திங்கள், 26 மார்ச், 2018

ஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்~ ஜூலையில் புதிய வசதி…


ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத் தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, 'பவர் பாயின்ட்' மூலம், ஆதார் பயன்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.

தற்போது, பல்வேறு சேவைகளுக்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.

அந்த வரிசையில், 'முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி, ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும்' என, உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறினார்.

WhatsApp இன் UPI அடிப்படையிலான P2P டிஜிட்டல் பணம் செலுத்தும் அம்சம் ஒரு புதிய புரட்சி...


WhatsApp அதன் சொந்த UPI- அடிப்படையிலான P2P செலுத்தும் வசதியைத் தொடங்க தீர்மானித்தவுடன், நாட்டில் டிஜிட்டல் செலுத்தும் புரட்சி அதிக வேகத்தை பெற உத்தரவாதம் அளிக்கிறது. ஏற்கனவே போட்டியிடும் இடத்தை நுழைந்து, WhatsApp ஆனது இந்த புதிய அம்சத்துடன் 200 மில்லியனுக்கும் மேலான செயலில் உள்ள பயனர் தளத்தை இலக்காகக் கொண்டு தொடங்கும்.

பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களைத் மற்றொரு வசதியான மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய கட்டண விருப்பத்தை வழங்கும்போது, ​​தரவு பாதுகாப்பு என்பது பொதுவாக எச்சரிக்கையுடன் இருக்கும் மற்றும் சந்தையில் முக்கிய அக்கறைக்குரியதாக இருக்கும். UPI வழிக்குச் செல்வதன் மூலம், WhatsApp பணம் செலுத்தும் வங்கி அல்லது டிஜிட்டல் பணப்பையை அமைப்பதில் உள்ள ஒழுங்குமுறைத் தடைகளைத் தவிர்ப்பது வெளித்தோற்றத்தில் இருக்கும்.

வரவிருக்கும் பணம் செலுத்தும் அம்சம் WhatsApp இல் அதிக பயன்பாட்டை உட்பொதிக்கும், இது ஒரு பெரிய உடனடி செய்தியிடல் தகவல்தொடர்பு தளத்தை விட அதிகமானதாகும். பயனர்களுக்கு பல நோக்கம் மதிப்பை வழங்குவதை இலக்காகக் கொண்ட இந்த வகை கண்டுபிடிப்பு, WhatsApp கணக்கை இன்னும் அதிகமாக தொடங்குவதற்கு ஊக்கப்படுத்துகிறது, பயன்பாட்டிற்குள் அதிக நேரத்தை செலவழிக்கவும், ஒட்டுமொத்த பயனர் ஈடுபாடு மற்றும் தக்கவைப்பை அதிகரிக்கவும் – முழு பயனர் அனுபவம் திருப்திகரமாக  வழங்கப்படுகிறது.

WhatsApp எச்சரிக்கையுடன் பக்கத்தில் தவறு செய்ய வேண்டும் மற்றும் வணிக ரீதியாக இந்த அம்சத்தை தொடங்குவதற்கு முன், அது அனைத்து ஆன்லைன் கட்டண தொடர்பான அபாயங்களையும் போதுமானதாக்குகிறது. மேலும், இந்த அம்சத்தின் ஆரம்பகால தத்தெடுப்பாளர்கள், நேர்மறை உணர்வின் அலைகளைக் கிக்ஸ்டார்ட் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், இது வார்த்தைகளின் வாய் போன்ற தயாரிப்புகள் மற்றும் அம்சங்களுக்கான சக்திவாய்ந்த உந்துதலாகும்.

WhatsApp என்ன முயற்சி செய்து அதை வரிசையில் வைத்து, மொபைல் பயன்பாடுகள் இன்று பயனர்கள் என்ன தேவை மற்றும் அப்பால் யோசிக்க வேண்டும். இந்த பின்னணியில் அமைக்க, பயன்பாட்டு உலகில் இடையூறு விளைவிக்கும் அடுத்த அலை, வெட்டு-முனை தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னால் வரும்.

பயனர்களின் இடம் பகிர்வுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், சில்லறை, ஃபேஷன், பயணம், சுகாதாரம் மற்றும் உணவு விநியோக இடங்களில் உயர்ந்த-தனிப்பயனாக்கப்பட்ட, சூழ்நிலை மற்றும் அர்த்தமுள்ள எல்லா-சேனல் ஈடுபாடு பிரச்சாரங்களையும் இயக்கலாம். இது ஒரு வலுவான டிஜிட்டல் பணம்  செலுத்தும் முதுகெலும்பாக, மற்றும் வாழ்க்கை பயனர்களுக்கு அதிவேகமாக எளிதாக, குறிப்பாக சிறந்த இணைக்கப்பட்ட பெருநகர பகுதிகளில் நிறைவாக இருக்கும் .

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்...


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்ரல் 16ல் முடிகிறது. மார்ச் 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 20ல் முடிகிறது. 

பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 44 நாட்கள் கோடை விடுமுறை கிடைத்துள்ளது.

இதுத்தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோடை விடுமுறை அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.

வரும் கல்வியாண்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டுறவு சங்க தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கான ஊதிய விபரம்...

ஞாயிறு, 25 மார்ச், 2018

TET~பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தல்…


பாடப்பிரிவு அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக  அரசு அறிவித்தது. இதன்படி கடந்த 2012, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அக்.6 மற்றும் 7ம் தேதிகளில் தகுதித்தேர்வு  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தகுதித்தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பாடத்திற்கு தொடர்பில்லாத வகையில் வினாக்கள் இருந்தன.

தாள் 2 பட்டதாரி  ஆசிரியர்களுக்கான தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படும். இந்த வினாக்களை தமிழ், ஆங்கிலம், சைக்காலஜி, கணிதம்,  அறிவியல் (அ) சமூக அறிவியல் என 5 வகையாக பிரித்து ஒரு பிரிவிற்கு 30 மதிப்பெண் அளிக்கின்றனர். எந்த பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து  பட்டப்படிப்பு முடித்தனரோ அதிலிருந்து வெறும் 30 கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது.

2012 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் கணித பாடத்திலிருந்து 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. இதனால் கணித ஆசிரியர்கள்  பாதிக்கப்பட்டனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளில் மொத்தமுள்ள 150 கேள்விகளில் 110 கேள்விகள் முதன்மை பாடத்திலிருந்து கேட்கப்படுகிறது.

எஞ்சியவை  மட்டுமே பொதுவான வினாவாக கேட்கப்படும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில்  நடத்த  வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் கூறுகையில், ''ஒருவர் எந்த பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட உள்ளாரோ அதில் தேர்வு வைத்து, தகுதியுள்ளவரா  இல்லையா என முடிவு செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகள் அந்த வகையில்தான் நடக்கும். ஆனால் தகுதித்தேர்வில் மட்டும் மாறுபட்ட முறையில் வினாக்கள் கேட்கும் முறை உள்ளது. எனவே போட்டித்தேர்வுகளை போல் பாடப்பிரிவுகள்  அடிப்படையில் தேர்வு நடத்த நடவடிக்கை வேண்டும்" என்றனர்.      

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை...

இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் (OBC) வாங்குவது எப்படி?


சாதிச் சான்றிதழ் பிசி வாங்கியிருந்தால் இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி சான்றிதழ் வாங்குவது சுலபம். பிசி சான்றிதழ் வாங்கவில்லை என்றால் அதை வாங்கிவிட்டு ஓபிசி-க்கு மனுசெய்ய வேண்டும்.

ஓபிசிக்கு மனு செய்யும் போது பொருளாதாரத்தில் முன்னேறியவர் (Creamy Layer) இல்லை. பொருளதாரத்தில் பின்தங்கியவர் (Non Creamy Layer) என்பதற்கான ஆதாரம் காட்டவேண்டும்.

(Creamy Layer) என்றால் என்ன?
---------------------------------------------
ஒரு குடும்ப தலைவருடைய ஆண்டு வருமானம் ரூபாய 6 லட்சத்திற்கு மேல் இருந்தால் அதற்கு கிரிமிலேயர் என்று பெயர். அதாவது அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர் என்று பொருள். அவர் பிற்படுத் தப்பட்ட சாதியாக இருந்தாலும், வருமானம் 6 லட்சத்திற்கு மேல் இருந் தால் அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

அப்படியானல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) யார்?
--------------------------------------------------------
குடும்பத் தலைவரின் வருமானம் 6 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர். அவர் பிறபடுத்தப்பட்டோ ருக்கான சலுகைகளை பெற தகுதி உடையவர். அவர்கள் மட்டும் ஒபிசி சான்றிதழ் வாங்க வேண்டும். அதோடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) என்று தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். ஓபிசி சான்றிதழ் வழங்கும் போதே, இதையும் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள்.

பயப்பட வேண்டாம், நம்மில் பெரும்பாலனவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் (Non-Creamy) தான்!

8.9.1993 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-ஏ (Group-A) அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்களை பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக வகைப்படுத்தியிருக்கிறது. குரூப்-ஏ அதிகாரிகளுக்கு கீழே பணிபுரியும் குரூப்-சி மற்றும் குரூப்-டி பணியாளர்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களாக (Non-Creamy Layer) குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் போது, மாதந்திர வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், விவசாயத்தின் மூலம் வருகின்ற வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய சர்க்காரின் உத்தரவை மேற்கொள் காட்டி, தமிழக அரசும் விளக்க மான ஒரு ஆணையை 24.4.2000-ல் பிறப்பித்து இருக்கிறது. அதில் வருமானத்தை கணக்கில் எடுத்துக கொள்ள கூடாது என்றும் குறிப்பிட் டிருக்கிறது.

