அகமதாபாத்தில் உள்ள தேசிய வானியல் ஆராய்ச்சி (Physical Research Laboratory) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், `நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்களைக் கண்டுபிடிக்கும் நாடுகள் பட்டியலில்' இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்தப் புதிய கிரகம், துணை சனி கோள் அல்லது சூப்பர் நெப்டியூன் போன்ற கோள்களின் அளவில் பெரியதாக உள்ளது.
EPIC 211945201 or K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த K2-236b கிரகம், பூமியைப் போன்று 27 மடங்கு எடை கொண்டதாகவும் அளவில் ஆறு மடங்கு பெரியதாகவும் உள்ளது.
இந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தை 19.5 நாளில் சுற்றி வருகிறது. இதன் வெளிப்புற வெப்பநிலை 600 டிகிரி செல்சியஸ் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
``பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியைப் போன்று ஏழு மடங்கு குறைவாகவே இந்தப் புதிய கிரகத்துக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இடைவெளி உள்ளது.
பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட K2-236b கிரகத்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலைப் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள PARAS (PRL Advance Radial-velocity Abu-Sky Search) ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது'' என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக