வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

*🏵️அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.*

*🏵️அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.*


*தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ .5,000.*

*நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ .10,000.*

*உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ .25,000.*

11 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் ~ கல்வித்துறை செயலாளர் உத்தரவு...

திங்கள், 1 பிப்ரவரி, 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)ஒன்றியச் செயலாளர்கள்கூட்டம் அழைப்பிதழ்.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்*  

நாமக்கல் மாவட்டம்
 (கிளை)
*********************
 ஒன்றியச் செயலாளர்கள்
கூட்டம்
********************
அன்புடையீர்! வணக்கம்.

இடம்: மன்ற அலுவலகம், வேலூர் .

நாள்: 03.02.2021 ( புதன்கிழமை) பிற்பகல் 04.30 மணி

தலைமை: திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத் தலைவர்.

முன்னிலை: திரு.சு.பிரபு,
மாவட்டப் பொருளாளர்.

திரு.க.தங்கவேல், 
மாவட்ட கொள்கை விளக்கக் செயலாளர். 

இயக்க உரை :

திரு.பெ.பழனிச்சாமி,
மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர்.

திரு.முருகசெல்வராசன்,
மாநிலச் செயலாளர்.

கூட்டப்பொருள்:

1. உறுப்பினர் பதிவு

2. மாநிலச் செயற்குழுக் கூட்ட  முடிவுகள்

3. ஜாக்டோ ஜியோ கூட்ட முடிவுகள்

4. ஆசிரியர் கோரிக்கைகள்

5.எதிர்கால நடவடிக்கைகள்

6..மாவட்டச்செயலாளர் கொணர்வன

அனைத்து ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மன்ற முன்னோடிகள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.



(மெ.சங்கர்)
மாவட்டச் செயலாளர்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!

தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணை வெளியீடு.

வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு  11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

*📘INCOME TAX 2021 - தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை !*

*📘INCOME TAX 2021 - தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை !*
 

மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி  உச்சவரம்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தனிநபர் வருமான வரி  உச்சவரம்பில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது.


2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.


அதில், பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.


மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 
தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும்  அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்னையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

மத்திய பட்ஜெட் 2021- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அம்சங்கள்!

மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு.


கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம்.

கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு.

2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது.

5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு.

இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும்.

பி.எஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை.


பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு/49 % இருந்து 74%ஆக உயர்த்தி அறிவிப்பு.

இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டம்.

மேலும் 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு.

2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும்.


புதிய வேளாண் கடன்களுக்காக ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

சென்னை உள்ளிட்ட 5 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு.

கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி ஒதுக்கீடு.

அசாம் மாநிலத்திற்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு

மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு.

5 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி செலவில் கடற்பணிகள் மேற்கொள்ளப்படும்.

உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்

செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.

தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

எதிர்வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் இருந்து 6.8%ஆக இருக்கும் என கணிப்பு.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.

விவசாய கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்வு.

5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்.

சிறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாக உயர்வு.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம்

தனியார் பங்களிப்புடன், 100 சைனிக் பள்ளிகள், ஆரம்பிக்கப்படும்.

லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.

பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும்.

காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன.

இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.

அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்

பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.

டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.

நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம்.

எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

LIC தனியார் மயமாகிறது; IDBI வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு!: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா காலம் என்பதால் வழக்கமான காகித பட்ஜெட்டிற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ஐ-பேடில் பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு தாக்கலாகும் முதல் பட்ஜெட் என்பதாலும், 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் சொல்லியிருந்த காரணத்தாலும் இந்த பட்ஜெட் மீது பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

எல்.ஐ.சி. நிறுவன பங்கு:


* எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க  நடவடிக்கை.

* பொதுமக்கள் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

தனியார் மயமாகும் IDBI வங்கி:

ஐ.டி.பி.ஐ. வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்த ஆண்டு நடவடிக்கை.

* அரசுக்கு சொந்தமான பொது காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் இந்த ஆண்டு தனியார்மயக்கப்படும்.

* இந்த ஆண்டு அரசு நிறுவனங்கள் விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்

* இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாகக் கவனிக்கப்படும் 

* பழைய வாகனங்களைத் திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் 

* மூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் 

* உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் 

* ஜூன் 2022ம் ஆண்டுக்குள் மேற்கு - கிழக்குப் பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும்

மத்திய பட்ஜெட்: தமிழக நெடுஞ்சாலைகள் - ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு..

தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை பணிக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
மும்பை-கன்னியாகுமரி இடையேயும் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலைகள் அமைக்கப்படும்.


இதேபோல, சென்னை மெட்ரோ ரயிலின் 118.9 கிமீ தொலைவுக்கான 2ஆம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றது.


*💥வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கை நாள்:01.02.2021.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கை நாள்:01.02.2021.