வியாழன், 31 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 31, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
 *இந்திரா காந்தி,  தனது இரண்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று(1984).*

*இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் மூன்றாவது பிரதமரும் ஆவார்.*


*அமிர்தசரஸ் பொற்கோயிலினுள் பதுங்கியிருந்த ஆயுதம் ஏந்திய காலிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்ற காரணத்தால் சீக்கிய மக்கள் இந்திரா காந்தி மீது கோபம் கொண்டிருந்தனர். அதன் விளைவாகவே இந்திரா காந்தி தனது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து புது டில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.*