திங்கள், 5 நவம்பர், 2018

முன்னறிவிப்பு இன்றி மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் எப்படி: ஆய்வு நடத்த உத்தரவு

எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வாசிப்பு பயிற்சி அளிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததால், பள்ளிகளில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

மத்திய அரசின், தேசிய கற்றல் அடைவுத்தேர்வு(நாஸ்) முடிவுகள், வாசிப்பு பயிற்சியில் தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களை தரம் பிரித்து, வாசிப்பு பயிற்சி அளிக்குமாறு, செப். துவக்கத்தில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
பள்ளி நேரத்தில், கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கவும், அக்., இறுதிக்குள், பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இயக்குனர் அளித்த காலஅவகாசம், முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக, மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பின், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னறிவிப்பின்றி ஆய்வுஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில்,'பள்ளிகளில் தினசரி வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் எந்தளவுக்கு அதை உள்வாங்கி கொண்டனர் என்பது, ஆய்வின் போது தான் தெரியவரும். முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும்' என்றனர்.

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு நடத்த முடிவு

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க றிமுகப்படுத்தப்பட்டுள்ள க்.யூ. ஆர். கோடு, தீக்ஷா செயலி ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், "க்யூ.ஆர்.,' கோடு மூலமாக கற்பிக்கும் முறை நிகழாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும் பாடத்திட்ட கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் " தீக்ஷா' செயலியில் உள்ள விடியோகளை பதிவிறக்கி வகுப்புகளில் கையாளவும், ஆன்லைன் தேர்வு நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து, பள்ளிக் கல்வித்துறையின் "தீக்ஷா' திட்ட குழுவினர், பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தவுள்ளனர்.
இது குறித்து "சமக்ர சிஷ்யா அபியான்' கூடுதல் திட்ட இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு உருவாக்கிய, தீக்ஷா செயலியில், மாநில பாடத்திட்டத்திற்கான, டிஜிட்டல் கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதைப் பயன்படுத்தும் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களிடம் இருந்து, புதிதாக இச்செயலியில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்த, கருத்துக்களைப் பெறவும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்








சென்னை: நடப்பாண்டில் தமிழக அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் தேர்வு மூலம் அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் பல துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் தேர்வு தாள், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குரூப் 2 தேர்வுகளில், தமிழில் தேர்வு தாள் தயாரிக்கும் வடிவமைப்பாளர்கள் இல்லாததால் ஒரு சில தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.



இணையதளம் மூலம் ஆவணங்கள் சரிபார்ப்பதை அறிமுகப்படுத்தியததால் இந்த ஆண்டு அதிகப்படியான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர்கள் வரும் 11-ஆம் தேதி தொடங்கும் குரூப் 2 தேர்வுகளை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் தேர்வு எழுதவுள்ளனர் என தெரிவித்தனர்.

மேலும், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும்.

அண்மையில் நீதிபதி பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்தும் முடிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டோரின் விவர பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

Indian Coast Guard Recruitment 2018 Assistant Commandant | Any Degree


Indian Coast Guard Recruitment 2018 2019 |Indian Coast Guard invites Online Application for the post of Assistant Commandant Posts. Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) Jobs Notification 2018 Released. Indian Coast Guard invites online applications for appointment in following Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) post in Indian Coast Guard. 

Opening Date and time for Submission of Application is 08.11.2018 and end up by 30.11.2018. You can check here Indian Coast Guard Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Indian Coast Guard Selection Process, How to apply, Indian Coast Guard Syllabus, Indian Coast Guard Question Paper, Indian Coast Guard Admit Date Release Date, Indian Coast Guard Exam Date, Indian Coast Guard Result Release Date & other rules are given below.

