வியாழன், 25 ஜனவரி, 2018

அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்...

INSPIRE AWARDS 2017-18~நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...

English Module For Primary Teachers-Phonetic Method-Part 1 Unit 1-6...

குடியரசு தினம்~விளக்கம்...


ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட மன்னர்கள்  இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது .
அரசியல் அமைப்புச் சட்டம் என்பது நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். 

இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தின் 6 மையங்களில் எதிர்வரும் 31.01.2018 (புதன்) பிற்பகல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்...

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக்கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள  உறுப்பமைப்புகள் தனி சங்க நடவடிக்கைகள்,
வழக்காடுதல் போன்றன மேற்கொள்வது சிறந்தசெயலாகாது என ஏற்படுத்திக்கொண்ட பொதுமுடிவின் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோபேரமைப்பினையும்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக் கோரிக்கைகளையும்  வலுப்படுத்திடும் வகையினில்,
கெட்டிப்படுத்திடும் நிலையினில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஜாக்டோ-ஜியோவின் 
பொதுக்கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் அளவில் பொதுப்போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்று வெற்றிபெறச்செய்வதென தொடர்ந்து  செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் 21.01.2018 அன்று சென்னையில்  கூடிய ஆசிரியர்மன்றத்தின்
மாநிலச்செயற்குழு கீழ்க்கண்ட  இரண்டுஅம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து   தமிழகத்தின்  
6மையங்களில்
(திருநெல்வேலி,
மதுரை,திருச்சி,
கோயமுத்தூர்,
சேலம் மற்றும் வேலூர்) எதிர்வரும் 31.01.2018 (புதன்)பிற்பகல்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென
முடிவாற்றி உள்ளது.

இரண்டு 
அம்சக்கோரிக்கைகள்:

அ) மிகைஊதியம்  பிரிவு அ மற்றும் ஆ பிரிவு ஆசிரியர் -அரசு அலுவலருக்கு   வழங்கப்படல் வேண்டும்.

ஆ) கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரப்படல்  வேண்டும்.

மேற்கண்ட இரண்டு அம்சக்கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 31.01.2018(புதன்)
05.00 மணியளவில்
பிற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம நடைபெறுகிறது.

இவ்வார்ப்பாட்டத்தில்   கிருட்டிணகிரி,தருமபுரி ,சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச்
சார்ந்த மாநில ,மாவட்ட,ஒன்றிய,நகரக்கிளைப்பொறுப்பாளர்கள்,
மன்ற முன்னோடிகள் ,
மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் பெருந்திரளாய் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள்,ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்கள் சக்திமிக்கதாய் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச்செயலாளர்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்,தமிழகமேலவையின் முன்னாள் உறுப்பினர் ,பாவலர்அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் படி நின்று தமிழ்ச்சமுதாயத்திற்க்கு பெருநன்மை தரவல்ல கோரிக்கைகளில்
ஒன்றான  கல்விமாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றிபெறச்செய்வீர்.
                 நன்றி.
           ~முருகசெல்வராசன்.  

69-வது குடியரசு தின விழா~பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வை பிப்ரவரி-13 க்குள் நடத்த உத்தரவு...


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை வருகிற பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 
இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து செய்முறை தேர்வுகளை வரும் பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.மேலும் 14ம் தேதி மதிப்பெண் அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆலோசனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதன், 24 ஜனவரி, 2018

INSPIRE AWARD 2017 - 18, Selected Students List Published ( All District )...

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில் 12-06-1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்...

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்-ஜனவரி 28 மற்றும் மார்ச் 11-பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல்- நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...