செவ்வாய், 3 ஏப்ரல், 2018

மூன்றாம் பருவ தொகுத்தறி தேர்வு கால அட்டவணை ஏப்ரல்-2018~ நாமக்கல் மாவட்டம்…

2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/மாநகராட்சி/அரசு தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம்...

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி (05.04.2018) ....

மேல்நிலைப் பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல்-2018 ~ மைய மதிப்பீட்டுப் பணி-முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் மற்றும் உதவித் தேர்வாளர்கள் நியமனம்: பணிமூப்பு-மதிப்பீட்டு மையம் தெரிவுசெய்ய விருப்பம் கோருதல் - நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

Pay Matrix and HRA ( Pay Band, Grade Pay, Level ) Details for Govt. Employees & Teachers...



தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்...



விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் கடல் பகுதியில்  விழுந்தது.

பீஜிங்:

சீனா 2011-ம் ஆண்டு ஏவிய 'டியான்காங்-1' என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக சீனா கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. 

விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

மார்ச் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள்  நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாக பூமியை நோக்கி பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டன.

விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி  பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தகிட்டி தீவின் வடமேற்கில் விழுந்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்ட நிலையில், தெற்கு பசிபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி 'டியான்காங்-1' விண்வெளி நிலையம் நிறுவப்பட்டது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது.

72 பேருக்கு 'பத்ம' விருதுகள்...


கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி 
நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில்  டில்லி ஜனாதிபதி மாளிகையில் 2வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண், நாட்டுப்புறபாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார்.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Additional Pension and Additional family pension instruction...

திங்கள், 2 ஏப்ரல், 2018

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய ஆய்வு முடிவு வெளியீடு...

கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்...
-------------------------------------------------
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் நடத்திய சர்வேயில் தமிழக மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை கற்பதில் தேசிய அளவில் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தேசிய அடைவுத்திறன் தேர்வு (நேஷனல் அச்சீவ்மென்ட் சர்வே) என்ற பெயரில் நாடு முழுவதும் 3, 5, 8ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம்  தேதி சர்வே ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. சாதாரணமாக தேர்வுகள் ஒவ்வொரு மாணவரின் கல்வி திறனை பரிசோதிப்பதாக அமையும். அதே வேளையில் இந்த அடைவு திறன் தேர்வு கல்வி முறையின் ஆரோக்கிய பரிசோதனையை கண்டறிய நடத்தப்பட்டது. 3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களிடம் 45 கேள்விகளுக்கும், 8ம் வகுப்பு மாணவர்களிடம்  60 கேள்விகளுக்கும் விடைகள் சேகரிக்கப்பட்டன. இந்த கேள்விகள் பாடம் தொடர்புடையது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர்கள், பள்ளி சூழல், வீட்டுச்சூழல் ஆகியவற்றை பற்றியும் அமைந்திருந்தது. 

 நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 71 மாவட்டங்களில் 1.10 லட்சம் பள்ளிகளில் இருந்து மொத்தம் 22 லட்சம் மாணவ மாணவியர் இந்த தேர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தேசிய அளவிலான கல்விக்கொள்கைக்கு வழிகாட்டுதல், தேசிய, மாநில, மாவட்ட மற்றும் வகுப்பறை அளவில் கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்துதல், அதன் வாயிலாக சிறந்த மாணவர்களை உருவாக்குதல், இந்த சர்வேயின் நோக்கம் ஆகும்.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் 1723 பள்ளிகளை சேர்ந்த 26591 மாணவர்கள், 2179 ஆசிரியர்களும், ஐந்தாம் வகுப்பை சேர்ந்த 1713 பள்ளிகளில் இருந்து 28237 மாணவர்கள், 2486 ஆசிரியர்களும், 8ம் வகுப்பை சேர்ந்த 1447 பள்ளிகளில் இருந்து 32563 மாணவர்கள், 5536 ஆசிரியர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சமூக அறிவியல், மொழிப்பாடம், கணிதம் ஆகியவற்றில் 3, 5 ம் வகுப்புகளில் இருந்து 8ம் வகுப்பை அடையும்போது தமிழக மாணவர்களின் கல்வி திறன் தேசிய சராசரியை ஒப்பிடும்போது முந்தைய வகுப்புகளைவிட கணிசமாக குறைவது தெரியவந்துள்ளது. மொழிப்பாடத்தில் மட்டும் தேசிய சராசரிக்கு இணையாக கல்வி திறன் உள்ளது. மூன்றாம் வகுப்பில் கணிதத்தில் 62 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 66 சதவீதம் பேரும், மொழிப்பாடத்தில் 62 சதவீதம் பேரும் கேள்விகளுக்கு சரியான விடையை அளிக்கின்றனர்.  இது ஐந்தாம் வகுப்பில் 49, 52, 58 சதவீதம் ஆக இருக்கிறது. 8ம் வகுப்பில் மொழிப்பாடத்தில் 57 சதவீதம் பேர் சரியான விடையை அளிக்கும்போது கணிதம் 35, அறிவியல் 36, சமூக அறிவியல் 33 சதவீதம் பேர் மட்டுமே சரியான விடை அளிக்கின்றனர். வகுப்பறையில் ஆசிரியர்கள் போதிப்பது 89 சதவீதம் பேருக்கு மட்டும் முழுமையாக புரிகிறது.  10ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களிலும் தமிழக மாணவர்கள் தேசிய சராசரிக்கும் கீழ் பின்தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வேயில் கண்டறியப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி தமிழக அரசு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். 
// தினகரன் //

List of 412 NEET training centers in all districts of Tamilnadu...

Click here...

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல்...