Indian Coast Guard Recruitment 2018 Notification Highlights – Apply Soon

Organization Name: Indian Coast Guard

Job Category: Central Govt Jobs

No. of Posts: Various Vacancies

Name of the Posts: Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) & Various Posts
Qualification: 12th, B.E/B.Tech, Degree in Law

Job Location: All over India

Selection Procedure: Psychological Test/ Group Task/ Medical Standards, Interview
Application Apply Mode: Online

Starting Date: 08.11.2018
Last Date: 30.11.2018
Name of the Post & No of Vacancies:
Assistant Commandant
Eligibility Criteria for Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer):

General Duty – (i) Candidates who have passed Bachelor’s degree from any recognised university with minimum 60% marks in aggregate (i.e. 1 st Semester to 8th Semester for BE/B.Tech Course or 1st year to last year for Bachelor Degree candidates wherever applicable). (ii)Mathematics and Physics as subjects up to intermediate or class XIIthof 10+2+3 scheme of education or equivalent.(Candidates not in possession of Physics and Maths in 10+2(intermediate) or equivalent level are not eligible for General Duty (GD) and General Duty (SSA)
General Duty(SSA) – (i) Candidates who have passed Bachelor’s degree from any recognised university with minimum 60% marks in aggregate (i.e. 1 st Semester to 8th Semester for BE/B.Tech Course or 1st year to last year for Bachelor Degree candidates wherever applicable). (ii)Mathematics and Physics as subjects up to intermediate or class XIIthof 10+2+3 scheme of education or equivalent.(Candidates not in possession of Physics and Maths in 10+2(intermediate) or equivalent level are not eligible for General Duty (GD) and General Duty (SSA)
Commercial Pilot Entry (CPL) (SSA) – Candidates holding current /valid Commercial Pilot Licence (CPL) issued/ validated by Director General of Civil Aviation (DGCA).

 Minimum educational qualification – XIIth pass (Physics and Mathematics)with 60% marks in aggregate

Law – A degree in Law with minimum 60% marks from a recognized university. (Three years degree in law after graduation or Five years after 10+2 examination)

Salary Details:

Assistant Commandant – Rs.56100/-
Deputy Commandant – Rs. 67700/-
Commandant (JG) – Rs. 78800/-
Commandant – Rs. 123100
Deputy Inspector Genera – Rs. 131100/-
Inspector Genera – Rs. 144200/
Additional Director General – Rs. 182200/-
Director General – Rs. 205400/-

Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) Selection Procedure:
Psychological Test/ Group Task/ Medical Standards
Interview
How to apply Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) Vacancy?

Step 1: Log on to Indian Coast Guard Careers Page at official website to www.joinindiancoastguard.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 08.11.2018
Last date for Submission of Application: 30.11.2018
Date of Examination: 17 Dec 2018 to 17 Jan 2019

Online Application & Official Notification Links:
Indian Coast Guard Official Website Career Page: Click Here

Indian Coast Guard Official Notification PDF: Click Here

Indian Coast Guard Online Application Form: Click Here

Apply Mode: Online

பிப்ரவரி இறுதியில் CBSE பொது தேர்வு...


அடுத்த ஆண்டு, பிப்ரவரி இறுதி வாரத்தில், பொது தேர்வுகள் துவங்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வில், சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் தாமதமாவதால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வது பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

அதாவது, 2019 மார்ச்சுக்குள் தேர்வை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை, 15ம் தேதிக்குள் வெளியிடப்படலாம்.இந்நிலையில், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில், பொது தேர்வை துவக்க திட்டமிடபட்டுள்ளது. பிப்., இறுதி வாரத்தில்,தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் துவங்கும். அதன்பின், மற்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.எனவே, பள்ளிகள் மாணவர்களின் விபரங்களை, தாமதமின்றி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, அந்தந்த மண்டல அதிகாரிகளை அணுகவும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள் ~TNPSC…

அனைத்து தேர்வுகளுக்கும் இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி என இரண்டு வகைகளில் வினாக்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற, புகார் எழுந்தது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது: 

'குரூப் - 2' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீபாவளி தினத்தன்று அரசு அறிவிப்பை மீறி வெடி வெடித்தால் வழக்கு...

டெபிட் கார்டு எண்ணிக்கை 100 கோடியை எட்டுகிறது...

தீபாவளி பண்டிகையையொட்டி தீயணைப்பு படை வீரர்களுக்கு 2நாட்கள் விடுமுறை இல்லை~ 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க உத்தரவு…

பயோகெமிஸ்ட்ரி படித்தால் பி.எட்., சேர்க்கை இல்லை~ ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…