தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு:தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், நவ., 15ல் இருந்து, 25 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று, பதிவு செய்யலாம். விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 125 ரூபாய் மற்றும் இணையதள பதிவு கட்டணம், 50 ரூபாய் என, மொத்தம், 175 ரூபாயை பணமாக, மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.
தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக