சனி, 19 பிப்ரவரி, 2022

*🖥️TN EMIS SCHOOL ATTENDANCE APP NEW UPDATE-VERISON-0.12-- DIRECT LINK.

*🖥️TN EMIS SCHOOL ATTENDANCE APP NEW UPDATE-VERISON-0.12-- DIRECT LINK.

High court order copy - பணியில் சேர்ந்த 2004-ம் ஆண்டு முதல், பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்க கோரி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு நகல் 


 Click here https://drive.google.com/file/d/1dq_dbIzfULZyMXTzJsOFTJ33ch-nfTid/view?usp=drivesdk

இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு அறிவிப்பு


 

Go.No:01/16.02.2022 மாற்றுதிறனாளித்துறை_2021_2022 ம் நிதியாண்டு ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மூளை முடக்குவாதத்திறனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் வழங்குதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு



 

தமிழ்நாட்டில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை, தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு கைவிட வேண்டுமென்று கோரி,மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்








தொலைதூரக் கல்வியில் பொறியியல் மாணவர் நேரடித் தேர்வு ஒத்தி வைப்பு!


 

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

முன்மழலையர் வகுப்பு இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் -* *நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ம் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் - கலந்தாய்வு இரத்து செய்து மறுகலந்தாய்வு நடத்த ஆசிரியர் மன்றம் கோரிக்கை!



 

நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ம் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் - கலந்தாய்வு இரத்து செய்து மறுகலந்தாய்வு நடத்த ஆசிரியர் மன்றம் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை!

 நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ஆம் நாள் கலந்தாய்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு, 23.02.2022 அன்று முறையான வகையில் மறுகலந்தாய்வு நடத்திட‌ல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு ‌தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்! -------------------------------------------- நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 அன்று நடைபெற்ற முன்மழலையர் வகுப்பு ஆசிரியர்‌ கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் காட்டப்படாமல் (eligible vacant place) கலந்தாய்வு இடமாறுதல் நடந்தப்பட்டு உள்ளது என்று ஆசிரியர்கள்‌ குற்றம்‌ சாட்டுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சில ஒன்றிய ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் (eligible vacant place) காட்டப்படாமல் கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் கலந்துக் கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தேவை பணியிடங்கள் (need post) மட்டும் காட்டப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறாக முறையற்ற முறையில் இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்தகு நடைமுறை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளுக்கு‌‌ நேர் விரோதமானதாகும். இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொண்டுள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் (eligible vacant place) காட்டப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட வேணடும்‌ என்று கோரியதன் காரணமாக ஒரு சில ஒன்றியங்களில் இடமாறுதல் கலந்தாய்வு 23.02.2022 அன்று நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.இத்தகு நடைமுறை வரவேற்கத்தக்கதாகும் ஆனாலும், பாகுபாடுகள்‌‌ நிறைந்ததாகும். ஒரு வருவாய் மாவட்டத்தில் இரண்டு வேறு வேறு வகையான‌ முறைகளில் கலந்தாய்வு என்பது ஏற்கதக்கது ஆகாது. நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் ஒன்றியங்களுக்கு ஏற்றவாறு வேறு‌ வேறு வகையான‌ நடைமுறைகள்- அனுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு இருப்பது ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தந்துஉள்ளது. ஒரே சீரான‌ முறையில் 17.02.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் முன்மழலையர்‌ வகுப்பு இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறவில்லை என்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் குற்ற்ம்‌ சாட்டுகின்றனர். தாங்கள், மேற்கண்டவற்றை கனிவுடன்‌ பரிசீலித்து நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 அன்று நடைபெற்ற முன்மழலையர் வகுப்பு கலந்தாய்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு , 23.02.2022 அன்று முன்மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு எவ்விதமான பேதமும் - பாகுபாடுகளும் அற்ற வகையில் காலிப்பணியிடங்கள் (eligible vacant place) மற்றும் கூடுதல் தேவை. பணியிடங்கள் (additional Need place)‌ தொகுத்து முன்கூட்டியே வெளியிடப்பட்டு இணையவழியில் மறுகலந்தாய்வு நடத்தப்படும் வகையில் வழிவகை கண்டு உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌நாமக்கல் மாவட்டம் அமைப்பு வேண்டுகிறது


புதன், 16 பிப்ரவரி, 2022

வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டுகளை விரைந்து அளித்திடல் வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

பெருமாநகராட்சி/மாநகராட்சி/நகராட்சி /பேரூராட்சி பகுதிகளின் நடுநிலைப் பள்ளிகள் நகர்புறத்தேர்தலுக்கு அவசியமான‌‌ -தேவையான தளவாடங்கள்‌ தொகுத்து ஒப்படைத்திடும் நாள்! நடுநிலைப் பள்ளிகளின் முன்மழலையர் வகுப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாள்! இடைநிலை ஆசிரியர்களின்‌ பணியிடநிரவல் கலந்தாய்வு நாள்! வரையறுக்கப்பட்ட‌விடுப்பு நாள்! இந்தப்பயிற்சியை கொஞ்சம் ஒத்திவைக்கலாமே!?