புதன், 20 அக்டோபர், 2021

பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ40/இலட்சம்‌ மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக்கட்டிடங்கள். ---மாண்புமிகு.தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சித் துறை அமைச்சர் மருத்துவர் திரு.மா.மதிவேந்தன் அவர்கள்,மாண்புமிகு.நாடாளுமன்ற உறுப்பினரும்,நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளருமான திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டு விழா

 பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ40/இலட்சம்‌ மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக்கட்டிடங்கள். ------------------------------------------- இராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய வகுப்பறைக்கட்டிடம் ரூ 40 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைக்கட்டிடமாக கட்டப்படுகிறது. புதிய‌ மூன்று அறை வகுப்பறைக்கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு நிகழ்வு இன்று (20.10.2021)நடைபெற்றது. இந்நிகழ்வில் , மாண்புமிகு.தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சித் துறை அமைச்சர் மருத்துவர் திரு.மா.மதிவேந்தன் அவர்கள்,மாண்புமிகு.நாடாளுமன்ற உறுப்பினரும்,நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளருமான திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் இராசிபுரம் நகரச்செயலாளர் திரு.என்.ஆர் சங்கர் அவர்கள்,முன்னாள் நாடாளுமன்ற‌ உறுப்பினர் திரு.பி.ஆர்.சுந்தரம் அவர்கள், நகராட்சி ஆணையாளர் திரு.கிருபாகரன் அவர்கள்,பள்ளித்தலைமையாசிரியை திருமதி.கு.பாரதி அவர்கள் உள்ளிட்டு அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.




தேசிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்,சார்பு அமைப்புகள்

 


தேசிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்,சார்பு அமைப்புகள் ---------------------------------------------------------------- தேசிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கிறது. தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சீராய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில், மூத்த நிர்வாகி சுரேஷ் சோனி பங்கேற்கிறார். அதேபோல் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், வித்யா பாரதி, சிக்‌ஷா சன்ஸ்கிருதி, உத்தன் நியாஸ், பாரதிய சிக்‌ஷான் மண்டல், அகில் பாரதிய ராஷ்டிரீய ஷைக்‌ஷிக் மகாசங் ஆகிய ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளும் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்தும் கரோனா பெருந்தொற்றால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம் பின்னடைவு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, "பிரிட்டிஷ்காரர்கள் அமல்படுத்திய கல்வி முறையில் மாற்றம் தேவை. நமது தேசத்தின் கல்விக் கொள்கை அதன் ஆணிவேரை தொட்டுச் செல்ல வேண்டும். பாரம்பரிய கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்" என்றார். தேசிய கல்விக் கொள்கை என்பது 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1986, 1992-ம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2016-ல் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நன்றி:இந்து தமிழ்திசை

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை தேர்வுக்கான விழிப்புணர்வு கையேடு தயாரிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

 



மத்திய அரசின் கல்வி உதவித்தொகை தேர்வுக்கான விழிப்புணர்வு கையேடு தயாரிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் ‘புதுமை திட்டம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் என்எம்எம்எஸ் தேர்வுக்கு தயாராக உதவும் வகையில் வழிகாட்டு கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் புத்தகத்தை வெளியிட்டார். அதை பிரின்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர் விஷ்ணு கார்த்திக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மத்திய அரசின் என்எம்எம்எஸ், என்டிஎஸ்இ உள்ளிட்ட கல்வி உதவித்தொகைக்கான தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் ‘புதுமை திட்டம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் என்எம்எம்எஸ் தேர்வுக்கு தயாராக உதவும் வகையில் வழிகாட்டு கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நூலை வெளியிட்டு பேசும்போது, ``மத்திய அரசின் என்எம்எம்எஸ், என்டிஎஸ்இ உட்பட கல்வி உதவித்தொகைக்கான தகுதித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய வழிகாட்டு கையேடுகள் மாணவர்கள் தேர்வில் எளிதாக வெற்றிபெற உதவியாக இருக்கும்’’ என்றார். நூல் வடிவமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மோகன் கூறும்போது, ‘‘அரசுப்பள்ளி மாணவர்களின் அச்சத்தை களைவதே இந்த நூலின் நோக்கமாகும். மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில்தான் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 2 பிரதிகளை https://drive.google.com/file/d/1IbTau0O0Co340c1rcVvvzNaNAdc1SV_2/view?usp=drivesdk மற்றும் https://drive.google.com/file/d/1aWAZSdzqC68ILaGz27j04Z6cbQBcr8Sl/view?usp=drivesdk ஆகிய இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ், யுபிஎஸ்சி உட்பட இதர போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கும் இந்த புத்தகம் உதவியாக இருக்கும்’’என்றார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு பலன்தரும் விதமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளன. இதுதவிர என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது குறித்து துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறுபுறம் பள்ளிமாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளும் தொடர்கின்றன. நடப்பாண்டும் இபாக்ஸ் நிறுவனம் மூலம் நீட் பயிற்சியை தொடரவும் பரிசீலித்து வருகிறோம். அதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழலையர் பள்ளிகளை திறப்பது மற்றும் மக்கள் பள்ளி திட்டம் பற்றியும் முதல்வருடன் (இன்று) ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இல்லம்தேடிக்கல்வித்திட்டம் தன்னார்வலர் பதிவு தொடக்கவிழா!

இல்லம்தேடிக்கல்வித்
திட்டம் தன்னார்வலர் பதிவு தொடக்கவிழா!

இயற்கைச் சீற்றத்தின் அவசரக்காலப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக அமைச்சர்கள் கூடுதல்பொறுப்பாக்கி நியமனம்!

இயற்கைச் சீற்றத்தின் அவசரக்காலப் பணிகளை  மேற்கொள்ள  மாவட்ட வாரியாக அமைச்சர்கள்  கூடுதல்பொறுப்பாக்கி நியமனம்!

முதலமைச்சருக்கு ஆசிரியர் மன்றத்தின் நன்றி!முரசொலி செய்திவெளியீடு!

முதலமைச்சருக்கு ஆசிரியர் மன்றத்தின் நன்றி!முரசொலி செய்திவெளியீடு!

செவ்வாய், 19 அக்டோபர், 2021

நவம்பரில் ஆசிரியர் இடமாறுதல்!

நவம்பரில் ஆசிரியர் இடமாறுதல்!

பூவுலகைச் சூழும்‌‌ பெருநஞ்சு!இந்துதமிழ்திசைகட்டுரை!

பூவுலகைச் சூழும்‌‌ பெருநஞ்சு!இந்துதமிழ்திசைகட்டுரை!

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு 20.10.2021இல் பதவி பிரமாணம்.

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு  20.10.2021இல் பதவி பிரமாணம்.

போராட்டக்காலம் பணிக்காலம்!ஆணையிட்டமுதல்வருக்கு நன்றி!

போராட்டக்காலம் பணிக்காலம்!ஆணையிட்டமுதல்வருக்கு நன்றி!