திங்கள், 29 மார்ச், 2021

உங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

உங்கள் PAN, ஆதாருடன் இணைக்க வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

ஞாயிறு, 28 மார்ச், 2021

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கத்தில் நிதி குளறுபடி !நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் விசாரணை!

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கத்தில் நிதி குளறுபடி !
நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் விசாரணை!

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கச் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் !காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புக்குரியதாகும் !தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஏழு கட்டத்தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ள அனைவருக்கும் பெரும் நன்றி!

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கச் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் !
காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புக்குரியதாகும் !
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஏழு கட்டத்தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ள அனைவருக்கும் பெரும் நன்றி!

********************************************
அன்பானவர்களே!வணக்கம்.

எஸ்.எண்.241,எருமப்பட்டி  ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தினை ,
சங்கச்செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து மீட்டெடுக்கவும்,சிக்கன நாணயச் சங்க  உறுப்பினர்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை கடந்த 06.03.2021 அன்று ஏழு கட்டத்தொடர்நடவடிக்கைகளை அறிவித்தது.

முதல்கட்ட நடவடிக்கையாக 10.03.2021அன்று கோரிக்கை மனு இயக்கமும்,இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 17.03.2021அன்று சுவரொட்டி இயக்கமும் நடைபெற்றது.

மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 29.03.2021 அன்று எருமப்பட்டி சிக்கனநாணயச்சங்க அலுவலகத்தில் " காத்திருப்புப்போராட்டம்  " மேற்கொள்ளப்பட இருப்பதைத் தெரிவித்து கடந்த 24.03.2021் அன்று மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உள்ளிட்டு கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ,கடந்த 26.03.2021 அன்று எருமப்பட்டி காவல்நிலைய அலுவலர் திரு.இரவி அவர்கள் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசனிடம் அலைபேசியில் அழைத்துப்பேசி போராட்ட விபரங்களை அறிந்துக்கொண்டார்.
கூட்டுறவுத்துறை உயர் ,கள அலுவலர்களிடம்  ஒரு முறைக்கு நான்கு முறை கலந்துப்பேசி எதிர்வரும் 29.03.2021 அன்று  எருமப்பட்டி  சிக்கன நாணயச்சங்க அலுவலகத்தில்  காவல்துறை அலுவலர்களின் முன்னிலையில் கூட்டுறவுத்துறையின் கள அலுவலர் அவர்களுடன் 29.03.20121அன்று  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனக்கூறி பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல் அலுவலர் திரு.இரவி அவர்கள் அழைப்புத்தந்தார்.

எருமப்பட்டி காவல்துறையின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கையில், 
இதே நாளில் 
நாமக்கல் சரக கூட்டுறவுத்துணைப்
பதிவாளர் அவர்கள் மாவட்டச்செயலாளர் மெ.சங்கரை அலைபேசியில் அழைத்து போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தும் ,திருமதி.
கே.ராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.மேலும், 27.03.2021அன்று  காலை 10.00 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புத்தந்தார்.27.03.2021அன்று தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதைத்தெரிவித்து 27.03.2021அன்று பிற்பகல் 05.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக  மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் தெரிவித்தார்.

இதற்கிடையில்,
27.03.2021 அன்று முற்பகல் மாவட்டச்செயலாளர் மெ.சங்கரைத் தொடர்புக்கொண்ட 
கூட்டுறவு களஅலுவலர்  போராட்ட   நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறும் ,29.03.2021அன்று பேச்சு வார்த்தைக்கு வருமாறும் கேட்டுக் கொண்டார். களஅலுவலரிடம்  27.03.2021அன்று மாலை 05.30 மணிக்கு நாமக்கல் சரக கூட்டுறவுப்பதிவாளரை ,அவரது அழைப்பின் பேரில் சந்திக்க உள்ளதாகவும்,29.03.2021அன்று எருமப்பட்டியில் தங்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்ட மாவட்டச்செயலாளர் 
விரைவு நடவடிக்கைகளை கோரினார்.

இத்தகு பேச்சுவார்த்தை  அழைப்புகளை பெரிதும் வரவேற்று ஏற்றுக்கொண்டு 27.03.2021அன்று பிற்பகல் 05.30 மணிக்கு 
நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்டத்தணிக்கைக் குழு உறுப்பினர்  த.தண்டபாணி,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் பொ. முத்துசாமி மற்றும் எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களுடன் நீண்ட நெடிய நேரம் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் அவர்கள் உரையாற்றினார்கள். எருமப்பட்டி சிக்கன நாணயச் சங்கம்  இலாபத்தில் தான் உள்ளது.இச் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து நின்று சங்கத்தை வளர்த்தெடுங்கள் என்றார்.

இச் சந்திப்பில், நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் அவர்கள் திருமதி.இராணி என்பாரை எருமப்பட்டி சிக்கன  நாணயச் சங்கப் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் 
செய்யப்பட்டுள்ளது என்பதைத்தெரிவித்தார‌்கள்.
மேலும் . சிக்கனநாணயச் சங்கத்தை ,இதன்  உறுப்பினர்களை பாதுகாத்து தருவததாகவும் ,தனது நிர்வாகத்தில் உள்ள எல்லா கூட்டுறவு நிறுவனங்களும் ஆரோக்கியமாக வளர வேண்டும்,செயல்பட வேண்டும் என்பதே விருப்பம் என்றும் துணைப்பதிவாளர் அவர்கள் நம்பிக்கைத் தந்தார்கள்.

திருமதி.கே.ராணி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது,காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புற்குரியதாகும்.

இன்னும் நிறைய பணிகள் இச் சிக்கன நாணயச்சங்கத்தில் செய்ய வேண்டி உள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் பொறுப்புணர்வோடு செயல்பட்டு  ஆசிரியப்பெருமக்களுக்கு பெருந்தொண்டாற்றும் என்று அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!

-முருகசெல்வராசன்
& மெ.சங்கர்.

வியாழன், 25 மார்ச், 2021

📌 *SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்*

📌 *SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்*

ஆசிரியர்கள் கவனத்திற்கு
State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது.
உடனடியாக வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான நற்செய்தியை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம் நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும் அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம்

*எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு*

இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கைSGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை *1. கவரிங் லெட்டர் 2. பேங்க் புக் ஜெராக்ஸ் 3. ஆதார் அட்டை நகல் 4. பான் கார்டு நகல் 5. ஆன்லைன் பே ஸ்லிப்* இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள் தாமதிக்க வேண்டாம் நன்றி 🙏🙏🙏

*🏮பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...*

*🏮பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...*
 
*தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது!*


*கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.*


*அப்போது அவர் பிராவிடண்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஊழியர் செலுத்தும் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அதன் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு என அறிவித்திருந்தார்.*


*அதாவது, தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் EPF  உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12 சதவிகித கட்டாய பி.எஃப் தொகை மற்றும் விருப்ப பி.எஃப் (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.*


*இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அதன் மீது 127 திருத்தங்கள் கூறப்பட்டன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிதி மசோதா நிறைவேறியது.*


*இந்தக் கூட்டத்தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், "தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்தார். இதனால் வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள், பெரிதும் பலனடைவார்கள் எனச் சொல்லப்படுகிறது.*


*மேலும் அவர், "பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு தொழில்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.*

தபால் வாக்குச்சீீட்டில் வாக்களிப்பது எப்படி? ~ விளக்கம்...

புதன், 24 மார்ச், 2021

🍁ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்து திமுக தலைவர் அவர்கள் சேலம் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

*🗳️ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்து திமுக தலைவர் அவர்கள் சேலம் தேர்தல் பரப்புரையில் பேச்சு...

 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பற்றி திமுக தலைவர் சேலம் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்படும் என உறுதி.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியாயமான போராட்டத்தில் அரசின் நிலைப்பாடு பற்றி எடுத்து விளக்கிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...