🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில்
முத்திரைப்பதிக்கும் போராட்டம் நம்சமகாலத்தில் சென்னையில் ஜாக்டோ-ஜியோ பதாகையில் நடைபெற்று வருகிறது.
இப்பெரும்.
போராட்டத்தில்
நம்
இனமானக்காவலர்,பொதுச்செயலாளர்,பாவலர்அய்யா அவர்களின்
வழிகாட்டுதலில் ஆசிரியர்மன்றம் முழுவீச்சுடன் களமாடுகிறது.
இப்பெரும்போராட்டத்தின் சிறப்பான வடிவமைப்பு,
போராட்ட யுத்தி 24.02.18-சனி அன்று மகளிர்மறியல் என்பதாகும்.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்மன்ற
மகளிரணி அமைப்பாளர் திருமதி.வே.அமுதா(மல்லசமுத்திரம்)அவர்களின் தலைமையில் பெண்ணாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
நாமக்கல் நகரில் இருந்து நாமக்கல் ஒன்றியச்செயலாளர்திரு. அ.செயக்குமார் அவரகள் பெண்ணாசிரியர்களை சென்னை
அழைத்துச்
சென்றுவரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மாவட்டமகளிரணி துணைஅமைப்பாளர்திருமதி.ந.தங்கம்மாள்,மாவட்டதுணைத்தலைவர்.திருமதி .பொன்.திலகம்,
திருமதி.கு.பாரதி மாவட்டத்துணைச்செயலாளர் ஆகியோர் குழுவாக செயல்பட்டு ஒன்றிய பெண்பொறுப்பாளர்களை அணிதிரட்டி அழைத்துச்சென்றுவரும் பணியை மேற்கோண்டுள்ளனர்.
பெண்கள் சக்தி மறியல் போராட்டத்தை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் எனும் நம்பிக்கையோடு
பெருஞ்சக்தி எனப்படுவது பெண்களேயாகும் எனும் மரபுவழி நம்பிக்கை வெல்லும்; மகளிர்மறியல் வெல்லும்;மகளிர் வெல்வோம்
எனும் கம்பீரத்தோடு சிறைபுகும் மன்றப்
பெண்பொறுப்பாளர்களை வரலாறு பதிவுச்செய்துக்
கொண்டு பாராட்டும்.
எமக்காக நாமே
சிறைபுகுவோம்;
ஊதியம்,
ஓய்வூதியம்,
உரிமைகள் காப்போம்;
பெறுவோம்...எனும் பெண்மையின்
முழக்கத்தில் வங்கக்கடல் அதிரட்டும்;
சிவக்கட்டும்;
ஆவேசமாய்
பொங்கி எழட்டும்.
வரலாற்றி்ன் நீண்ட நெடிய பதிவுகளில்
அநீதிக்கு எதிரான பெண்களின் அறத்சீற்றம் -
ஆவேசம்-
சினம்
பெருந்தீயாய் உருவெடுத்து பெரும் நகரங்களை,
அநீதி இழைத்த அரசுகளை சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி நீதியை நிலைநிறுத்தி உள்ளது
என்பதை
கற்றுள்ள- கற்பிக்கும் பெண்ணாசிரியர்களே! மகளிர்மறியலை வெற்றிபெறச்செய்யுங்கள்.
பெண்சக்தி பெருஞ்சக்தி.இவ்உண்மையை மறியல்களம் மெய்ப்பிக்கட்டும்
~முருகசெல்வராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக