சனி, 4 நவம்பர், 2017

அரசாணை -652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட திட்ட அலுவலங்களில் வட்டார தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில் -இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms ) அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

TN 7th PAY COMMISSION - விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்...


✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.* ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி...


மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ஓவியப் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில்,  6, 7 மற்றும் 8-ம்  வகுப்பில்படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 'நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரைபயன்படுத்தவும்' என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெற வுள்ளது.இதில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்ததாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அனைத்துப் பள்ளி களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

SCERT-புதிய பாடத்திட்டம்-பாடபுத்தகம் உருவாக்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

DEE PROCEEDINGS-தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் -மழலையர் தொடக்கப்பள்ளிகள்-சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பயிற்சி நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது -சார்பு

இனி CRC ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் பயிற்றுநர்களே செயல்படுவார்கள்


வெள்ளி, 3 நவம்பர், 2017

நிலநடுக்கத்தில் கட்டிடங்களை பாதுகாக்கும் கான்கிரீட் பூச்சு

குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது

சென்னை,
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனிதனித்தாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி,  CCSE-IV என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.