🔥தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 16.12.2019 பிற்பகல் 5.15 மணியளவில் ஆசிரியர் கோரிக்கைகள் சார்பாக சந்தித்து பேசப்பட்டது. இச்சந்திப்பில் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள்,மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார்,ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி ,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,மகளிர் அணி அமைப்பாளர் திருமதி வீ.மாலதி,உறுப்பினர்கள் திரு.காமராஜ்,சூசை அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சந்திப்பில் கீழ்க்கண்ட பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.ச.காமராஜ் அவர்களின் ஊக்க ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பத்தின் மீது விரைந்து ஆணை வழங்கிட வேண்டும்.மேலும் காமராஜ் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஆசிரியர்பயிற்சி பட்டயச் சான்று ஆகிய கல்வித்தகுதிக்கு 6 மாதங்களுக்கு முன் உண்மைத்தன்மை கோரி விண்ணப்பித்தும் சான்று பெறுவதற்கு காலதாமதத்தை ஏற்படுத்துவதை விடுத்து உண்மைத்தன்மை சான்று பெற்றுத்தர வேண்டும்.
தேர்வுநிலை/சிறப்புநிலை கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களின்மீது உரிய ஆணையினை விரைந்து வழங்கிட வேண்டும்.
தேர்வுநிலை/சிறப்புநிலை கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பணிப்பதிவேடு மாவட்டக் கல்வி அலுவலகம் சென்றுள்ளதாகக் கூறி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பங்களை திருப்பி அளிப்பதை விடுத்து ஒப்படைப்பு தேதி முதல் ஆணை வழங்கிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது.இதில் நிறைவான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
க.சேகர்.