எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன் அனுமதித்திடுக!
சங்க உறுப்பினர்களின் தேவைக்கு உடனுக்குடன் கடன் தந்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
சங்க உறுப்பினர்களின் தேவைக்கு உடனுக்குடன் கடன் தந்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
பணிப்பதிவேடுகள் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகப் பொறுப்பில் கலந்தாய்வு மையங்களுக்கு வந்து செல்லல் வேண்டும்!
ஆசிரியருக்கு அலைச்சல் -மன உளைச்சல் ஏற்படுத்துவது கைவிட வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
10.05.2023 அன்று நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி ) முன் மேற்கொள்ளவிருந்த மாலை நேரத் தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு!
"நம்ம ஊரு சூப்பரு” என்ற அன்றாட நிகழ்வினை பள்ளியின் பெயர் மற்றும் தேதியுடன் அறியும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை superoorunamakkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிடுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்காக அனைத்து விதமான மாறுதல் கலந்தாய்வுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.
👇👇👇👇👇👇👇
1.ஒன்றிய இடைநிலை ஆசிரியருக்கு பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கிட வேண்டும்.
2. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு கால அட்டவணையை மாற்றி திருத்திய கால அட்டவணை வெளியிட வேண்டும்.
3.பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்க கூடாது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம்* சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 06.05.2023 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத்தலைவர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்
ஒன்றியச் செயலாளர் திரு.சி.மோகன்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு.சு.சிதம்பரம் அவர்கள் முன்னிலை உரை ஆற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் திரு.அ.சுப்ரமணியம்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி. கு.பாரதி அவர்கள்,
இராசிபுரம் ஒன்றியச் செயலாளர் திருமதி. வே.இலட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்..
மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்..
மாவட்டச் செயலாளர் திரு மெ.சங்கர் அவர்கள் ஆர்ப்பாட்ட கோரிக்கை உரை ஆற்றினார்..
மாநில பொருளாளர் *திரு.முருகசெல்வராசன்* அவர்கள் ஆர்ப்பாட்ட பேருரை ஆற்றினார்..
ஒன்றியப் பொருளாளர் திரு.க.கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூறினார்..
பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு- விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - அங்கன்வாடிப் பணிகள் - கோடை விடுமுறை - மே மாதம் 10 ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-7(2)) துறை
அரசாணை (நிலை) எண்.25 நாள்: 06.05.2023