வியாழன், 12 ஜூலை, 2018

இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது ...

இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது
இனி Balance இல்லாமலும் Call செய்யலாம்: BSNL அதிரடி!

இந்தியாவில் முதல் முறையாக, இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது!

மொபைல் டேட்டா எனப்படும் இணைய டேட்டாவினை பயன்படுத்தி, BSNL மொபைல் எண்களின் மூலம் இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு மொபைல் எண்ணுக்கும் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது.

BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Wings என்னும் செயலியின் மூலம் இணைய வசதிகளை (Wifi, Mobile Data) கொண்டு பிற நெட்வொர்கள் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இணைய வசதியினை கொண்டு பிரத்தியேக செயலிகள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த அழைப்புகளின் இருப்புறமும் குறிப்பிடப்பட்ட செயலி அவசியமாக கருதப்பட்டது, ஆனால் இந்த Wings செயலியின் மூலம் மொபைல் எண்ணில் மூலமே அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் குமார் தெரிவிக்கையில்... இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள BSNL நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த Wings செயலியில் பதிவு செய்துக்கொள்ள இந்த வாரம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் எனவும், வரும் ஜூலை 25-ஆம் நாள் முதல் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் எனவும் BSNL நிறுவனம் அறிவித்துள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக