முள்சீதா 12 வகையான புற்றுநோய்களை குணப் படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
முள்சீதாவின் பல்வேறு பயன்கள் குறித்து, நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ப.சவிதா, கல்லூரி முதன்மையர் டாக்டர் நெ.உ.கோபால் ஆகியோர் கூறியது:
இந்தியாவில் பெரும்பாலும் மேற்குதொடர்ச்சி மலைகளிலும், கேரளம், கன்னியாகுமரி பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. முள் சீதா பசுமை மாறாத அகன்ற சீதாவின் இலை போன்ற பூக்கும் சிறு மரமாகும். வெப்ப மண்டல மர வகையைச் சார்ந்தது.
புற்றுநோய்க்கு மருந்து: முள்சீதாவின் இலை, பூ, பழம், பட்டை, வேர் மற்றும் விதை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. முக்கியமாக, இதன் இலைகள், பழத்தை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார்செய்து புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றனர். புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சையின் மூலம் முடி முழுவதும் கொட்டி விடுவதையும், வாந்தி, உடல் மெலிந்து, எடை குறைந்து பக்கவிளைவுகள் எற்படுவதையும் காண்கிறோம். ஆனால், முள்சீதாவானது எவ்விதமான பக்கவிளைவுகள் அற்ற, புற்றுநோய் செல்களை அழிப்பதில் பல மடங்கு சக்தி வாய்ந்தது. இதனால் முடி உதிர்வோ, எடைகுறைவோ எற்படுவதில்லை.
ஆராய்ச்சி முடிவுகளின் படி, முள் சீதா 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்தவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். மேலைநாடுகளில் இதன் மருத்துவக் குணத்தினை நன்கு அறிந்து பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி வருகின்றனர்.
இதில் அடங்கியுள்ள அசிட்டோஜெனின், குயினோன், டேனின் போன்ற ஆன்டிஆக்சிடன்ட் தன்மையானது புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் உண்டாக்கவும், புற்றுநோயினைத் தடுக்கவும், குணப்படுத்தும் பண்பினைக் கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள வேதிப் பொருளானது புற்றுநோய்க் கட்டிகள், கல்லீரல் புற்றுநோய், மண்ணீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையுள்ளது. ரத்த அழுத்தம் குறைப்பு, அதிகரிப்பு, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, தோல் வியாதிகள், நரம்புத் தளர்ச்சி, நடுக்கம், இருதயக் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, இருமல், வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை பெற்றது.
முள்சீதா பழத்தின் எடையானது 1 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கும். பழத்தின் உள்ளே வெண்மை நிறமாகவும் விதைகள் காப்பி விதைகள் போன்ற தோற்றத்துடன் காணப்படும். இம்மரமானது விதைகள் மூலமாகவும், ஒட்டுக் கட்டுதல் மூலமாகவும், புது இளம் செடியானது உற்பத்தி செய்யப்படுகிறது. வைட்டமின்கள் பி1, பி2, பி3 பி5, பி6, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், கார்போஹைட்ரேட், டிரிப்சின், லைசின் போன்றவையும் அடங்கியுள்ளன.
புற்றுநோயின் முதல், இரண்டாம் நிலையைத் தடுக்கவும், புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கவும், புற்று செல்களுக்கு ரத்த ஓட்டத்தைத் தடை செய்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கின்றன. முள் சீதாவின் இலைகள் மருத்துவ குணம் கொண்டிருப்பதால், அதனை கஷாயம் வைத்து பதப்படுத்தி டீ போன்ற பானமாக அருந்துகின்றனர். மேலும், இலைச்சாறானது மன அழுத்ததினைக் குறைக்கவும், தூக்கமின்மை, வாதம், கீழ்வாதம் போன்றவற்றுக்கும் மருந்தாக அமைகிறது. விதையினை அரைத்து முகத்தில் தடவி வருவதால் தோல் சுருக்கம், கரும்புள்ளி, முதிர்ச்சி தோற்றம் போன்றவற்றைத் தடுக்கிறது.
முள்சீதாவின் பூக்களை தேனில் இட்டு குடிப்பதால் சளி, நரம்புத் தளர்ச்சி, மார்பு வலி போன்றவை குறையும். மேலும், சுவாசம் எளிதாகவும், சளி, நாசித்தொற்று, சுவாச வீக்கத்தினையும் குறைக்கிறது. உடல் புத்துணர்ச்சியும், நினைவாற்றல் அதிகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும்.