தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் ஒன்றியச்செயற்குழு கூட்டம் 05. 11. 2020 (வியாழன் )மாலை 04.30 மணி அளவில் வெண்ணந்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் இர.மனோகரன் தலைமை தாங்கினார்.மாவட்டத்
துணைத்தலைவர் வெ.இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர்
முருக செல்வராசன் இயக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ. பால முரளி சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் ஒன்றியச் செயலாளர் இர. ஜெகநாதன் தீர்மானங்களை முன்மொழிந்து
விளக்க உரை ஆற்றினார்.
ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய துணைத் தலைவர்
அ. ராஜேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்
ம. சுரேஷ்குமார் ,
திருமதி அனந்தநாயகி , திருமதி வைரம். திருமதி மோகனசுந்தரி ,
திருமதி சுகுணா , திருமதி சித்ரா , ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
கூட்ட நிறைவில் துணைச்செயலாளர் திருமதி. ப வசந்தா நன்றியுரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் 12் அம்சக்கோரிக்கைகள் வடிவமைக்கப்பட்டு நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.