வெள்ளி, 16 நவம்பர், 2018

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் ஓராண்டு பட்டயப் படிப்பு விண்ணப்பிக்கலாம்


சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் (2019-2020) ஓராண்டு கால பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்தப் பட்டயப்படிப்பு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டு காலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தினை ulakaththamizh.org என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.2,500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தரமணி, சென்னை என்ற முகவரிக்கு டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542992, 95000 12272 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.