திங்கள், 25 மே, 2020

இந்தியாவில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது!

தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது!நசுக்கப்படுகிறது!

இந்தியாவின் இத்தகு தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அகில உலக  தொழிலாளர் அமைப்பு (ILO)விரைந்து தலையிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF)  உள்ளிட்டு 10 இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டுக்கடிதத்தின் வழியில் கோரிக்கைகளை ஐஎல்ஓ விடம் வலியுறுத்தியது!

இந்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஐஎல்ஓ ஏற்றுக்கொண்டுள்ளது!

இந்திய அரசுக்கு ஐஎல்ஓ கடிதம் எழுதி உள்ளது!
தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்க முடியுமா?

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?

நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்!

நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.!

 இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார்  (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’  என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.

சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?

1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு     தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக     எழுத உதவ வேண்டும்.

2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது

4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று     நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.

5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு     விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல்     அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.

அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.

“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.

ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச்  சேவையை செய்து கொண்டிருக்கிறது  இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.

ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் வகையில் தகவல் பலகை ஒன்று ஏன்வைக்கக்கூடாது?

ஒரு வேளை அஞ்சல் துறையினர் இதுபோன்ற தகவல் பலகை வைக்க நிதியில்லை எனில் தொண்டு நிறுவனங்கள் உதவி பெற்று போர்டு  வைக்க அனுமதிக்கலாமே!
திறந்தவெளிக் கல்விமுறையில் சட்டப்படிப்புகள்!30.06.2020 க்குள் விண்ணப்பம் செய்ய அழைப்பு!
தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தேர்வு !
 இலவச பயிற்சி வகுப்பு !
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு !
சிலப்பதிகார
காவியக்காட்சிகள் கண்முன்னே !
கண்ணகியின் கால்தடத்தில்!

காவியக் காதைகள் கல்வெட்டில்!  காவிய
மரங்கள் பூங்காவில்!
01.06.2020 அன்று முதல் மதுரையில் சிலப்பதிகாரப்பூங்கா!
மேதகு.அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணை!

வேலைநேரம்  உயர்த்தும் அரசாணை வாபசு !

உத்திரப்பிரதேசத்தில் எசுமா சட்டம் !
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு சூன் 15 இல் தொடங்குகிறது!
மாநிலத்தில் 12,600 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது!
தேர்வு குறித்து ஐயம்-அச்சம்  கொள்வோருக்கு 9266617888 அலைபேசி எண் அளிப்பு!
அழைப்பு கொடுத்தால் மனநல ஆலோசனை  குரல்பதிவுவழியில் அளிப்பு!
02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய நாள்களில் பதவி உயர்வு/பணிமாறுதல்/உரிமைவிடல்  பெற்றோர்  விபரங்களை 05.06.2020்க்குள் அனுப்பிவைத்திடக்கோரும் செயல்முறைகள்!
இனமானக்
காவலர் ,
பாவலர் ,
நிறுவனர்-
பொதுச்செயலாளர் திரு.க.மீ.,அய்யா அவர்களுக்கு புகழ்வணக்கம்!
💐🙏💐🙏💐🙏💐🙏
தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் சார்பில் இனக்காவலர், பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் புகழ் வணக்கம் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய (பரமத்தி-வேலூர்) அலுவலகத்தில் 24.05.2020 (ஞாயிறு) பிற்பகல் 03.30மணியளவில்  மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையில்  நடைபெற்றது.

ஆசிரியர் இனக்காவலர் ,
பாவலர் திரு.க.மீ., அவர்களின் திருஉருவப்படத்தினை மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி  புகழ்வணக்க உரை நிகழ்த்தினார்.

மாவட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின்  அமைப்பாளர்களான மாவட்டத் துணைச்செயலாளர்  திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ,
சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் திரு.கா.செல்வம்,
பரமத்தி் ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர், கபிலர்மலை ஒன்றியத் துணைச் செயலாளர்
திரு.இர.மணிகண்டன்  மற்றும்
கபிலர்மலை ஒன்றியத் துணைத்தலைவர் திரு.வி.சிவக்குமார்
ஆகியோர்
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.



மே 25,  வரலாற்றில் இன்று.

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் நினைவு தினம் இன்று (2013).

 டி.எம்.சௌந்தரராஜன் மார்ச் 24, 1923 அன்று மதுரையில் சௌராட்டிரக் குடும்பம் ஒன்றில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார்.

 பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

 இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான, தனித்தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.

🎼 வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

 2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். உடல்நலம் குன்றிய நிலையில் அவர் மே 25, 2013 அன்று காலமானார்.