ஞாயிறு, 12 நவம்பர், 2017

'நீட்’ போன்ற தேர்வுகளை நடத்த புதிய அமைப்பு உருவாக்கம்...


நீட் போன்ற தகுதி
மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்
தேசிய தேர்வு முகமை ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக முதல்கட்டமாக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

மாவட்டம்தோறும் அமைக்கப்படும் இந்த தேசிய தேர்வு முகமையே, சிபிஎஸ்இ நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் இனிமேல் நடத்தும் என்றும், மேலும், இது முற்றிலும் தன்னாட்சி பொருந்திய அமைப்பாகச் செயல்படும் என்றும் மத்திய அரசுதெரிவித்துள்ளது.

இதன்மூலம் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக