சனி, 26 செப்டம்பர், 2020

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் ஆதங்கம்!

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் ஆதங்கம்!

என்னதான் சார் பண்ணப் போறீங்க?😡

அக்டோபர் 1 ம் தேதி 10, 11, & 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும்ன்னு சொல்றீங்க. ஆனால், கூடவே ஆன் லைன்ல பாடம் நடத்துவோம்ன்றீங்க.

“பாடங்களைச் சொல்லித்தருவதற்கு  இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கறோம்ன்னு” சொல்றீங்க . அப்படியான்னு கேக்குறதுக்குள்ள, மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம்ன்னு ஒரு ‘குண்டைப்’  போடறீங்க.

அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி. ஓ போட்டுட்டு  நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.

பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்க போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா?
இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதலமைச்சர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க? 

இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது?

ஈரோட்டில் ஒரு அறிவிப்பு ; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு.

‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக்குழப்பம் பண்றீங்களே?

உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?

*🌟31.3.2020 க்குப் பிறகு ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு -கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்*

*🌟31.3.2020 க்குப் பிறகு ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு -கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்*

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்நினைவு தினம் இன்று (2011).

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.

மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்
நினைவு தினம் இன்று (2011).

**உலக புகழ் பெற்றவர்கள் பசுமை வெளி இயக்கம் கண்ட வாங்கரி மாத்தாய் கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஆப்பிரிக்கக் கண்டத்தில் கென்யா நாட்டில் நையேரி(Nyeri)என்ற கிராமத்தில் வாங்கரி மாத்தாய் பிறந்தார். இவரின் இயற்பெயர் வாங்கரி முத்தா என்பதாகும். பின்னாளில் இவர் தனது கணவரின் பெயர் மாத்தாய் இணைக்கப்பட்டு வாங்கரி மாத்தாய் என அழைக்கப்பட்டார். 

கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் இவர் கல்வி கற்க ஆரம்பித்தார்.
ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இவருடைய காலத்தில் பெண்கள் யாரும் படித்திருக்கவில்லை. சகோதரரின் தூண்டுதலில் படிப்பை தொடர்ந்தார்.அன்றைய காலக்கட்டத்தில், அமெரிக்க அதிபர் கென்னடியின் அரசு வழங்கிவந்த உதவித்தொகை மூலம் கல்லூரியில் உயிரியலில் பட்டம் பெற்றார்.

1966ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்து ஜெர்மன் நாட்டில் தமது உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1971ஆம் ஆண்டு நைரோபி பல்கலைக் கழகத்தில் டாக்டர்  பட்டம் பெற்றார்.கென்யாவில் முதல் முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி.நைரோபி பல்கலைக்கழகத்தின் கால்நடைத்துறையின் முதல் பெண் துறைத்தலைவர். இவருடைய வளர்ச்சி பலரின் வெறுப்பைத் தூண்டியது.

இவர் தன் கல்லூரி வேலையைத் துறந்து ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 'பசுமை பட்டை' இயக்கத்தை தொடங்கினார்.

ஆப்பிரிக்காக் கண்டத்தில் அளவிட இயலாத சூரிய ஒளி  விலைமதிக்க இயலாத வைரங்கள்  அடர்ந்த பச்சைப் பசேலென்ற காடுகள் வற்றாத நீர்நிலைகள் வளமான மண் ஆகியன மிகுந்து காணப்பட்டன. இவ்வளவு வளங்களைக் கொண்ட இந்தக் கண்டம்.
வறுமையின் பிடியில் சிக்குண்டு தன்னம்பிக்கை இழந்து வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையிலிருந்து அந்தக் கண்டத்தை மீட்டெடுக்கும் அரிய பணியை இவர் தொடர்ந்து செய்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளைக்களைய, மண்ணையும் மனித வாழ்வையும் ஒருங்கிணைத்த முயற்சியாக மரம் நடுவதன் மூலம் மண்ணின் வறட்சியையும், மனிதரின் வாழ்க்கை வறட்சியையும் ஒன்றாக களையக்கூடிய ஒரு வழியைக் கண்டுபிடித்தார். ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 'பசுமை பட்டை' இயக்கத்தை தொடங்கினார்.அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.

இந்த இயக்கம் மூலம் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடர்ந்தார். ஆப்பிரிக்காவில் ஆண்கள்தான் பெருமளவில் நிலத்திற்கு சொந்தக்காரர்கள். பெண்கள் அனைவருமே நிலத்தில் வேலை மட்டுமே செய்து வந்தார்கள். பெண்களுக்கென்று எந்த உரிமையையும் அன்றைய காலக்கட்டத்தில் இல்லை.

வேலை மட்டுமே செய்து வந்த பெரும்பாலான பெண்களுக்கு மரங்களை வளர்க்க தெரியாதபோது  பல கிராமங்களுக்கும் சென்று மரம் நடுவதற்கான பயிற்சியை அளித்தார்.காடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பணப்பயிர்களை எதிர்த்து போராடி பெண்களை பாரம்பரிய பயிர்களை வளர்க்க தூண்டினார். அதன் மூலம் அவர்களே சத்தான உணவை உற்பத்தி செய்ய பழக்கப்படுத்தினார்.

கிராமப்புற பெண்களுக்கு மரம் வளர்ப்பதற்காகவும் அதை பராமரிப்பதற்காகவும் சிறியளவில் ஊக்கத்தொகை வழங்கி வந்தார்.பெண்களின் கல்விக்கான முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறிவந்தார்.இவரின் செயல்கள் கென்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கென்யாவில்  பெரிய பூங்காவை அழித்து 60 மாடி கட்டடம் கட்ட அரசு எடுத்த முடிவை எதிர்த்து போராடினார்.இதில் பெண்கள் பலரும் தாக்கப்பட்டனர். வாங்கரி மாத்தாய் நினைவு இழந்து தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இந்த போராட்டம்தான் இவருக்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

மாற்றத்திற்கான பெண்கள் என்ற அமைப்பை தொடங்கி பெண்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.பெண்களை பாதுகாக்கும் விதமாக சட்டங்களை உருவாக்கினார்.

பசுமைப்பட்டை இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள விழைந்தது ஐநா சபை. ஐநா சபை இவர் இயக்கத்திற்கு பண உதவி செய்த‌து. அதைக்கொன்டு அரசாங்கத்தின் குறுக்கீடுகளை எதிர்கொன்டு சமாளித்து, பசுமைப்பட்டை இயக்கத்தை விரிவு படுத்தினார். ஆப்பிரிக்க நாட்டின் பிற மாநிலங்களுக்கும் பசுமைப்பட்டை இயக்கம் விரிவடையத் துவங்கியது.‌ 

இவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த மக்களின் விழிப்புணர்வு, நேர்மையான அரசியலின் அவசியம் ஆகிய இரு விடயங்களை ஆயுதமாகக் கையிலேந்தி அற்புதமான மாற்றங்களை தமது வாழ்நாளில் ஏற்படுத்தியவர்.

**20 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து மக்களிடை, சிறப்பாக மகளிரிடை விழிப்புணர்வு ஊட்டி 11 இலட்சம் கோடி மரங்களை நட்டார். இருண்டு கிடந்த இவரது கண்டத்தை உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் அளவு சுற்றுச் சூழல் போராளியாகத் திகழ்ந்தார்.

**மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், அரசியல்வாதியுமான இவர் 2004‍ஆம் ஆண்டின் அமைதிக்கான‌ நோபல் பரிசினை பெற்றார். தமது பசுமைப்பட்டை இயக்கத்தின் மூலம் தாம் வாழ்ந்த மண்ணிற்கு மகத்தான சேவையாற்றியவ‌ர் வாங்கரி மாத்தாய்.

**இவரின் இணையற்ற புவிசேவையைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு இந்திரா காந்தி விருது அளித்து கெளரவித்தது. 

**கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

*இன்று இவர் பெயரால் வனத்துறை சாதனையாளர்களுக்கு வாங்கரி மாத்தாய் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. 

2011ஆம ஆண்டு செப்டெம்பர் 25ஆம் தேதி  காலமானார்.

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.இந்திய ஊழல் அரசியல்வாதிகளின் முன்னோடி, கிழக்கிந்தியக் கம்பனியை இந்தியாவில் நிலைப்பெறச்செய்த இராபர்ட் கிளைவ் பிறந்த தினம் இன்று (1725).

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.

இந்திய ஊழல் அரசியல்வாதிகளின் முன்னோடி, கிழக்கிந்தியக் கம்பனியை இந்தியாவில் நிலைப்பெறச்செய்த இராபர்ட் கிளைவ் பிறந்த தினம் இன்று (1725).

இராபர்ட்  கிளைவ் 1725ஆம் வருடம் செப்டம்பர் 25ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள டிரேட்டன் சந்தை அருகில் பிறந்தார். தனது இளவயதில்  டிரேட்டன் சந்தையில் மாமூல் கேட்டு மிரட்டுவது, தனது வயதுள்ள இளைஞர்களை உடன் வைத்துக்கொண்டு  பெரும் ரகளையில் ஈடுபடுவது என தந்தை ரிச்சர்ட் கிளைவிற்கு பெரும் தலைவலியாக  இருந்தார் கிளைவ்.

இதனால் தனது தங்கை வீட்டில் ராபர்ட் கிளைவை இடம் மாற்றினார் தந்தை ரிச்சர்ட் கிளைவ்.

லண்டன் நகர வீதிகளிலும் அதே ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்த கிளைவ் தனது அத்தைக்கும் பெரும் தலைவலியாகி பொறுக்கியாக திரிந்துள்ளார். தினம் ஒரு சண்டையின் காரணமாக பல பேர் கிளைவின் அத்தையை திட்டுவது வழக்கமான நிகழ்வாகியுள்ளது.

1743ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மெட்வே என்ற இடத்தில் இருந்து தந்தை ரிச்சர்ட் கிளைவால்  இந்தியாவில் உள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கணக்கெழுதும் கிளார்க் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு  உள்ளார்,  அப்போது கிளைவுக்கு 18 வயது.

18 மாதப் பயணத்துக்குப் பிறகு, சென்னை வந்து சேர்ந்தார் கிளைவ். கிழக்கிந்தியக் கம்பெனியில் அவருக்குத் தரப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு 5 பவுண்ட்.

அதாவது, இந்தியப் மதிப்பில் 50 ரூபாய். கிளார்க் வேலையில் நாட்டமில்லாமல், ஒருமுறை துப்பாக்கியால் சுட முயற்சித்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு கிளைவ் முயன்றதற்கு காரணம் நம் தேசத்தின் வெப்ப மயமான சூழல்தான். நம் தேச வெயில் அவரை நிம்மதியாக உறங்கவிடவில்லை.

நிம்மதியான தூக்கமில்லாமல் வெப்பத்தின் தாக்கத்தால் தவித்துள்ளார் கிளைவ்.

கி.பி.1746ஆம் வருடம் பிரஞ்சு தளபதி லெபூர்தனே சென்னை ஜார்ஜ் கோட்டையை பிடித்தார்.

அப்போது இராபர்ட் கிளைவையும் கைது செய்தார்.

ஆனால் கிளைவ், தமிழர்களை போன்று உடை அணிந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்து தப்பி கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள புனித டேவிட் கோட்டைக்கு சென்றார்.

அப்போது புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு  கவர்னர் டூப்லெக்ஸ் பிரிட்டிஷ்காரர்கள் மீது போர் தொடுத்தார்.
இரவு கடலூர் தேவனாம்பட்டினம்  அருகே போர் ஆரம்பமானது. பிரெஞ்சு படையை எதிர்க்க தயார் நிலையில் பிரிட்டிஷார் இருந்தாலும் பிரெஞ்சு படையின் எண்ணிக்கையை ஒற்றர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷார் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தார்கள்.

எந்த போர் பயிற்சியும் இல்லாத இராபர்ட் கிளைவ் இருளான சூழலைப்  பயன்படுத்தி  சாதுரியமாக செயல்பட்டு பிரெஞ்சுக்காரர்களின் பின்புறம் தைரியமாக வந்து,
சில வெடிகுண்டுகளை திடீரென வெடிக்க செய்ததில் பிரெஞ்சு வீரர்கள் குழப்பத்தில் சிதறுண்டு ஓடினார்கள்.

அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ் படை வீரர்கள். பிரெஞ்சு சிப்பாய்களை வேட்டையாட ஆரம்பித்தனர்.

பிரெஞ்சுக்காரர்கள் பின்வாங்கி உயிர் பிழைத்து ஓடியதே பெரிய காரியமானது.

இந்த வெற்றிச்செய்தி இங்கிலாந்து அரசர்வரை தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் கிளைவிற்கு பெரிதான பதவியை கிழக்கிந்திய நிறுவனம் தந்துவிடவில்லை.

டூப்லெக்ஸ் "யார் இந்த ராபர்ட் கிளைவ்? நம்மை மண்ணை கவ்வ வைத்துவிட்டானே"  என்று விசாரணை செய்யும் அளவிற்கு கிழக்கிந்திய படையில் பிரபலமானார் கிளைவ்.

கிபி 1757ஆம் ஆண்டில் கல்கத்தா அருகில் உள்ள பிளாசி என்னும் ஊரில் சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடிக்க கிளைவை அனுப்பி வைத்தது  கிழக்கிந்திய நிறுவனம்.

சிராஜ்-உத்-தெளலாவின் முக்கிய அதிகாரிகளையும் வீரர்களையும்  லஞ்சம் கொடுத்து வளைத்தார் கிளைவ்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள், சிப்பாய்கள் ஒதுங்கிய பின்பு சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடித்தார் கிளைவ்.

இதனால் கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் நிலைபெறச்செய்த நாயகன் என்னும் பெயரை பெற்றார் கிளைவ்.

இன்றும் அவருக்கு அந்த பெயரே நிலைத்து நிற்கிறது.

பிற்பாடு சென்னையின் மேஜர் ஜெனரல் பதவியை கிழக்கிந்திய நிறுவனம் கிளைவிற்கு கொடுத்து கெளரவித்தது.

கிளார்க்வேளையில் இருந்தபோதே சரக்குகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் கணக்குகளில் பல  தில்லுமுல்லு வேலைகளை செய்து பெரும் பணத்தை சம்பாதித்தார்.

ஊழல் செய்து சம்பாதித்த  பணத்தை வைத்தே சென்னையின் மேஜராகும் அளவிற்கு உயர்ந்துள்ளார் கிளைவ்.

மேஜர் ஜெனரல் ஆனதும் வேறு வழியில் பெருமளவில் லஞ்சம் பெற்றும், ஆற்காடு நவாப்புகளுக்கு அடியாட்களாக ஆங்கிலேய சிப்பாய்களை அனுப்பி வைத்தும் பெருமளவில் சொத்து சேர்த்தார் கிளைவ்.

பணி முடிந்து  இங்கிலாந்து திரும்பிய போது அவரிடம் இருந்த பணம் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் பவுண்ட் அதாவது இருபது லட்சம் ரூபாய்.

அன்றைய இங்கிலாந்தின் ஒரு பவுண்ட்டின் இந்திய மதிப்பு வெறும் பத்து ரூபாய்தான். ஆகவே அவர் எடுத்து சென்ற பணம் இருபது லட்சம் ரூபாய் மட்டுமே .
240 ஆண்டுகளுக்கு முன்பு இருபது லட்சம் ரூபாயை கையாள்வதும், செலவு செய்வதும், பாதுகாப்பதும் என்பது மிகப்பெரும் சவாலான விஷயமாகும்.

தனது சேமிப்பை இந்தியாவில் இருந்து எளிதாக எடுத்துச் செல்ல வைரமாக மாற்றிக் கொண்டார் என்றொரு குறிப்பும் வரலாற்றில் காணப்படுகிறது.

அவர் 1400 தங்கப் பாளங்களைக் கொண்டுசென்ற "டோனிங்டன்" என்ற கப்பல், புயலில் சிக்கி மூழ்கியது.

ராபர்ட்  கிளைவ் மீது பெரும் ஊழல் குற்றசாட்டைக்கூறி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.

விசாரணையில் தான் பெரும் யோக்கியன், நல்லவன் என பெரும் கூப்பாடு போட்டார் கிளைவ். ஆனாலும் ராஜதுரோக குற்றம் செய்தார் என பல உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டார் கிளைவ்.

இங்கிலாந்து அரசும் கிளைவை ஒதுக்கி தள்ளியே வைத்திருந்தது.

பின்பு லண்டன் நகரின் குறிப்பிட்ட செல்வந்தர்களில் ஒருவராக சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார் கிளைவ்.

2004ஆம் ஆண்டு லண்டனில் உள்ள "சூத்பே"  என்ற ஏலக்கடை வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது.

அதில்,  ராபர்ட் கிளைவ் வசம் இருந்த முகலாயர் காலத்தில் செய்யப்பட்ட, வைரம் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட நீர் ஊற்றும் தங்கக் குடுவையும் ஒன்று.

சுமார் 5.2 மில்லியன் டாலருக்கு ( இன்றைய மதிப்பில் சுமார் 27 கோடி) ஏலத்தில் விற்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த அந்தக் குடுவை இந்தியாவில் இருந்த நவாபிடம் ராபர்ட் கிளைவ் பறித்து கொண்டதாக தெரிகிறது.

ராபர்ட் கிளைவ், தான் வைத்திருந்த பணத்திற்கும், உயிரை விட்ட வயதிற்கும் ஊசிமுனை அளவிற்கு கூட சம்பந்தம் இல்லை.

ஒரு கட்டத்தில் பல நோய்களுக்கு ஆளான கிளைவ்,  தூக்கமின்மையால் அவதிப்பட்டார்.

போதை ஊசியை தூங்குவதற்காக தொடர்ந்து பயன்படுத்திய ராபர்ட் கிளைவ் நரம்பு தளர்ச்சியாலும் அவதிப்பட்டார்.

தனிமையின் காரணமாக தினம் தினம் தற்கொலை எண்ணம் தோன்றி நிதானத்தை இழந்தவர், தனது 49ஆவது வயதில் தன்  கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.சதீஷ் தவான் பிறந்த தினம் இன்று

செப்டெம்பர் 25, 
வரலாற்றில் இன்று.

சதீஷ் தவான் பிறந்த தினம் இன்று

சதீஷ் தவான்
(25 செப்டெம்பர் 1920–3 ஜனவரி 2002) ஒரு இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். ஸ்ரீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.சர்வதேச மருந்தாளுநர் தினம் இன்று.

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.

சர்வதேச மருந்தாளுநர் தினம் இன்று.

சமுதாயத்தில் மருந்தாளுநர் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவே மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மருந்தாக்கியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட செப்டெம்பர் 25ஆம் தேதியே உலக மருந்தாளுநர் தினமாக கொண்டாடப்படுகிறது.  செப்டெம்பர் 25ஆம் தேதியை அங்கீகரித்து இந்திய மருந்தியல் கழகமும் மருந்தாளுநர் தினம் கொண்டாடுகிறது

மருத்துவத்தில் மருத்துவருக்கும் , மருந்தாளுநர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு ஏனெனில் மருந்தாளுநர் இல்லையேல் மருந்தியல் இல்லை, மருந்தியல் இல்லையேல் மருத்துவம் இல்லை.

மக்கள் நல வாழ்வில் மருந்தாளுநர்களின் பங்கும் மிக முக்கியமானது. மருத்துவம், மருந்து மற்றும் மருந்தாளுநர் மக்களுக்கு அளித்துவரும் சேவைகள் மிக முக்கியமானது.

இன்றயகாலகட்டத்தில் உணவுக்கு இனையான பங்கு மருந்துக்கும் உள்ளது எனில் மருந்தும் மருந்தாளுநர்களும் பிரிக்கமுடியாத சக்திகளாகவே உணரமுடிகிறது. மருந்தாளுநர்கள் தங்களின் வாழ்வாதாரமே மக்களுக்கு மருந்து அளிப்பதை சேவையாக கொண்டுள்ளதால் எவ்விதத்திலும் புறக்கணிக்கமுடியாத அத்தியாவசியமான பொறுப்பு மருந்தாளுநர்
களுடையது.

மருந்தாளுநர்கள் மட்டுமே இருவேறு மருந்து சேர்மானத்தினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ( contra indication ) துல்லியமாக அறிந்து மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துரைக்க முடியும்.

மருந்துகளின் தன்மை, உட்கொள்ளும் விதம், குறிப்பிட்ட மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளக்
கூடாத உணவுகள், மற்றும் மருந்துகள் போன்ற மக்கள் உயிர்காக்ககூடிய தகவல்களை அளிப்பவர்கள் மருந்தாளுநர்கள் மட்டுமே.

மருந்தாளுநர் அல்லாதோர் மருந்து விநியோகம் செய்யும் இடங்களில் கிடைக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்வது தற்கொலைக்கு சமமானது.

மருந்தாளுநர் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பாளராக அமைந்து மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான சேவைசெய்பவர்.

இன்று உலக அளவில் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையில் மருந்து எடுத்துக்கொள்ளாமல் இறப்போரின் எண்ணிக்கையைவிட தவறான மருந்துசேர்க்கையின் பக்கவிளைவுகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையே அதிகம். அமெரிக்காவில் நடைபெற்ற புள்ளிவிவர ஆய்வின் படி மேற்கண்ட முறையில் மருந்துகளை எடுத்துக்கொணடதால் 4,40000 பேர் இறந்ததாக கணக்கிடப்பட்டது டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2011இன் ஆய்வின் படி இந்தியாவில் மேற்கண்ட முறையில் 300 க்கு ஒருவர் எனற இறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது.

எனவே மருந்தாளுநர்கள் மட்டுமே மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சரியான மருந்தினை தேவைப்படும் நபருக்கு தேவையான காலத்தில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கும் ஒரே நபர் என்பதை மக்கள் புரிந்துகொண்டு மருந்தாளுநர்களை அணுகி ஆலோசனை பெறுமாறு இந்திய மருந்தாளுநர் சங்கம் வேண்டிக்கொள்கிறது.

வியாழன், 24 செப்டம்பர், 2020

*🌟விரைவுத் துலங்கல் குறியீடு DIKSHA APP QR Code Scan பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் தொடர்பான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்*

*🌟விரைவுத் துலங்கல் குறியீடு  DIKSHA APP QR Code Scan பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் தொடர்பான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன  இயக்குநரின் செயல்முறைகள்*

*🌟CPS Missing Credit விபரங்களை 30.09.2020க்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கருவூலம் மற்றும் கணக்குத்துறை உத்தரவு!!!*

*🌟CPS Missing Credit விபரங்களை 30.09.2020க்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கருவூலம் மற்றும் கணக்குத்துறை உத்தரவு!!!*

செப்டெம்பர் 24, வரலாற்றில் இன்று.இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படும் இராஜா இராமண்ணா(ஜனவரி 28, 1925 - செப்டெம்பர் 24, 2004) நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 24, 
வரலாற்றில் இன்று.

இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படும் இராஜா இராமண்ணா(ஜனவரி 28, 1925 - செப்டெம்பர் 24, 2004) நினைவு தினம் இன்று.

1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

செப்டெம்பர் 24, வரலாற்றில் இன்று.மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட தினம் இன்று(2014).

செப்டெம்பர் 24,
 வரலாற்றில் இன்று.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட தினம் இன்று(2014).

மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடு இந்தியா.

ரூ 460 கோடியில் உருவான மங்கள்யான்  2013ஆம் ஆண்டு நவம்பர் 5இல் விண்ணில் ஏவப்பட்டது.