அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைஇயக்ககத்துக்கு இந்தியஆட்சிப் பணி அதிகாரி( அய்.ஏ.எச்.,)
நியமனம் செய்வதென்பது
கடந்த காலத்திலும் பேசப்பட்டது;
செய்யப்பட்டது.
அக் காலக்கட்டங்களில் எல்லாம் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் மிகவலுவாக வியூகம் அமைத்துப் போராடி முறியடித்த வரலாறு உண்டு.
சர்வசிக்ச அபியான் என்ற பெயரை அப்படியே இந்தி மொழியில் தமிழகத்தில் நுழைய அனுமதிக்காது அனைவருக்கும் கல்வித்திட்டம் என்று மாற்றம் கண்டவர்கள் தமிழ்நாட்டு தொடக்கக்கல்வி ஆசிரியப்பெருமக்கள்.
அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் (எச்பிடீ)மாநிலத் திட்ட இயக்குநராக இருந்த அய்.ஏ.எச்.,அதிகாரியை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநராக தற்காலிகமாக பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டக்
காலக்கட்டத்தில் மிகக்கடுமையான எதிர்ப்பினை
பதிவு செய்து தொடக்கக்கல்வி இயக்ககப்
பொறுப்பிலிருந்து அய்ஏஎச் அதிகாரியை விடுவிக்கச்செய்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்.
புதியவரைவுக்கொள்கைவரைவறிக்கை 2019ஐ தமிழகத்தில் எவ்விதமான விவாதமும் இன்றி விருப்பம் போல் அமல்படுத்துவதின் ஒருபகுதி இத்தகு அய்ஏஎச் நியமனம் என்பதே யெதார்த்தமான உண்மையாகும். தற்போது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் எதிர்க்கவேண்டியது; ஆட்சேபிக்க வேண்டியது அய்ஏஎச் நியமனத்தை என்பதைவிட , புதியகல்விக் கொள்கையின் வரைவறிக்கை 2019 என்பதே மிகச்சரியானதாகும்;
மிகப்பொருத்தமானதாகும்.இவ்விலக்குநோக்கி பயணிப்போம்!
தீரமுடன் படைநடத்துவோம்!
சங்கே முழங்கு!
-முருகசெல்வராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக