சனி, 12 செப்டம்பர், 2020
*🌟அரசு ஊழியர்/ஆசிரியர் அல்லது அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுதல் சார்பான அரசாணை.*
*🌟அரசு ஊழியர்/ஆசிரியர் அல்லது அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுதல் சார்பான அரசாணை.*
தமிழ்நாட்டில் 71 B.Ed., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம்.மீறினால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்.*
*தமிழ்நாட்டில் 71 B.Ed., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம்.*
*மீறினால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.*
*தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்*
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்க.
வெள்ளி, 11 செப்டம்பர், 2020
செப்டெம்பர் 11, வரலாற்றில் இன்று.சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன் பிறந்த தினம் இன்று.
செப்டெம்பர் 11, வரலாற்றில் இன்று.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன் பிறந்த தினம் இன்று.
பரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மாகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார்.
செப்டெம்பர் 11, வரலாற்றில் இன்று. மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று(1921).
செப்டெம்பர் 11, வரலாற்றில் இன்று.
மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று(1921).
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தனது 11ஆம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.
தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி. தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை ஊட்டியவர் என பலரும் இவரை போற்றியுள்ளனர்.
இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவருடைய கவிதை திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்கர் மன்னர் வழங்கினார். அன்று முதல் பாரதி என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
வியாழன், 10 செப்டம்பர், 2020
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு(Ifhrms) முறையில் ஊதியப் பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.!!
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு(Ifhrms) முறையில் ஊதியப் பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.!!
புதன், 9 செப்டம்பர், 2020
*🖥️பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-அனைத்து வகைப்பள்ளிகள்-இணையதளம் மூலம் வகுப்புகள் 21.09.2920 முதல் 25.09.2020 முடிய நடத்துதல் கூடாது என்பது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்.5349/இ2/2020 நாள்:09.09.2020.*
*🖥️பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-அனைத்து வகைப்பள்ளிகள்-இணையதளம் மூலம் வகுப்புகள் 21.09.2920 முதல் 25.09.2020 முடிய நடத்துதல் கூடாது என்பது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்.5349/இ2/2020 நாள்:09.09.2020.*
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
புதியகல்விக்கொள்கை -2020, சார்ந்து தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பற்றி ஆராய்ந்திட குழு அமைப்பு!பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.தீரஜ்குமார் தலைமையில் 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு!தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
புதியகல்விக்கொள்கை -2020, சார்ந்து தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பற்றி ஆராய்ந்திட குழு அமைப்பு!
பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.தீரஜ்குமார் தலைமையில் 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு!
தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.*
*🍭9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*🍭பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.*
செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு
* பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் - மத்திய அரசு
* விருப்பமுடைய மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிக்கு வர வேண்டும் - மத்திய அரசு
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை - மத்திய அரசு
#CentralGovt
வழிகாட்டு நெறிமுறைகளை படிக்க கிளிக் செய்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)