ஓபிசி சான்றிதழ் வாங்க மனு செய்யும் போது, வேலை செய்யும் அலுவல கத்திலிருந்து பெறப்பட்ட சம்பள சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால் மட்டும் கொடுக்கவும். அதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்வார்கள். சம்பளத்தை வைத்து ஓபிசி சான்றிதழ் நிராகரிக்க மாட்டார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது.
--------------------------------------------------
1. ஓபிசி சான்றிதழில் தாசில்தார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். தாசில்தார் (Head QuatersTahsildar) பதவிக்கு கீழே உள்ளவர்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் செல்லாது.

2. தமிழக அரசின் கோபுரசீல் போட்டிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3. பெயர், விலாசம் மற்றும் சாதியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனெனில் ஓபிசி சான்றிதழ் சரிபார்ப்பவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். ஒரு சிலரே தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள். பெரும்பாலனவர்கள் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள். அதனால் ஆங்கிலத்தில் சாதி சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால் சான்றிதழ் வாங்கும் போதே, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை முன் கூட்டியே கவனித்து வாங்கிவிடுவது நல்லது.

பிசி சான்றிதழ் வாங்குவது கடினம். ஓபிசி வாங்குவது அதைவிட கடினம். இவ்வளவு சிரமப்பட்டு வாங்கப்படுகின்ற ஓபிசி சான்றிதழ் 6 மாதத்திற்கு தான் செல்லுபடியாகும்.

அதனால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். இரயில்வே, வங்கித்துறை, மத்திய தேர்வு வாரியம், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (Unian Public Service Commission-UPSC), ஊழியர் தேர்வு வாரியம் (Sfaff Selection Commi ssion-SSC) போன்ற தேர்வு வாரியங்கள், சில காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விளம்பரம் செய்து, மனு பெறும் போது ஓபிசி சான்றிதழ் கேட்கிறது.

அதுவும் மனு செய்வதற்கு 6 மாதத்திற்குள் (within 6 month) பெற்றிருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த சிரமத்தை கருதி ஒரு சிலர் மனு செய்யாமல் இருந்து விடுகின்றனர். அது சரியல்ல. குறுகிய காலத்தில் ஓபிசி சான்றிதழ் வாங்க முடியவில்லை என்றால், ஏற்கனவே ஓபிசி சான்றிதழ் 6 மாத்திற்கு முன்பாக வாங்கியிருந்தால் அதனுனைடய நகலை அனுப்பி வைக்கலாம். பின்னர் வாங்கி அனுப்பலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று விட்டால். நேர்காணலுக்கு செல்லும் முன்பாக புதிய ஓபிசி சான்றிதழ் தாசில்தாரிடம் வாங்கிச் சென்றால் போதும்.  காலி பணி யிடங்களுக்கான விளம்பரங்கள் வரும் போது 27 சதவீத இட ஓதுக்கிட்டின் கீழ் மனு செய்யலாம். தகுதி இருந்தும் மனு செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோருக்கு தண்டனை - போலீசார் எச்சரிக்கை...

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர், உறவினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.

தேர்வு முடிந்து, கோடை விடுமுறை நெருங்குவதால், 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் மற்றும் சிறுவர்கள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டி, சாகத்தில் ஈடுபடுவர். தங்கள் குழந்தைகள், வீரதீர செயலில் ஈடுபடுவதாக, பெற்றோரும் உற்சாகப்படுத்துவர். 

இது சட்டப்படி குற்றம்.மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல், எந்த நபரும், பொது இடங்களில், வாகனங்கள் ஓட்டக்கூடாது. 

அதேபோல், 18 வயதுக்கும் குறைவானவர்களும், சாலை உள்ளிட்ட பொது இடங்களில், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட தடை உள்ளது.

ஆனால், தடையை மீறி, சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிப்பதால், விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதை தடுக்க, சென்னை போலீசார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு, 180ன் படி, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபரை அல்லது 18 வயதுக்கு குறைவான நபர்களை, வாகனங்கள் ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும். 

இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கலாம். 

இதனால், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், எந்த நபரும் வாகனங்கள் ஓட்டக்கூடாது. மேலும், 18 வயதுக்கு குறைவானவர்களை, அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள், வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த உத்தரவை, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த, உயர் போலீஸ் திகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர்கள் பெயருக்கு முன் டாக்டர் என போடக்கூடாது...

தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி...


பல்கலை, கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில், விருப்பப்பாட
தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்'
என, பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில், துறைகளுக்குள்ளும், பிற துறைகளிலும், விருப்பப் பாடங்களை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்கு, பாடங்களின் தரம், முக்கியத்துவம் அடிப்படையில், மதிப்பெண் பட்டியலில் புள்ளிகள் சேர்க்கப்படும்.

 இந்நிலையில், விருப்பப்பாடத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், களப்பணி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இரு புள்ளிகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் கோடை விடுமுறை முதல், இதை செயல்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறையில், கிராமம் மற்றும் குடிசைப் பகுதிகளில், துாய்மைப் பணியிலும், களப்பணியிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இதற்கான பணிகளை, கல்லுாரி, பல்கலை நிர்வாகங்கள் மேற்கொள்ளவும், மாணவர்களுக்கு தகவல்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.