சனி, 11 ஜூலை, 2020

*📘தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை வெளியீடு.*

*📘தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை:*

*தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.*

*இது தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில்,* *“அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம்* *மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும்* *கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.*
*பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங்கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பிட்ட 1 மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் அழைக்கப்படக்கூடாது.*


*கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள்,* *தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.*
*கல்வி உபகரணங்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும். மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.*

*பிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.*

*மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத்திருப்போர் அறைகளாக பயன்படுத்தவேண்டும். புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் விநியோகிப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இந்த நடைமுறை கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்படவேண்டும்.*

*கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினி வழங்கப்படவேண்டும்.* *ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கைகளை சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள்* *அனுமதிக்கப்படுவார்கள். கைகளை கழுவுவதற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு* *உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் வைக்கவேண்டும்.*
*கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முகக்கவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.* *முகக்கவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.*

*மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும். பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.*

*🌐ஜூலை 11, வரலாற்றில் இன்று:மூத்த தமிழறிஞரும், கல்வித்துறையின் இயக்குநருமாக பணியாற்றிய முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 11, வரலாற்றில் இன்று.

மூத்த தமிழறிஞரும், கல்வித்துறையின் இயக்குநருமாக பணியாற்றிய முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் பிறந்த தினம் இன்று.

இவர் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு என்னும் ஊரில் பிறந்தார்.

இவர் தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகளில் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர் தனது 90ஆவது வயதில் (2015) காலமானார்.

*🌐ஜூலை 17, வரலாற்றில் இன்று:திராவிட லெனின் என்று அழைக்கப்படும் டாக்டர் டி.எம்.நாயர் நினைவு தினம் இன்று.*.

ஜூலை 17, வரலாற்றில் இன்று.

திராவிட லெனின் என்று அழைக்கப்படும் டாக்டர் டி.எம்.நாயர் நினைவு தினம் இன்று

நீதித் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் டாக்டர்.நடேசனார், சர் பிட்டி தியாகராயருக்குப் பின் மூன்றாவது பெரிய தலைவர் தாரவார்ட் மாதவன் நாயர் ஆவார்.

கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள திரூருக்குப் பக்கம் உள்ள தாரவார்ட்டில் சங்கரன் நாயரின் மகனாகப் பிறந்தார்.

எல்லாப் பாடங்களிலும் எல்லாத் தேர்வுகளிலும் முதலிடத்தில் தேறிய நாயர், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம் பயின்று MPCM என்ற உயர்ந்த பட்டம் பெற்றார். பின்பு பிரான்சிலும் பயின்று ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் M.D.யும் படித்து மருத்துவத்தில் சாதனை படைத்தார்.

சென்னை திரும்பி Anti Septic என்ற சென்னை ராஜதானியின் முதல் மருத்துவ இதழை நடத்தினார். "madras Standard" என்ற ஆங்கில நாளேட்டிற்கும் ஆசிரியராக இருந்தார்.

பொது வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு காங்கிரசில் பணியாற்றிய டாக்டர் நாயர் 1904 முதல் 1916 வரை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.
அவர் காலத்தில் Madras Medical Registration Act கொண்டு மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.

ஆறரை அடி உயரமும், கம்பீரத் தோற்றமும் கொண்ட டாக்டர் .நாயரின் பொது வாழ்வில் சந்தேகம் இல்லாமலும், சுயமரியாதையோடும் பணியாற்றினார்.
1908 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோவில் குளத்திற்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்று மேயர் தியாகராயர் தீர்மானத்தை எதிர்த்த நாயர், அப்படி செய்தால் மிகுந்த வருமான இழப்பும், தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும் என்றார். சிலர் இதற்காக அவரைக் கடுமையாக விமர்சித்தும் பதவி விலக வேண்டும் என்றும் எழுதியும் பேசியும் வந்ததை அறிந்த டாக்டர்.நாயர் நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் இடமில்லை என்று கூறி பதவி விலகினார்.

காங்கிரசில் இருந்த டாக்டர் நாயர் 1915 இல் டெல்லி இம்பீரியல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில் நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.

அப்போது Dr.நடேசன், தியாகராயர் சந்தித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர வற்புறுத்தி அவரை இயக்கத்தில் சேர்த்தனர்.

டாக்டர் அன்னிபெசன்ட் பற்றியும், அவரின் நோக்கம் பற்றியும் அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை பற்றியும் Madam Besant என்ற நூலை எழுதி HIGGIN B0THAMS நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோபமுற்ற பெசன்ட் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

10-11-1917 அன்று மாண்டேகு - செம்ஸ் போர்டு சென்னை வந்து புதிய ஆட்சி அமைப்பது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்திக்க வந்த போது டாக்டர்.நாயர், நடேசனார், தியாகராயர் சந்தித்து Non-Brahmin Reservation பற்றி பேசினர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும்,பெசன்ட் அம்மையாரும் இருந்தார்கள்.

டாக்டர்.நாயர் இது பற்றி வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர்  எந்தப் பொதுக் கூட்டத்திலும் லண்டனில் பேசக்கூடாது என்று காங்கிரசாரும், சுயராஜ்யக் கட்சியினரும் நெருக்கடி தந்ததை முடியடித்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

சுயராஜ்யம் பெறுவதே நம் லட்சியம் என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக  ஆட்சியில் பங்கு பெற்று சரிசமாக வாழ்வதே உண்மையான சுயராஜ்ஜியம் என்று தன் கம்பீரக் குரலால் கர்ஜனை புரிந்தவர் டாக்டர்.நாயர்.

ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பங்களிப்பில்லாமல் நீதிக்கட்சி வேரூன்ற முடியாது என்ற நாயர் 07-10-1917 இல் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் ஆற்றிய வீர உரையால் சென்னை வாழ் தாழ்த்தப்பட்ட இயக்க நிர்வாகிகள் பெருவாரியாக நீதிக் கட்சியை ஆதரிக்க முன் வந்தனர். "நீதிக்கட்சி வரலாறு" புத்தகத்தில் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு இந்த உரையினை முழுதுமாகப் பதிவு செய் துள்ளார்.

1910 இல் அயோத்திதாசர் நாயரின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார். எம்.சி. ராஜா குறை கூறாத ஒரே நீதிக் கட்சித் தலைவர்  நாயரே.

நீதிக்கட்சி 1920 இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தளமிட்டது.

காங்கிரசிலிருந்து விலகி தீவிரமாக நீதிக் கட்சியை ஆதரித்து வந்ததற்காக டாக்டர்.நாயரை திரு.வி.க
தன் தேசபக்தனில் திட்டித்தீர்த்தார்.
"தேசிய கவி" பாரதியும் நாயரை சகட்டுமேனிக்கு விமர்சித்து அவரை வகுப்புவாதி என்றார். இதன் மூலம் நாயரின் இயக்கப்பற்று வெளிப்படும்.

1918 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றி விரிவாக விளக்கினார்.

1919 ல் மீண்டும் தன் நியாயமான வகுப்புரிமைக் கொள்கையை வலியுறுத்த லண்டன் சென்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உரையாற்ற சென்றார். 18-07-1919 அன்று அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் (17-07-1919) டாக்டர்.நாயர் காலமானார்.
 Golders Green என்ற இடத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

தான் வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம் என்ற எண்ணம் கூட எழாமல் படிப்பு, பொதுவாழ்வு என்று திறந்த புத்தகமாய் வாழ்ந்தார் டாக்டர் .நாயர்.

பல்வேறு இதழ்கள், சங்கங்கள், அய்ரோப்பிய தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாலும் காங்கிரசின் எந்தப் பிரிவு தலைவர்களும் டாக்டர்.நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என்பதே அவர் கொள்கை உறுதியை பறைசாற்றும்.

டாக்டர்.நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு சாதனைகளை, சமூகத்திலும், அரசியலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து சாதனை படைத்தது.

*🌐ஜூலை 11, வரலாற்றில் இன்று:உலக மக்கள் தொகை தினம் இன்று.*

ஜூலை 11, வரலாற்றில் இன்று.

உலக மக்கள் தொகை தினம் இன்று.

     உலக மக்கள் தொகை தினம் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்டு வருடம் தோறும் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெருகி வரும் உலக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

      உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

     தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-இன்படி 132. 42 கோடியாக இருந்தது.

       2018-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகிவிட்டது. உலக மக்கள்தொகையும் வரும் 2030 -ஆம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ஆம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது.

       அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.

     இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.

     மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன.

       இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம்.

     எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது.

வெள்ளி, 10 ஜூலை, 2020

*🌷ஈரோடு SP சக்தி கணேஷ் நாமக்கல்லுக்கும் .. நாமக்கல் Sp திரு.அருளரசு கோவைக்கும் மாறுதல்.*

*🌷ஈரோடு SP சக்தி கணேஷ் நாமக்கல்லுக்கும் .. நாமக்கல் Sp திரு.அருளரசு கோவைக்கும் மாறுதல்.*

*🌟பள்ளிக்கல்வி மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2019 2020 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பக் கோருதல்- சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் -* *நாள் :10.07.2020*

*🌟பள்ளிக்கல்வி மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2019 2020 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பக் கோருதல்- சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் -*
*நாள் :10.07.2020*




*🌟ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று சமர்ப்பிக்க ஓராண்டு விலக்கு.. கொரானா பரவல் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு!*

*🌟ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று சமர்ப்பிக்க ஓராண்டு விலக்கு.. கொரானா பரவல் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு!*

*🌟சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் _இரத்து செய்யப்படுகிறது_ - ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு!*

*🌟சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் _இரத்து செய்யப்படுகிறது_ - ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு!*

*🌐ஜூலை 10, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த தினம் இன்று.*

ஜூலை 10, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த தினம் இன்று.

  ஆர்.நாராயணசாமி எனும் இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு
(ஜூலை 10, 1919 - ஜனவரி 17, 1992)தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கட்டுரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

1948 முதல் 1977 வரை கரிச்சான் குஞ்சு அவர்கள், "மன்னை தேசிய மேல்நிலைப் பள்ளியில்" தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.


கரிச்சான் குஞ்சு ஆங்கிலம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய "சிவாஜி" இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, "கலாமோகினி" இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின.
காதல் கல்பம், குபேர தரிசனம், வம்சரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, "பசித்த மானிடம்" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. "சங்கரர்", "கு.ப.ரா.", "பாரதி தேடியதும், கண்டதும்" என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். "சுகவாசிகள்" என்னும் இவரது குறுநாவல் "மனிதர்கள்" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது.

*🌐ஜூலை 10, வரலாற்றில் இன்று:வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று.*

ஜூலை 10, வரலாற்றில் இன்று.

வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று.

இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி தான். 1806-ல் மதராஸ் படைக்கு முதன்மை தளபதியாக நியமிக்கப்பட்ட சர்ஜான் கிரடேக் என்பவர் பல விதிமுறைகளை புகுத்தினார் இந்திய படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக்கூடாது ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவு இந்து, முஸ்லிம் சமயத்தை சேர்ந்த 1500 வீரர்களுக்கு கோபத்தை மூட்டியது. அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றனர் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் இந்திய சிப்பாய்கள் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி புரட்சியில் ஈடுபட்டு அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் 100 பேரை கொன்று குவித்தனர்.இந்த தகவல் உடனடியாக ஆற்காட்டில் இருந்த ஆங்கிலேய படைகளுக்கு தெரிவிக்கப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது. அப்போது கொல்லப்பட்ட சிப்பாய்கள் 350க்கும் மேற்பட்டோரை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாக வாய்மொழி வரலாறு உண்டு. உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத்தூண் ஒன்று 1998ல் நிறுவப்பட்டது. 2006ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.