அன்பானவர்களே! வணக்கம்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் ,பொட்டிரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளியில் எதிர்பாராத விதமாக கழிப்பறைச்சுவர் இடிந்து விழுந்தது.இரண்டு குழந்தைகள் காயமுற்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விரைவு நடவடிக்கைகளின் காரணமாக , தலையீடுகளின் காரணமாக,நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் முன் முயற்சிகளின் மூலமாக குழந்தைகளுக்கு உயர்மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்று நலமுடன் உள்ளனர். பள்ளியில் தொடர்ந்து கல்வி பயில்கின்றனர்.மேற்கண்ட எதிர்பாராத சம்பவத்திற்கு இதர அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், கல்வித்துறைத் அலுவலர்களும் பள்ளித் தலைமையாசிரியரை மட்டும் பொறுப்பாக்கி கைகழுவிக் கொண்டு விட்டு, தற்காலிகபணி நீக்கம் செய்துவிட்டு இப்பிரச்னையில் தங்களை எல்லாம் பரிசுத்தமாக்கிக் கொண்டுவிட்டனர். ஆனாலும் ஒரு குழந்தையின் பெற்றோர் பெருந்தொகையை குழந்தைக்கு உதவித்தொகையாக வழங்கிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.தமிழக கல்வித்துறை ரூ 50,000/உதவித்தொகையை காசோலையாக குழந்தைகளின் பெற்றோரிடம் அளித்துள்ளது. மேற்கண்ட விபத்துக்குள்ளான பெற்றோர் தொடுத்துள்ள வழக்கிற்கு எதிர்உரை அளிப்பதற்குக்கூட தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியரை நீதிமன்றத்தில் ஆசராக வேண்டுமென்றுச்சொல்லி சென்னையில் வைத்து வழக்குச்செலவுக்கென சற்றொப்ப ரூ12,000/ வரை எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் ஈவு இரக்கமற்ற வகையில் பணம் பறித்துள்ளார். இத்தகுவழிப்பறிக்கொள்ளைக்கு ஒப்பான செயலை எரும்ப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் துணிச்சலுடன் செய்திட பக்கபலமாக இருப்பது எது?எவர்?என்பது ஆராயப்படவேண்டும .
இத்தோடு இவ்வலுவலுரின் திருப்பணிகள் முடிந்திடவில்லை. தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியரை அலைபேசியில் பேசிடும் நேரங்களில் , வரவழைத்து நேரில் சந்திக்கும் பொழுதில் எல்லாம் ,ரூ30,000/கொடு என்று நச்சரிக்கும் காரியங்களை செய்யத்தவறுவதே இல்லை. இம்மாதிரியாக அப்பள்ளி ஆசிரியர்களிடமும் பணம் திரட்டி பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் தந்து வழக்கை முடித்துக்கொள்ளலாம்(!?) என்று அரியபெரிய காரியம் ஆற்றுகிறார்.
ஒரு நீதிமன்ற
வழக்கை ஒரு அரசு அலுவலர் சட்டப்படியாக அணுகிடல் வேண்டும் எனும் பாலபாடம் கூடாது அறியாது பள்ளியில் பெரியமனிதர்கள் என சிலரை அழைத்துவைத்தும்,ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க ஆசிரியர்கள் என சிலரை அடையாளம் கண்டறிந்து அழைத்துவைத்துக்கொண்டு பள்ளியை,கல்வியை கட்டபஞ்சாயத்து செய்திடும் இடமாக மாற்றிடுவதற்கு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலருக்கு எங்கிருந்து ?எவரிடமிருந்து? வழிகாட்டல் செய்யப்படுகிறது என்பதும் ஆராயப்பட வேண்டும்.
இத்தோடு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் திறன்மிகு நிர்வாகப்பணிகள் நின்றபாடில்லை. மேற்கண்ட பொட்டிரெட்டிப்பள்ளிக்கு எங்குமே கேட்டிறாத வகையில், கண்டிறாத வகையில் பள்ளியின் ஆசிரியர்கள் அறுவருக்கும் மாதத்திற்கு ஒருவராக பள்ளித்தலைமையாசிரியர் பொறுப்பேற்று பள்ளியை நடத்திட வேண்டுமென்று சுழற்சிமுறையில் தலைமையாசிரியர் பொறுப்பு வழங் கி எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மகாகவி பாரதியின் கனவை நனவாக்கியும் (?!)உள்ளார்.
மேற் கண்டவாறு சுழற்சிமுறை தலைமையாசிரியர் நியமனத்திற்கு எங்கிருந்து ?எவரிடமிருந்து ?ஆலோசனை வழங்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
மேலும் ,எரும ப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் பள்ளித்தலைமையாசிரியர் தற்காலிகபணி நீக்கத்தில் வைக்கப்பட்டுள் ளதால் பக்கத்து ஈராசிரியர் பள்ளியில் இருந்து மாற்றுப்பணி நியமனம் வேறு ஒன்று செய்துள்ளார்.
தற்காலிக பணிநீக்கப்பணியிடத்திற்கு தேவையற்ற வகையில் மாற்றுப்பணி நியமனம் செய்து ஈராசிரியர் பள்ளியை ஓராசிரியர் பள்ளியாக்கி ஈராசிரியர் பள்ளியை,
இப்பள் ளி மாணாக்கர்களின் கல்வியை சீரழிப்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர்
இம்மாதிரியாக, ஒருமாதிரியாக சட்டத்திற்கு,
விதிகளுக்கு,
செயல்முறைகளுக்கு, நடைமுறை மரபுகளுக்கு
ஒவ்வாதவைகளை , எதிரானவைகளை சுய ஆதாயம் தேடிக்கொள்ளும் பெருவிருப்பத்தோடு நிறைவேற்றிக்கொள்கிறார். ஆனால் சட்டப்படி வழங்கிட வேண்டிய வாழ்வூதியத்தை,பிழைப்பூதியத்தை மட்டும் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தலைமையாசிரியருக்கு பிடிவாதமாக அனுமதிக்காது இத்தலைமையாசிரியரை கொடுமைப்படுத்துகிறார். இத்தலைமையாசிரியரின் குடும்பத்தை நிர்கதியாக தெருவில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து இரசித்து வருகிறார். இத்தலைமையாசிரியரின் குடும்பத்தின் தீபாவளியை கறுப்புத்தீபாவளியாக,துக்க தீபாவளியாக்கி வருகிறார். மாதச்சம்பளமே இல்லாது ,வீட்டோடு முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்தலைமையாசிரியரிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குக்கு செலவுத்தொகை வாங்கிடத் தெரிகிறது.
வழக்கை முடிவுக்கு கொண்டுவர இலட்சத்தில் பணம் கொடு என்று அச்சுறுத்திடத் தெரிகிறது. சட்டவிரோதமான காரியமெல்லாம் மிகச்சரியாக திட்டமிட்டுச் செய்திட தெரியும் எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலருக்கு சட்டப்படியாக பிழைப்பூதியம் வழங்கிடத்தெரியாது;தெரியவில்லை (!?)என்று எவராவது உரைத்தால் ,அது தான் இக்கல்வியாண்டின்(2019-20) ஆகப்பெரிய நகைச்சுவைகளில் ஒன்றாக இருக்கும்(!?). பொட்டிரெட்டிப்பட்டி பள்ளி தலைமையாசிரியருக்கு பிழைப்பூதியம் கோரியும்,அநியாயமாக பழிவாங்கப்படுவோருக்கு
நீதி கோரியும் , எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் மீது தொடர்ந்து எழுந்துவரும் புகார்களின் முகாந்திரங்களைகணக்கில் கொண்டு,கல்வித்துறைக்கு அவப்பெயரைத்தேடித்தரும் , தவறிழைக்கும் அலுவலரை பாதுகாக்காது ஒழுங்குநடவடிக்கைகள் வலியுறுத்தியும் நாமக்கல்மாவட்டக்கல்வி அலுவலரிடம் இன்று(25.10.19) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,நாமக்கல் மாவட்ட அமைப்பு கோரிக்கை விண்ணப்பம் அளிக்கிறது. பொதுநன்மைக்கான,
அறத்திற்கான,
நீதிக்கான பெருவிருப்பம் கொண்ட நல்லோர்களின் ஆதரவினை தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்டமைப்பு வேண்டுகிறது. -முருகசெல்வராசன் .