பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர்.அரங்க நாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள எம்சிசி பள்ளி யில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்று போட்டி களில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், சிறந்த நூலகர் களுக்கு விருதுகளையும் வழங் கினார்.