வெள்ளி, 25 அக்டோபர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் வேண்டுகோளின் மீது விரைவு நடவடிக்கைகள் மேற்கொண்ட நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலருக்கு நன்றி பாராட்டுவோம்!



அன்பானவர்களே!வணக்கம். பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியருக்கு பிழைப்பூதியம்  இன்று வரை (25.10.19)
வழங்கப்பட வில்லை; விரைந்து  வழங்கப்பட வேண்டும் என்று என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பு  வேண்டுகோள் விடுத்தது. இவ்வேண்டுகோள் கிடைக்கப்பெற்றதும் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் விரைந்து தலையீடு செய்வதாக தெரிவித்தார். இத்தகு நிலையில்   எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் நேற்றைய (24.10.19)தேதியிட்டு,அதாவது முன்தேதியிட்டு பிழைப்பூதிய ஆணையை (தப்பித்துக்கொள்ளும் உள்ளுணர்வில்) பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியருக்கு அளித்துள்ளார். பிழைப்பூதிய ஆணையை மட்டும்  வைத்துக்கொண்டு  தீபாவளியை கடத்திட ; நகர்த்திட இயலாது என்பதை அனைவரும் நன்கறிவர்.
வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை எனும் வார்த்தையை மட்டும்  வைத்துக கொண்டு மிகச்சிறந்த  பில்டர் காபியை  சுவைக்கவே இயலாது என்பதை அனைவரும்  உணர்ந்திருந்தாலும், தற்போதைக்கு இவ்வளவே இயலும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள ளது என்பது தெளிவாகவே தெரியவருகிறது. பிழைப்பூதியமே தராமல் அலையடித்து, காயடித்து
தன்வழிக்கு கொண்டுவந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த  எருமப்பட்டிவட்டாரக் கல்விஅலுவலர் தற்போது முன்தேதியிட்டு பிழைப்பூதிய ஆணை வழங்கிஉள்ளார் எனில் யோசிக்க வேண்டியது நிறையவே உள்ளது. ஏனெனில் , நேற்றைக்கு(24.10.19) பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியரை அழைத்துப்பேசிய எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலகப் பிரிவெழுத்தர் தனக்கும்,தங்களது அலுவலகத்திற் கும்  பிழைப்பூதியம் வழங்க விதிகளில் இடமில்லை என்றும்,எங்களுக்கு அதிகாரமில்லை  என்றும் ,தற்காலிக பணிநீக்கம் செய்த மாவட்டக்கல்வி அலுவலரிடமே சென்று கேளுங கள். நீங்கள் மாவட்டக்கல்வி அலுவலருக்கு 50℅பிழைப்பூதியம் வேண்டி கடிதம் கொடுத்து நாமக் கல் மாவட்டக்கல்வி அலுவலரிடம் பிழைப்பூதியம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று  தலைமையாசிரியருக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் செய்துள்ளார் என்பதே யெதார்த்தமான உண்மைநிலையாகும்.
இத்தகு மனநிலையில், மமதைநிலையில் நேற்றைக்குச் சொன்ன பிரிவெழுத்தர் இன்றைக்கு ஆணை வழங்குவது என்பது ?!
எவ்வாறு?!எப்படி!?.
இதற்கெல்லாம் காரணம் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரின் சட்டப்படியான, விதிப்படியான  தலையீடே ஆகும். எது எவ்வகையாயினும் இத்தகு பணிமுன்னேற்றத்தை,இவ்வாறான பிழைப்பூதிய ஆணையை வரவேற்போம்!பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியரின் வங்கிக்கணக்கில் விரைந்து பிழைப்பூதியம் அனுமதிக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்போம்! பிழைப்பூதிய ஆணை வெளியாகிட  காரணமான நாமக்கல்மாவட்டக்கல்வி அலுவலருக்கு நன்றி பாராட்டுவோம்!
மிக்கநன்றி! -முருகசெல்வராசன்.,மாசெ., தநாதொப ஆசிரியர் மன்றம்.,
நாமக்கல்மாவட்டம்.