செவ்வாய், 21 நவம்பர், 2017
தூய்மைப்பள்ளி விருதுகள் ஆய்வுக்கு உத்தரவு...
மத்திய அரசின், தூய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு கடந்தாண்டு முதல் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும் 172 பள்ளிகளுக்கு தேசிய தூய்மைப்பள்ளி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்து வகை பள்ளிகளும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில் பள்ளிகள் சார்பில் புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த 40 பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்க வேண்டுமென அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
திங்கள், 20 நவம்பர், 2017
School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்...
☀காலை வழிபாட்டுக் கூட்டம்
( As per G O )
☀பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.
(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)
☀C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் மற்றும் மெல்லக் கற்றல் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் விபரம்
(பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)
☀SABL, SALM, ALM, Maths kit பயன்பாடு.
☀வாசிப்புத் திறன்.
☀புத்தகப் பூங்கொத்து வாசிப்புத்திறன் பதிவேடு.
☀2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.
☀Dictation in Tamil & English
☀Simple Test in Maths
☀CCE பதிவேடுகள் (Update), F(a), F(b) மதிப்பெண்கள் வழங்கியதற்குரிய முழு விபரம்
☀SMC பதிவேடு, பள்ளி மேலாண்மைப் பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.
☀TV, Computer பயன்பாடு பதிவேடு.
☀கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, காலநிலை அட்டவணை, கம்பிப் பந்தல். ( நடப்பு மாதம்)
☀தொடக்க நிலை வகுப்புகளில் SABL முறைப்படி வகுப்பு ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை கற்றல் - கற்பித்தல் செயல்பாடு, ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எழுதப்பட்டுள்ள பாடத்திட்டப்படி கற்பித்தல் உற்றுநோக்கல்.