தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கால்நடைகள் மற்றும் விலங்குகள் நலன் பேணுவதற்கென என தனியாக வாரியம் அமைக்கப்படாமல் இருந்தது. மத்திய விலங்குகள் நல வாரியமே இத்தகைய விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அமைப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தமிழகத்தில் உருவாக்கப்படவுள்ள விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக முதல்வர் பழனிசாமியும், துணைத் தலைவராகி மாநில கால்நடைத் துறை அமைச்சரும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.