செவ்வாய், 21 ஜூலை, 2020

*😷கரோனா: உலகளவிலும், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.* *கல்வி நிறுவனங்கள் - கோவில்கள் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடுவதே!* *அரசியல் பார்வை தவிர்த்து - மனிதநேயப் பார்வையே முக்கியம்.* *இழப்பீடுகளால் நிரப்ப முடியாதது மனித உயிர் -நினைவிருக்கட்டும்!*-தி.க தலைவர்-கி.வீரமணி.

கரோனா: உலகளவிலும், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது

கல்வி நிறுவனங்கள் - கோவில்கள் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடுவதே!

அரசியல் பார்வை தவிர்த்து - மனிதநேயப் பார்வையே முக்கியம்

இழப்பீடுகளால் நிரப்ப முடியாதது மனித உயிர் -நினைவிருக்கட்டும்!

----------------------------------------------------------------------------
கரோனா தொற்று (கோவிட் 19) நாளுக்கு நாள் அதிர்ச்சி அடையத் தக்க வகையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது! பாதிக்கப்பட்டவர்கள் தொகை 11 லட்சத்தைக் கடந்துள்ளது; பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரம் ஆகும். நேற்று (20.7.2020) ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என்ற செய்தியும், அதேபோல, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஒன்றே முக்கால் லட்சத்தை எட்டியுள்ளது; உயிரிழப்பு 2,551 ஆக உயர்ந்துள்ளது என்பது மிகவும் வேதனையானது.

விரைவில் வெற்றி கிட்டக் கூடும்!

இதில் ஒரே ஒரு ஆறுதல் செய்தி - நம்பிக்கை ஊட்டக்கூடிய செய்தி - கரோனா தொற்றைத் தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் ரஷ்யாவிலும், இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டிலும் முதல் கட்ட வெற்றியைத் தந்துள்ளது என்பதும், அதுபோலவே அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இம்முயற்சிகள் அதிவேகமாக நடைபெற்று விரைவில் வெற்றி கிட்டக் கூடும் என்று தெரிகிறது.

நம் நாட்டிலும் இதற்கான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளை நோக்கி பல பல்கலைக் கழகங்கள் - மருத்துவ ஆய்வகங்கள் வெற்றிகரமான வகையில் பலன் அளிக்க, விரைந்து செயல்பட்டு வருகின்றன.

உலகில் மனித அறிவின் ஆற்றல் பலமுறை வெளிப்பட்டு, நோய்களை வீழ்த்தியுள்ள வரலாற்றில், கரோனா தடுப்பு ஒழிப்பு - ஒரு மாபெரும் சவாலாக மருத்துவ ஆய்வாளர்களுக்கு இருப்பினும், அவர்கள் வெற்றி பெறுவது உறுதி. காலத்தைத்தான் அறுதியிட்டுக் கூற முடியாது - ஏனெனில் மூன்று கட்ட பரிசோதனைகளைத் தாண்ட வேண்டியுள்ளது அல்லவா?

மருத்துவ வல்லுநர்கள் முதல் பல்துறை அறிஞர்கள் கூறியதை புறந்தள்ளக் கூடாது!

இந்நிலையில், நமது மத்திய - மாநில ஆட்சியாளர்கள் உலக நாடுகளில் பாதித்த நாடுகளின் பாதிப்பு - நம் நாட்டின் உயிர்ப் பலியோடு ஒப்பிடுகையில், நம்முடைய நாட்டில்  குறைவானதுதான் என்று விகிதாச்சார கணக்கைக் காட்டி, தாம் மேற்கொண்ட பல முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை  வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குவது ஏனோ?

ஒவ்வொரு உயிரும் முக்கியம் - இழப்புகளை எளிதில் ஏற்பது இயலாத ஒன்று என்ற நிலையில், தன்முனைப்புக்கு இடந்தராது, பல நல்ல ஆய்வுகளை - பல மருத்துவ வல்லுநர்கள் முதல் பல்துறை அறிஞர்கள் கூறியதை புறந்தள்ளாது அனைத்துத் தரப்பினரது கருத்துகளையும் - அதை அரசுகளுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கருதாது; கவலையுற்றவர்களின் ஆர்வம் மிக்க கருத்துகள் என்றே சிந்தித்து உத்திகளை - தேவைப்படும்பொழுது மாற்றிக் கொள்ளவும் தயங்கக்கூடாது!

ஏழை, எளிய, நடுத்தர, விவசாய கிராம மக்கள் நோயினால் சாவதைவிட, பசி, பட்டினியால், வறுமையால் மாண்டுவிடுவோமோ என்று அஞ்சக்கூடிய நிலை அகற்றப்படவேண்டும்.
இதற்கிடையில் சமூகப் பரவல்களாக இவை ஆகக்கூடாது என்று ஒருபுறத்தில் அரசுகள் கூறிக் கொண்டே தவறான சில நிலைப்பாடுகளை எடுப்பது, மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தராத நிலைக்குத் தள்ளிவிடும்.

அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமா?

எடுத்துக்காட்டாக,
1. மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதோ அல்லது நிலைமை சீராகும்முன் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைத் திறப்பதோ உயிருடன் விளையாடும் மிகப்பெரிய விபரீத விளையாட்டு ஆகும்!

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்‘ என்ற பழமொழிக்கொப்ப, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உயிர் இருந்தால்தான் படிப்பையே தொடர வாய்ப்பு ஏற்படும். இளம்பிள்ளைகளையும் அத்தொற்று பாதித்துள்ள செய்திகள் வரும் நிலையில், இப்படி மாணவர்களை அலைக்கழிப்பது தேவையா? யாருக்குக் கல்வி - அவர்களுக்குத்தானே - அவர்கள் உடல்நலத்திற்குத்தானே முன்னுரிமை - இந்நிலையில் அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமா?

2. அதுபோல, கோவில்கள் திறப்பதை - மக்கள் கூடும் திருவிழாக்கள் நடத்துவதை முன்பு தடை செய்தது சரியானது. (இதில் ஆத்திகம் - நாத்திகம் இல்லை; மனிதநேயத்தோடு நாம் எழுதுகிறோம்) அதை விலக்குவது தவறான முடிவு என்பதற்கு  திருப்பதி கோவில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், அர்ச்சகர்கள் பலர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். (அர்ச்சகர் ஒருவர் மாண்டார் என்பதெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் பழைய நிலை (Status Quo) இருந்திருந்தால்).

கொஞ்ச காலத்திற்கு - நிலைமை கட்டுக்குள் முழுமையாக வரும் வரையில் எந்த இடத்திலும் மக்கள் பெருங்கூட்டமாகக் கூட அனுமதிக்கவே கூடாது!

திருமண விழாக்களில் கட்டுப்பாடு, சவ அடக்கம் நிகழ்வுகளில் கட்டுப்பாடு என்று வரும்போது, இப்போது பக்தி என்ற பெயரால், மத விழாக்களுக்கு கட்டுப்பாடற்று கூடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது தேவையா?

சரத்பவாரின் கேள்விக்கு என்ன பதில்?
அயோத்தியில் இராமர் கோவில் அடிக்கல்பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அவர்கள், ‘‘இந்த கரோனா காலத்தில் இதுதான் முக்கிய பணியா?’’ என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன பதில்?

நம்மைப் போன்றவர்கள் கேட்டிருந்தால், உடனே அதற்கு வேறு வியாக்கியானங்கள் சொல்லியிருப்பார்கள்.
எப்பகுதி - வடநாடு - தென்னாடு ஆனாலும் மக்களின் உயிர் - மனித உயிர்களின் மதிப்பு முக்கியம்தானே!

இந்நேரத்தில் அரசியல் பார்வை தவிர்க்கப்பட்டு, மனிதநேயமே முன்னுரிமையும், முதலிடமும் பெறவேண்டியது அவசர அவசியம்!
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை - இழப்பீடுகளால் நிரப்ப முடியாத முக்கியமானவையாகும் என்பது நினைவிருக்கட்டும்!

- கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்.

21.7.2020 
சென்னை

*🟣மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் “மனோதர்பன் திட்டம்”* *துவக்கம் –* *மத்திய அரசு.*

மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் “மனோதர்பன் திட்டம்” துவக்கம் –
மத்திய அரசு

மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் மனோதர்பன் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் துவக்கி வைத்தார்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியான மனோதர்பன் திட்டத்தை அத்துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று புதுதில்லியில் துவக்கி வைத்தார். இது மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் திட்டமாகும். இந்த நிகழ்ச்சியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சர் திரு.சஞ்சய் டோட்ரேவும் கலந்து கொண்டார்.

மனோதர்பன் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய அளவிலான டோல்-ஃப்ரீ இலவச தொலைபேசி மைய உதவி எண்ணையும் (8448440632), மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் போர்டலில் உருவாக்கப்பட்டுள்ள மனோதர்பன் சிறப்பு இணையதளப் பக்கத்தையும் துவக்கி வைத்த பொக்ரியால் நிஷாங்க், இத்திட்டம் தொடர்பான கையேட்டையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்:-

கொவிட்-19 பெருந்தொற்று உலகளவில் ஒவ்வொருவருக்கும் சவாலான காலகட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இது தீவிரமான மருத்துவப் பிரச்சனையை மட்டுமல்ல, அனைவருக்கும் கலவையான உணர்வுகளையும், மனரீதியான-சமூக அழுத்தத்தையும் உண்டாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார். குறிப்பாக, குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் மன நலப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அதிக அளவிலான மன அழுத்தம், மனப்பதட்டம் மற்றும் பயத்திற்கு ஆட்படுவதாகவும், நடத்தை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதை உணர்ந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தொடர் கல்வியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாணவர்களின் மன நலத்திற்கும் சமமான அளவு முக்கியத்துவம் அளிப்பதன் அவசியத்தைக் கருதி மனோதர்பன் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று திரு.பொக்ரியால் கூறினார்.

கல்வி, மனநலம் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஆகிய துறைகளில் உள்ள வல்லுனர்களை உறுப்பினர்களாக கொண்டு செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மாணவர்களுக்கான மனநல உதவி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் என்றும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனநல ஆலோசனை, இணையதள உதவி மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள் ஆகியவை கொவிட்-19 முடக்க நிலை காலத்தில் மட்டுமின்றி அதற்கு பிறகும் செயல்படுத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில், மனோதர்பன் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மனோதர்பன் இணையதளத்திற்கு செல்ல இந்த இணைப்பை சொடுக்கவும் : http://manodarpan.mhrd.gov.in/ இந்தப் பக்கத்தில், அனுபவமிக்க ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள், பதாகைகள், ஒலி-ஔி ஆலோசனைத் தொகுப்புகள் உள்ளிட்ட மனநலம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.மனநல ஆலோசனைக்காக, தேசிய டோல்-ஃப்ரீ உதவி மைய தொலைபேசி எண். 8448440632 அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால், அனுபவமிக்க மனநல நிபுணர்கள், மருத்துவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்

*வால்வு பொருத்தப்பட்ட N-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.*

*😷N-95 மாஸ்க் பயன்படுத்துவதால் பலன் இல்லை.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு..*


*N-95 மாஸ்க்* *பயன்படுத்துவதால்*
*பலன் இல்லை..*
*மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு..*

*கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.*

*இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள மாஸ்க், சானிடைசரை மக்கள் அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.*

*அதிலும் குறிப்பாக, வால்வ் பொருத்தப்பட்டுள்ள N95 முக கவசத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதனைப் பொது மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.*


*இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.*
*அதில் இந்த N95 வகை மாஸ்க் மூலம் கொரோனா பரவுவது முற்றிலும் தடுக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பருத்தி துணி மூலம் தயாரிக்கப்பட்ட முக கவசத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*மத்திய சுகாதாரத்துறையில் இந்த அறிவிப்பு N95 முக கவசத்தை பயன்படுத்தி வந்தோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நெருங்கும் பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை முறையான ஆய்வுகள் மேற்கொண்டு மக்களை பாதுகாக்கவேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.*

*கிரிமிலேயர் வரம்புக்குச் சம்பளத்தை அளவீடாக வைக்காதே!-திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில்(காணொலி) தீர்மானம்*

*கிரிமிலேயர் வரம்புக்குச் சம்பளத்தை அளவீடாக வைக்காதே!-திமுக இளைஞரணி அமைப்பாளர்கள்   கூட்டத்தில்(காணொலி)  தீர்மானம்*

*📘பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!*

*பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!*

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.

இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை என்றார்.

*📘✍️உயர்கல்வி படிப்புக்கு கடன் பெறுவது எப்படி.. மாணவர்களுக்கான சலுகைகள் என்னென்ன??..*

*📘✍️உயர்கல்வி படிப்புக்கு கடன் பெறுவது எப்படி.. மாணவர்களுக்கான சலுகைகள் என்னென்ன..*

உயர்கல்வி பயில பெரும்பாலான மக்களுக்கு வசதி இல்லை.அவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் கல்வி கடன் திட்டம்.

பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்பிடிப்பு, தொழிற்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் பெற முடியும். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கல்வி பயில கடன் பெற முடியும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் வரையிலும் வெளிநாடுகளில் கல்வி பயில 20 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.

வங்கிகள் கேட்கும் முறையான ஆவணங்களை வழங்கினால் கல்வி கடன் எளிதா கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக ஆவணங்களை கேட்கின்றன.


தேவையான ஆவணங்கள்
பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்களை பார்ப்போம்..

அரசு அதிகாரிகள் சான்று பெற்ற(அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ், மாணவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரின் புகைப்படம்.

ஜாமீன் கையெழுத்து

மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வி தகுதிக்கான சான்றிதழின் நகல்கள், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமான சான்றிதழ், கல்வி கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்பு சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), கல்வி கடன் வாங்குவதற்கு ஜாமீன் கையெழுத்து போடும் பெற்றோர் அல்லது மற்றவர்களின் ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை (பேங்க் ஸ்டேட்மெண்ட்), வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்திருந்தால் விசா, விமான கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.

எஸ்பிஐ தரும் சலுகை

வங்கிகளில் நீங்கள் 4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக கடன் பெற விரும்பினால் குறைந்த பட்ச வட்டி விதிகத்தில் வழங்கப்படும். ஆனால் 4லட்சத்திற்கு மேல் கடன் வாங்க விரும்பினால் குறைந்தபட்ச வட்டியுடன், குறிப்பிட்ட சதவீதம் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும். வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணமாக எஸ்பிஐ வங்கி 9.30 சதவீதம் வட்டி ஆண்டுக்கு வசூலிக்கிறது. மாணவிகளுக்கு என்றால் 50 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படும். எந்த வங்கியிலும் மாணவர்கள் 4 லட்சம் வரை கடன் பெற ஜாமீன் தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் கடன் வாங்குவதாக இருந்தால் சொத்தை ஜாமீனாக வைக்க வேண்டும்.

5 ஆண்டு முதல் 7 ஆண்டுகள்

இந்த கடனை மாணவர்கள் படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள் படிக்கும் காலத்தில் வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. எனவே கடன் வாங்கும் வங்கிகளை பொறுத்து வட்டி செலுத்த வேண்டுமா இல்லை என்பது தெரியவரும். பட்டப்படிப்பை படித்து முடித்த ஒரு வருடத்திற்கு பின்னர் கடனை செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 5 முதல் 7 ஆண்டுகளுககுள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும். படிக்கும் காலத்தில் அரியர் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வந்தால், ஒவ்வொரு பருவத்திலும் கல்வி கடன் வாங்குவது மட்டுமல்ல, பின்னாளில் செலுத்துவதும் எளிதாக இருக்கும்.

*🟣கல்லூரிகளில் விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்ய கீழ்க்கண்ட விவரங்களை தயாராக வைத்துக் கொள்ளவும்..*

*🟣கல்லூரிகளில் விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்ய கீழ்க்கண்ட விவரங்களை தயாராக வைத்துக் கொள்ளவும்..*

*🟣பள்ளிக் கல்வி - Fit India Movement - விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*

*🟣பள்ளிக் கல்வி - Fit India Movement - விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*



திங்கள், 20 ஜூலை, 2020

*💉கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு*

*💉கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு!*

*கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் கிடைத்துள்ளது. 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.*

*தினகரன்.*

*புதிய தலைமுறை செய்தி:

*கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் -2 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை.*

*கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் -2 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை.*