தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிகளில், 'கே.ஜி.,' வகுப்புகள், 2019 ஜூனில் துவங்க உள்ளதால், மார்ச்சில், குழந்தைகளை சேர்க்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தரப்பு குழந்தைகளும், பிரி.கே.ஜி., - எல்.கே.ஜி., படிக்க வைக்க தேவையான வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மேற்கண்ட வகுப்புகள் துவங்கும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட பின் அட்மிஷன், ஆசிரியர் நியமனம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்க, தரமான கல்வியை அளிக்க, சமீபத்தில், 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு மாதிரி பள்ளி தேர்வு செய்யப்பட்டது. பள்ளிக்கு, 50 லட்சம் வீதம், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019 ஜூனில், வகுப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான அட்மிஷன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ளது.