செவ்வாய், 15 நவம்பர், 2022

"பள்ளிப் பார்வை" செயலியில் அலுவலர்கள் வகுப்பறையை உற்றுநோக்கி பதிவிடும் தகவல்கள்...

click here...

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை முழுமையாக அமல்படுத்திட வேண்டும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை ஒன்றியப் பொதுக்குழு வலியுறுத்தல்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை  ஒன்றியத் தேர்தல் 12.11.2022 (சனி)
முற்பகல் 09.30 மணிக்கு பொத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. 

பரமத்தி ஒன்றியச் செயலாளர் க.சேகர் தேர்தல் ஆணையாளராகவும்,
மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர்  மு.இரவி மற்றும் திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர்  சி.கார்த்திக் 
ஆகியோர் பொறுப்பேற்று தேர்தலை நடத்தினர்.

இத்தேர்தலில் கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

கபிலர்மலை ஒன்றியப் பொறுப்பாளர்களாக 26 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலுக்கு 
பிறகு ஒன்றியத் தலைவர் ந.மணிவண்ணன் தலைமையில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் இர.மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் முன்னிலை வகித்தார்.

மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இயக்க உரை ஆற்றினார்.

இக் கூட்டத்தின் நிறைவில்  ஒன்றியப் பொருளாளர் பொ.முத்துசாமி நன்றியுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் த.தண்டபாணி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரா.ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.சதிசு, மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல், மாவட்டப் பொருளாளர் சு.பிரபு உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 
  
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை  ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்

2.நிதி மோசடித் திட்டமான புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை முழுமையாக இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திட வேண்டும்.

3.மத்திய அரசு வழங்கியது போன்று தமிழ்நாட்டின் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 01.07.2022 முதல் 
4 சதம் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

4.பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

5.ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து விடுப்பூதியம் பெறும் உரிமையை தமிழ்நாட்டின் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

6. மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில்  இருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

7.தாய்மொழி வழிக்
கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்படல் வேண்டும். தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை முழுமையாக அமல்படுத்திட வேண்டும்.

8.தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 100 சத வேலை வாய்ப்பினை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

9.படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு  கனவினை சிதைக்கும் வகையிலான இந்திய ஆட்சிப்பணி அலுவலர் திரு .பரூக்கி தலைமையிலான மனிதவள சீர்த்திருத்தக் குழுவினை முற்றிலுமாக கலைத்திட வேண்டும்.

10.தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
பதவி உயர்வின் வழியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்‌.

11.ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் இந்தித் திணிப்பு பரிந்துரைகள் திரும்பப்பெறப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து-சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

12. உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தினை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரித்திட வேண்டும். 10 சத இட ஒதுக்கீடு சட்டத்தினை எதிர்த்து அரசியல் உறுதியோடு சட்டப் போராட்டங்களை தமிழக அரசு நடத்திட வேண்டும்.

-இர.மணிகண்டன் 
ஒன்றியச் செயலாளர்.
  
.

ஞாயிறு, 13 நவம்பர், 2022

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு ~ நவம்பர் 3 ஆவது வாரம்...

பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய முன்னேறிய வருப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கூட்டத்தில்‌ திறைவேற்றப்பட்ட தீர்மானம்‌...

வட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்...

Click here....