அன்பானவர்களே! வணக்கம்.
ஆசிரியர் பொதுமாறுதல் 2018-19 சார்ந்து ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் இருப்பின் விரைந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1)இடமாறுதல் கல்விமாவட்ட அளவில் நடைபெறாது;
வருவாய்மாவட்ட அளவில் நாமக்கல் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
2)பணிநிரவலில் பாதிக்கப்பட்டோருக்கு காலிப்பணியிடம் இருப்பின் வாய்ப்பும்,முன்னுரிமையும் வழங்கப்படுமென தமிழக அரசின் ஆணையில்,தொடக்கக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகளில் கூறப்பட்டுள்ளது.
3)உபரிபணியிட நிரவல் மாறுதல் 01.09.2017 இன் அடிப்படையில் நடைபெறும் எனச்சொல்லப்பட்டுள்ளது.
4)கூடுதல் பணியிடங்கள் பணியிடநிரவலுக்கு மட்டுமே;இடமாறுதலுக்கு இல்லை என கூறப்படுகிறது.
5)வேறு ஏதேனும் கோரிக்கைகள்,ஐயப்பாடுகள் இருப்பின் தொடர்புக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக