வெள்ளி, 25 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.சர்வதேச மருந்தாளுநர் தினம் இன்று.

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.

சர்வதேச மருந்தாளுநர் தினம் இன்று.

சமுதாயத்தில் மருந்தாளுநர் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவே மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மருந்தாக்கியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட செப்டெம்பர் 25ஆம் தேதியே உலக மருந்தாளுநர் தினமாக கொண்டாடப்படுகிறது.  செப்டெம்பர் 25ஆம் தேதியை அங்கீகரித்து இந்திய மருந்தியல் கழகமும் மருந்தாளுநர் தினம் கொண்டாடுகிறது

மருத்துவத்தில் மருத்துவருக்கும் , மருந்தாளுநர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு ஏனெனில் மருந்தாளுநர் இல்லையேல் மருந்தியல் இல்லை, மருந்தியல் இல்லையேல் மருத்துவம் இல்லை.

மக்கள் நல வாழ்வில் மருந்தாளுநர்களின் பங்கும் மிக முக்கியமானது. மருத்துவம், மருந்து மற்றும் மருந்தாளுநர் மக்களுக்கு அளித்துவரும் சேவைகள் மிக முக்கியமானது.

இன்றயகாலகட்டத்தில் உணவுக்கு இனையான பங்கு மருந்துக்கும் உள்ளது எனில் மருந்தும் மருந்தாளுநர்களும் பிரிக்கமுடியாத சக்திகளாகவே உணரமுடிகிறது. மருந்தாளுநர்கள் தங்களின் வாழ்வாதாரமே மக்களுக்கு மருந்து அளிப்பதை சேவையாக கொண்டுள்ளதால் எவ்விதத்திலும் புறக்கணிக்கமுடியாத அத்தியாவசியமான பொறுப்பு மருந்தாளுநர்
களுடையது.

மருந்தாளுநர்கள் மட்டுமே இருவேறு மருந்து சேர்மானத்தினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ( contra indication ) துல்லியமாக அறிந்து மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துரைக்க முடியும்.

மருந்துகளின் தன்மை, உட்கொள்ளும் விதம், குறிப்பிட்ட மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளக்
கூடாத உணவுகள், மற்றும் மருந்துகள் போன்ற மக்கள் உயிர்காக்ககூடிய தகவல்களை அளிப்பவர்கள் மருந்தாளுநர்கள் மட்டுமே.

மருந்தாளுநர் அல்லாதோர் மருந்து விநியோகம் செய்யும் இடங்களில் கிடைக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்வது தற்கொலைக்கு சமமானது.

மருந்தாளுநர் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பாளராக அமைந்து மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான சேவைசெய்பவர்.

இன்று உலக அளவில் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையில் மருந்து எடுத்துக்கொள்ளாமல் இறப்போரின் எண்ணிக்கையைவிட தவறான மருந்துசேர்க்கையின் பக்கவிளைவுகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையே அதிகம். அமெரிக்காவில் நடைபெற்ற புள்ளிவிவர ஆய்வின் படி மேற்கண்ட முறையில் மருந்துகளை எடுத்துக்கொணடதால் 4,40000 பேர் இறந்ததாக கணக்கிடப்பட்டது டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2011இன் ஆய்வின் படி இந்தியாவில் மேற்கண்ட முறையில் 300 க்கு ஒருவர் எனற இறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது.

எனவே மருந்தாளுநர்கள் மட்டுமே மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சரியான மருந்தினை தேவைப்படும் நபருக்கு தேவையான காலத்தில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கும் ஒரே நபர் என்பதை மக்கள் புரிந்துகொண்டு மருந்தாளுநர்களை அணுகி ஆலோசனை பெறுமாறு இந்திய மருந்தாளுநர் சங்கம் வேண்டிக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக