சனி, 26 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
------------------—------------------------------
*பத்திரிக்கையாளர் கணேஷ் சங்கர் வித்யார்தி பிறந்த தினம் இன்று.*

*இந்திய பத்திரிக்கையாளர் கணேஷ் சங்கர் வித்யார்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பதேபூரில் பிறந்தார்.*

*இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த இவர்,*
*விடுதலை போராட்ட இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.*

*இவர் புகழ்பெற்ற பிரதாப் என்ற ஹிந்தி செய்தித்தாளின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் ஆவார்.*


*பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி லாகூர் மத்திய சிறையில் ஆங்கிலேயே அரசினால் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். அதற்கு அடுத்து மார்ச் 24ஆம் தேதி அவர்களது தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் முழு கடை அடைப்பை நடத்த முயன்றனர். தொடர்ந்து இந்து மற்றும் இஸ்லாமிய கும்பல்களால் நடந்த வன்முறை மற்றும் பதில் வன்முறையால் 400 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கான்பூரே சூறையாடப்பட்டது.*

*அதற்கடுத்த ஆறு நாட்கள் மார்ச் 30 வரை இரு மத வழிப்பாட்டு தலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த வன்முறையில்தான் ஐக்கிய மாகாண காங்கிரசு அமைப்பின் (United Province Congress Committee) தலைவரும் பகத்சிங்கின் நண்பரும் தீரமிக்க விடுதலை போராட்ட வீரருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) தன்னுடைய இன்னுயிரை இழந்தார். மார்ச் 25ஆம் தேதி வன்முறையினால் பற்றிக்கொண்ட நெருப்பிலிருந்து அப்பாவி இந்து மற்றும் முஸ்லீம் மக்களை காப்பாற்றும் முயற்சியின் போது அந்த துயரம் நடந்தேறியது.*