவுலைகளை மூடுகிறது

 மாசற்ற ஆற்றலுக்கு மாறும் ஜெர்மனி – அணுவுலைகளை மூடுகிறது கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமா அணுவுலையில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய விபத்திற்கு பிறகு பல்வேறு நாடுகளும் அணுவுலைகளை சார்ந்த மின்னுற்பத்தியை குறைக்கும்/கைவிடும் திட்டத்தை அறிவித்தன. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, 2022 ஆம் ஆண்டிற்குள் அணு மின்னுற்பத்தியற்ற ஜெர்மனியை உருவாக்குவோம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு அந்நாட்டில் உள்ள சிலரின் எதிர்ப்பை பெற்றது. ஆனாலும் அறிவித்ததை காப்பாற்றுவது என முடிவெடுத்தது அந்நாட்டு அரசு. கடந்த ஆண்டின் இறுதி நாளில் மூன்று அணுவுலைகளில் மின்னுற்பத்தியை நிறுத்தி அந்த உலைகளை செயலிழக்க செய்வதற்கான பணிகளைத் துவக்கியுள்ளது ஜெர்மனி. இப்போது மூடப்பட்டுள்ள மூன்று உலைகளும் 1980களில் மின்னுற்பத்தியை துவக்கி கோடிக்கணக்கான யூனிட்டுகளை உற்பத்தி செய்து லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தை கடந்த 40 ஆண்டுகளாக வழங்கியவை. ஹாம்பர்கின் வடமேற்கு பகுதியில் எல்பே நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த ப்ரொட்கோர்ப் அணு மின் நிலையத்திற்கு எதிராக, செர்னோபில் விபத்திற்கு பிறகு மக்கள் போராடி வந்தார்கள், இப்போது மூடப்பட்டுள்ளதில் இதுவும் ஒன்று. மற்ற இரு உலைகள், ஹான்னோவுருக்கு அருகில் கிரோஹண்டேவிலும், முனிச் அருகில் கிருறேம்மிங்கெனிலும் உள்ளன. இன்னும் மீதமுள்ள மூன்று உலைகளும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் அனல் மின் நிலையமற்ற ஜெர்மனியாகவும் உருவாக்கி அந்நாட்டின் எரிசக்தி உத்தரவாதத்தை எந்த வகையிலும் சிதைந்து போகாத வகையில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் பயன்பாடு முழுமையாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஜெர்மன் நாட்டின் காலநிலை துறை அமைச்சர் ராபர்ட் ஹபெக். ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக 4 அணுவுலைகள் கூடங்குளத்திலும், உடன்குடி, எண்ணூர் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுரையில் அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.


 





முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும்! தலைமைச்செயலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம் -தனி பிரிவு அலுவலர்


 

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி

| தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத் திருநாள் - தமிழ்நாட்டு மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாள் வாழ்த்து


 

பள்ளிக்கல்வி_ மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டம் ஆணையர் செயல்முறைகள்



 


செவ்வாய், 11 ஜனவரி, 2022

தேசிய திறன்வழித்தேர்வு 05.03.2022அன்று நடைபெறுகிறது!

தேசிய திறன்வழித்தேர்வு 05.03.2022அன்று நடைபெறுகிறது!

வட்டாரக்கல்வி அலுவலருக்கு 3 சத உயர்நிலைப்பள்ளித்தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்து இயக்குனர் செயல்முறை!



 

e-Filing AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued.

On consideration of difficulties reported by taxpayers/stakeholders due to Covid & in e-filing of Audit reports for AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued. https://t.co/2Ggata8Bq3



 

2021-2022 ம் கல்வியாண்டு எட்டாம் வகுப்புகளுக்கான NMMS தேர்வு தேதி (05.03.2022) அறிவிப்பு